Skip to main content

இளவரசனும் திவ்யாவும்: சில கேள்விகளும் விடைகளும்




கொல்லப்பட்ட அல்லது மரணத்தை நோக்கி துரத்தப்பட்ட இளவரன் மற்றும் திவ்யாவின் மன அமைப்புகளை நுணுகி அறிவதன் வழி காதல் / கலப்பு மணம் புரியப் போகும் ஆண்கள் சில முக்கிய பாடங்களை கற்க முடியும். 


இளவரசன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் அவர் திவ்யாவின் மீது எந்த குற்றசாட்டையும் வைக்க மறுக்கிறார். தனக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தொடுத்த மாமியார் தேன்மொழியை மிக நல்லவர் என வர்ணிக்கிறார். முழுக்க பா.ம.கவின் சதி என ஒரு பக்கமாய் மட்டும் பிரச்சனையை பார்க்கிறார். இது தன்னுடைய மணவாழ்க்கை பிரச்சனையை தனித்து அவர் பார்ப்பதன், உலக இயல்பை அறியாததன் கோளாறு தான்.
இந்தியாவில் எத்தனையோ இளம் ஜோடிகளை அவர்களின் பெற்றோர் பிரித்து வைக்கிறார்கள். குறிப்பாக மாமியார்கள் தாம் மாமனார்களை விட தம்பதிகளை பிரிப்பதில் ஆவேசம் காட்டுகிறார்கள். இதன் பாலியல் பரிமாணங்களை வேறொரு சமயம் விவாதிப்போம். திவ்யாவுக்கு சேர வேண்டிய வேலையை அவரது அம்மா பெறுவதற்காக கையெழுத்து பெறுவதற்காக இளவரசன் தான் தன் பைக்கில் மாமியாரை அழைத்து வந்து கொண்டு விடுகிறார். இதில் இருந்தே இளவரசன் ஒரு பத்தாம்பசலி என அறியலாம். சாமர்த்தியசாலிகள் அந்த வேலையை மாமியாருக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர் இதற்காக திவ்யாவை எந்த அளவிலும் வற்புறுத்தியதாக தெரியவில்லை. பொதுவாக இளவரசன் மிகையான நேர்மறை எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார். இதனால் தான் பல தம்பதிகளுக்கும் நடந்தது போல் தன் வாழ்விலும் மாமியார் தான் பிரதான எதிரி என உணராமல் விட்டு விட்டார். பொதுவாக கலப்பு மணங்களில் மருமகன் பவ்யமாக இனிமையாக நடந்து கொண்டால் அவர் பலவீனமானவர் என கருதி மட்டம் தட்டி பிரச்சனைகளை உருவாக்கி குடும்பத்தை பிரிக்க மாமனார் மாமியார் முயற்சி செய்வார்கள். இளவரசன் இந்த வலையில் எளிதில் விழுந்து விட்டார். அவரது இந்தியா டுடே பேட்டியின் படி மாமியாரை வேலைக்கான கையெழுத்து வாங்க அவர் அழைத்து வந்ததை அடுத்து தான் அவர் தனக்கு உடல்நலமில்லை என பொய் கூறி தன் மகளை அருகே அழைத்து வைத்துக் கொண்டார். இளவரசன் உடனே போக வேண்டாம் என கூறியதையும் மறுத்து திவ்யா போயுள்ளதும் கவனிக்கத்தக்கது. கையெழுத்து படலத்தின் போது அவர் கராறாக எதிர்த்திருந்தால் தேன்மொழிக்கும் திவ்யாவுக்கும் அவர் மீது கொஞ்சம் பயம் வந்திருக்கும். இத்தனை எளிதில் கணவனை மறுத்து விட்டு போகவும் அவர் துணிந்திருக்க மாட்டார்.
இங்கு நாம் இந்தியப் பெண்களின் உளவியல் பற்றி தெளிவாக ஒரு விசயத்தை உணர்ந்திட வேண்டும். இந்தியாவில் பெண்கள் சிறு வயதில் இருந்தே கடும் கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கவாதத்துக்கு பணியும் படி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒன்று தகப்பன், தாய், ஆசிரியர், கணவன், முதலாளி போன்று அதிகாரத்துக்கு எளிதில் அடிபணிவார்கள். அல்லது இவர்களில் யாராவது அதிகாரத்தை பிரயோகிக்காமல் இருந்தால் அவர்களை தம்முடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வர முயல்வார்கள். அதிகாரத்துக்கு பழகுபவர்களுக்கு வளர்ப்பு நாயின் மனோபாவம் வந்து விடும். ஒன்று நாய்க்கு நீங்கள் எஜமான் அல்லது நாய் உங்களுக்கு எஜமான். காதல் மணம் புரிகிறவர்கள் பொதுவாக ஜனநாயக மனோபாவம் கொண்டவர்கள் என்பதால் தம் மனைவியருக்கு சம உரிமை கொடுக்க விரும்புவார்கள். ஆனால் சிறுவயதில் இருந்தே அடிமையாக வளர்க்கப்படும் பெண்களோ திடீரென்று இந்த சுதந்திரத்துக்கு, படிநிலையற்ற ஜனநாயக உறவுக்கு தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது “எஜமானாக” இருக்க வேண்டும். கணவன் அந்த பாத்திரத்தை நவீன சிந்தனை காரணமாக எடுக்க மறுக்கையில் அவர்கள் அதிகார சமநிலை குழப்பத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்கள் கணவனை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த துவங்குகிறார்கள். இது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி கணவன் மீதான ஒரு மரியாதைக்குறைவான எண்ணத்தையும் வளர்க்கிறது. ஆனாலும் இந்த வகை பெண்களுக்கு வெறுமனே அதிகாரத்தை பிரயோகிப்பதுடன் திருப்தியடைய முடியாது; யாராவது “எஜமான்” இடத்தை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். விளைவாக அவர்கள் தம் தாயின் பக்கம் சாய்வார்கள். தாய் அல்லது தந்தை சொல்வதை கேட்டு கணவனை வெறுக்க அல்லது துச்சமாய் மதிக்க துவங்குவார்கள். மீண்டும் பெற்றோரின் கைப்பாவையாக மாறுவார்கள். இதனிடையே இளவரசனைப் போன்ற ஜனநாயகபூர்வாக இயங்க நினைக்கும் அப்பாவிக் கணவன்கள் மாட்டி அவஸ்தைப்படுவார்கள். சிலவேளை உயிர் விடுவார்கள்.
நான் கூறுவது திவ்யா விசயத்தில் முழுக்க உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சின்ன சதவீதம் உண்மையாக இருந்தாலும் அதிகாரத்தை உறவுநிலையில் கையாளத் தெரியாதது தான் இளவரசனின் குடும்பம் சிதைந்து உயிர் பறிபோனதற்கு ஒரு முக்கிய காரணம். இவ்விசயத்தில் திவ்யா இளவரசனை விட இரண்டு வயது மூத்தவர் என்பதையும் கவனிக்க வேண்டும். மூத்த பெண் என்கிற நிலையில் அவர் இளவரசனுக்கு குறைவான மதிப்பளித்திருக்கவும் சாத்தியம் உண்டு. வயதில் மூத்த பெண்களை காதலிக்கையில் ஒரு பக்கம் தம்மை ஆணின் விருப்பத்துக்கு உட்படுத்தியபடியே இன்னொரு பக்கம் அவர்கள் காதலனை ஆதிக்கம் செலுத்தவும் முயல்வதை தனிப்பட்ட முறையில் கவனித்திருக்கிறேன். அவர்களுக்குள் எப்போதுமே இவன் சின்னப் பையன் தானே என்கிற ஒரு துச்ச பாவம் இருந்து கொண்டிருக்கும்.
தன் தாயின் உயிரா கணவனின் உயிரா என வரும் போது திவ்யா தன் தாயை தேர்ந்ததன் உளவியலை கவனிக்க வேண்டும். இப்படியான சிக்கலான தேர்வு வரும் போது நாம் பொதுவாக நல்லவர்களை அல்ல வலிமையானவர்களை தான் தேர்ந்தெடுப்போம். இது ஒரு ஆதிமனித மனோபாவம். திவ்யா தன் அம்மாவை அல்லது சொந்த சாதி சார்ந்த ஆதரவாளர்களை தான் வலிமையான தரப்பாக கருதி இருக்கிறார். இப்படியான நெருக்கடி மிக்க கட்டங்களில் மனிதர்கள் அன்பு, கருணை எனவெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
இளவரசனின் காதல் தோல்வி மற்றும் மரணத்தில் பிறருக்கு உள்ள முக்கிய பாடம் காதலில் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்பது. காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது வாடிக்கையாக நாட்டில் இளவரசன் தன் மனைவி தன்னை விட்டு சென்று தனக்கு எதிராக வழக்கு தொடுப்பதை அனுமதித்து தனக்கு எதிராக மீடியாவில் பேசுவதையும் பார்த்த பிறகும் அவளைப் பற்றி சின்ன பழி கூறவும் தயங்கி உள்ளான். இதுவே இளவரசனின் இடத்தில் வேறு ஆண்கள் இருந்திருந்தால் ஒன்று திவ்யாவின் நிலை சின்னாபின்னமாகி இருக்கும். அடுத்து அவர் அத்தனை எளிதாக பா.ம.கவின் வசம் அகப்பட்டிருக்க மாட்டார். எந்த அளவுக்கும் சென்று திவ்யாவை பதுக்கியோ அடைத்தோ வைத்திருப்பார்கள். இப்போதும் இளவரசனின் மரணத்துக்கு பிறகு அவரது அப்பா திவ்யாவுக்கு தான் பொறுப்பேற்று மறுமணம் பண்ணி வைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். தன் மகனின் மரணத்தில் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்த அப்பாவித்தனம் தான் அவரிடம் இருந்து இளவரசனுக்கு சென்று அவன் உயிரை காவு வாங்கியிருக்கிறது.
ஒரு திருமண உறவில் அதிகாரத்தின் சாட்டை மிக நுட்பமாக மறைமுகமாக சொடுக்கிக் கொண்டே இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அது நம் கையை விட்டு போகாமல் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சாட்டை கைதவறினால் தோல்வி அல்லது மரணம் நிச்சயம். மற்ற மனைவிகளை விட காதல் மனைவிகள் இன்னும் ஆபத்தானவர்கள். அன்பும் ஆசையும் ஒரு புறம் மனதுக்கு ஒரு கடுமையான வெறுப்பையும் உண்டு பண்ணுகிறது. இது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனதில் இருந்து அவர்களை இயக்குகிறது. மிக அதிகமாக நேசிக்கிறவர்கள் தான் இன்னொரு புறம் தம்மையே அறியாமல் நம்மை மிக அதிகமாக வெறுக்கவும் செய்கிறார்கள். அந்த வெறுப்பு ஒரு குண்டாந்தடியாக மாறி உங்கள் மண்டையை பிளக்கவும் கூடும். அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள நாம் அதிகாரத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துவது அவசியம்.

Comments

Muthalib said…
இருநூறு சதம் உண்மை. உங்களை இருக்கித்தழுவி கண்ணீர் விடணும் போலுள்ளது
Unknown said…
Nice Post, I agree the facts told.
Unknown said…
http:http://thiruttusavi.blogspot.in///thiruttusavi.blogspot.in/
Unknown said…
yes it is absolutely correct that women repose more faith on power and domination in reverse will fetch them security and comfort ,they believe and how they reject love...in most cases love is not at all proposed by women it is only men do that and that is how corruption is an accepted value addition in arranged marriages.no divorce takes place when husbands are corrupt.
poornam said…
மிக அருமையான பதிவு. நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. கொஞ்சம் தந்திரமும் வேண்டும். கடிக்கும் பாம்பாக இல்லாவிட்டாலும் சீறும் பாம்பாக இருந்தால் தான் பிழைக்க முடியும்.
என் வாழ்வில் சில சம்பவங்கள் நடந்த போது புரியாது விழித்தேன். இந்த பதிவை படித்த பிறகு தான் அனைத்து காரணங்களும் புரிந்தது. *** காதல் மணம் புரிகிறவர்கள் பொதுவாக ஜனநாயக மனோபாவம் கொண்டவர்கள் என்பதால் தம் மனைவியருக்கு சம உரிமை கொடுக்க விரும்புவார்கள். ஆனால் சிறுவயதில் இருந்தே அடிமையாக வளர்க்கப்படும் பெண்களோ திடீரென்று இந்த சுதந்திரத்துக்கு, படிநிலையற்ற ஜனநாயக உறவுக்கு தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது “எஜமானாக” இருக்க வேண்டும். கணவன் அந்த பாத்திரத்தை நவீன சிந்தனை காரணமாக எடுக்க மறுக்கையில் அவர்கள் அதிகார சமநிலை குழப்பத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்கள் கணவனை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்த துவங்குகிறார்கள். இது உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி கணவன் மீதான ஒரு மரியாதைக்குறைவான எண்ணத்தையும் வளர்க்கிறது. ஆனாலும் இந்த வகை பெண்களுக்கு வெறுமனே அதிகாரத்தை பிரயோகிப்பதுடன் திருப்தியடைய முடியாது; யாராவது “எஜமான்” இடத்தை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். விளைவாக அவர்கள் தம் தாயின் பக்கம் சாய்வார்கள். தாய் அல்லது தந்தை சொல்வதை கேட்டு கணவனை வெறுக்க அல்லது துச்சமாய் மதிக்க துவங்குவார்கள். மீண்டும் பெற்றோரின் கைப்பாவையாக மாறுவார்கள்.*** பத்து வருடம் முன்பே இந்த உளவியல் காரணம் எனக்கு தெரிந்திருந்தால் என் வாழ்க்கை இன்னும் இனித்திருக்கும். நல்ல பதிவு. மிக்க நன்றி.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...