முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானா - அரசியல் சரிநிலையின் போலித்தனம்


"பெண்கள் என்று வரும்போது "நீயா நானா" அரசியல் சரிநிலையின் போலித்தனத்துக்குள் சிக்கிக் கொள்கிறது, வேலைக்குப் போகாமல் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் அந்த வாழ்க்கை சௌகர்யமாக இருப்பதாலே அதைச் செய்கிறார்கள், காலையில் எழுந்து பயணம் செய்து மாலை வரை அலுக்க அலுக்க வேலை செய்து வியர்த்து நசுங்கி வீட்டுக்கு வந்து அப்படா என டீவி பார்த்து படுப்பதற்கு வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வது தானே சௌகர்யம்? அதுவும் குறைவான நபர்கள் கொண்ட, வீட்டு வசதிப் பொருட்கள் கொண்ட ஒரு வீட்டில்? அதே நேரம் இவர்களுக்கு சொந்த செலவுக்கு பணமில்லையே, சுயசார்பு இல்லையே எனும் வருத்தமும் உண்டு. ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, தாம் எடுத்த முடிவின் சாதக பாதகங்களை அனுபவிப்பவர்கள். அது மட்டுமல்ல, இவர்கள் படித்துள்ள படிப்புக்கு 1-2 லட்சம் மாத வருமானம் வருமெனில் வீட்டில் உட்கார மாட்டார்கள். உ.தா இந்த வரிசையில் ஒரு மருத்துவர் கூட  வீட்டு மனைவியாக இருக்க மாட்டார். இருக்க வேண்டுமெனில் அது கோடீஸ்வர குடும்பமாக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முடிவும் பொருளாதார அடிப்படையில், தத்தம் வசதிக்காக எடுக்கப்பட்டு என்னை வீட்டில வேலை பார்க்க விடல எனப் புலம்புவது என்ன நியாயம்? ஒரு முடிவை எடுத்து விட்டு ஏன் பழியை அடுத்தவர்கள் மீது போட வேண்டும்? இது தான் எதார்த்தம்!

இதில் எத்தனை பேர் தம் கணவன் "நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், நீ வேலைக்குப் போ" என்றால் ஒப்புக் கொள்வார்களா? பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உடனே உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். அப்படியென்றால் பெண்ணின் லட்சணம் என்ன?

விதிவிலக்குகள் இருக்கலாம் - ஆனால் வீட்டில் இருப்பதை விட வேலைக்குப் போவதே சுலபம், வசதி, லாபகரம் எனத் தெரிந்தால் இவர்கள் வேலைக்குப் போவது உறுதி.

இதையெல்லாம் எடுத்துக் கேட்காமல் சதா பெண்கள் என்றால் விக்டிம்கள் என உருட்டுவது என்ன நியாயம் நீயா நானா டீம்?" என நான் நேற்றைய ஷோவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பொறுக்க மாட்டாமல் ஒரு தோழரிடம் கேட்டுக் கொண்டிருந்த போது அவர் கிளிக்கிய படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...