முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு முகமூடிகள்

விக்ரம் இந்த பிக்பாஸ் பருவம் முழுக்க நிலைமாறாமல், சமநிலை தவறாமல், கொஞ்சம் கூட தன் இயல்புணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தார். அது ஒரு போலித்தனம். அதாவது விக்ரம் இந்த ஷோவுக்காக இப்படிச் செய்தார் என்று நான் சொல்லவில்லை - அதுவே அவர் இயல்பு, அவர் வேலையிடங்களில், பொதுவிடங்களில் இப்படியே இருப்பார், அவர் மனதில் என்ன ஓடுகிறதென நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்குத் தேவையான மிக முக்கியமான இயல்பு இந்த செயற்கைத்தனம். உள்ளுக்குள் எவ்வளவு எரிமலைகள் வெடித்தாலும் வெளியே எப்படி ரம்யா பாண்டியனும் அவரது குடும்பத்தினரும் எப்போது சிரித்த மேனிக்கு இருந்தார்களோ அப்படியே தான் விக்ரமும், இது இப்படியானவர்களின் அடிப்படை சுபாவம். இந்த கேமராக்கள் இல்லாவிடில் அந்தரங்கமான சூழல் கிடைத்தால் இவர்கள் வேறுவிதமாக இருப்பர். 24 மணிநேரமும் ஒருவரால் அப்படி இருக்க முடியுமா என்றால் முடியும் - ஆயுள் பூரா கூட இருக்க முடியும்.

அவ்விதத்தில் நாம் பார்த்தது விக்ரம் எனும் ஒரு மனிதனை அல்ல, ஒரு முகமூடியை.

அஸீம் ஒரு சகிக்கத்தக்க ஆளுமை அல்ல. ஆனால் அவர் பொதுவெளியில் தன்னை வெளிப்படையாக மிகையாக  முன்வைப்பார். மேலும் இந்த நிகழ்ச்சியின் அமைப்புக்கு ஏற்ப அவர் வில்லன் பாத்திரத்தில் பக்காவாகப் பொருந்திப் போனார். அவ்வாறே அவரைக் காட்டினார்கள், அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரது வெற்றி, நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ நான் இப்படித்தான் இருப்பேன் என்பதில் உள்ள நாணயம்! நிஜத்தில் அணுக்கத்தில் கேமரா இல்லாமல் அஸீம் இன்னும் சற்று கனிவாக மென்மையாக இருப்பார், தன் ரத்தக்கொதிப்பு அதிகமாகும் போது மட்டும் கொந்தளிப்பார் எனத் தோன்றுகிறது. அதாவது அவர் பிக்பாஸில் அணிந்ததும் ஒரு முகமூடிதான் - சிலரால் அப்படித்தான் தன்னை வெளிப்படுத்த இயலும். ஆனால் அது அவரது இயல்புக்கு நெருக்கமான முகமூடி!

அப்புறம் அவரது நார்ஸிஸம் - அதை ஊக்கப்படுத்தும் போக்கை அவரது அப்பாவின் மேடை உரையில் கவனித்தேன். சிறுவயது முதலே அப்படி நார்ஸிஸம் முன்னெடுக்கப்பட்ட ஒரு சூழலிலே அஸீம் வளர்ந்திருக்க வேண்டும். அப்புறம் அஸீமின் நார்ஸிஸம் எனக்கு சில முக்கிய தமிழ் எழுத்தாளர்களை நினைவுபடுத்தியது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.