Skip to main content

Posts

Showing posts from March, 2016

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எனது இம்மாத அம்ருதா கட்டுரை பற்றி சுரேஷ் கண்ணன்

அம்ருதா ஏப்ரல் இதழில் நண்பா் அபிலாஷ் “கருணை போலியானதா?” என்றொரு கட்டுரை எழுதியுள்ளாா். சுவாரசியமான கட்டுரை. மனிதா்கள் பின்பற்றும் விழுமியங்களில் ஒன்றான கருணை என...

இடதுசாரிகளும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்?

(மார்ச் மாத “வெற்றி வேந்தனில்” வெளியான கட்டுரை) இது பற்றி ஆர்ச்சிஸ் மோகன் Business Standard இணையதளத்தில் எழுதிய ஒரு நல்ல கட்டுரையை படிக்க நேர்ந்தது. வழக்கமாய் இப்பிரச்சனையை வலது-இடது தரப்புகளுக்கு இடையிலான புகைச்சலின் உச்சகட்ட மோதல் என்கிற தோரணையில் தான் ஊடகங்களில் விளக்குவார்கள். ஆனால் இக்கட்டுரையாளர் இந்த பிரச்சனைகள் பா.ஜ.காவால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரச்சார வடிவம் என்கிறார். எதற்காக? அதற்கு முன், கடந்த ஒரு வருடத்தில் நடந்த இந்துத்துவா சர்ச்சைகளை மனதில் ஓட்டிப் பாருங்கள். எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது, மாட்டுக்கறியை முன்வைத்து இஸ்லாமியரை கோமாதாவை தின்கிறவர்கள் என கட்டமைக்க உருவாக்கப்பட்ட சர்ச்சை இவை எல்லாம் ஒரு குறுகின காலத்தில் தேசம் முழுக்க அங்கங்கே பா.ஜ.கவின் உதிரி துணைக்கட்சியின் குட்டித்தலைவர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. சில நாட்களில் இந்தியா முழுக்க இப்பிரச்சனைகளால் கொழுந்து விட்டெரியும் தோற்றம் உருவானது. பா.ஜ.க குட்டித்தலைவர்களும் குண்டர்படையும் யாராவது ஒருவரை தாக்குவதோ கொல்வதோ இப்பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமையும். அல்லது ஒரு மதக்கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்படும...

வேகம்

நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு அருண் என ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு கணினியில் ஆர்வம் அதிகம். கணினியை கழற்றி பொருத்தும் அளவுக்கு சுயமாக கற்றுக் கொண்டவர். நான் அவருடன் கணினி, இணையம், மென்பொருள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒருநாள் எந்த இணைய சேவை வேகமானது என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் “என் வீட்டு கணினியில் ஒரு இணையதளத்தை திறப்பதற்கே அரைநிமிடம் எடுக்கும். இணைப்பை சொடுக்கி விட்டு நடுவில் வேறு வேலை பார்ப்பேன். திறந்ததும் அதை கவனிப்பேன்”. நான் கேட்டேன் “வேகமான இணையம் இருந்தால் நன்றாய் இருக்குமல்லவா? காத்திருக்க வேண்டியதில்லையே?”. அவர் சொன்னார் “வேகத்தில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்களுக்காய் காத்திருக்க தயாராய் இருக்கிறோம். டிராபிக்கில், அரசு அலுவலகங்களில், காண்டீனில் சாப்பாட்டுக்கு, இடத்துக்கு காத்திருக்கையில் தாமதமாகும் போது நாம் எரிச்சலாவதில்லையே. அப்படி இருக்க ஏன் ஒரு இணையதளம் நொடியில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்? அரைநொடியில் என்ன இழந்து விடப் போகிறோம். அந்த இடைவெளியில் வேறெதையாவது கணினியில் செய்யலாமே?”.

மழைவெள்ளம்: ஒன்றிணைந்த மக்களும் கார்ப்பரேட் அரசியலும்

(பிப்ரவரி மாத உயிர்மையில் வெளியான கட்டுரை) வெள்ளம் சென்னையின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த போது இந்த நகரத்து மக்கள் குழம்பிப் போயினர். ஒரே நாளில் நாம் முப்பது வருடங்களுக்கு பின்னால் நகர்ந்தோம். மின்சாரமும் தொலைதொடர்பும் அற்ற ஒரு கிராமமாக சென்னை மாறிப் போனது. இந்த நகரமும் அது அளித்த வசதிகளும் உத்தரவாதங்களும் எவ்வளவு துர்பலமானவை என மக்கள் உணர்ந்தார்கள். மக்கள் பரஸ்பரம் கைகோர்த்துக் கொண்டு இணைந்து நிற்கத் துவங்கினார்கள். என் குடியிருப்பில் இதுவரை என்னிடம் பேசவே தலைப்படாதவர்கள் கூட ஆர்வமுடம் வந்து விசாரித்துப் போயினர். மக்களிடம் உள்ள இறுக்கம் கலைந்து நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொருவரும் மனிதத் துணைக்காக ஏங்கினர். நான் போனிலோ இணையத்திலோ அதிகம் அரட்டை அடிக்கிறவன் அல்ல. எனக்கு தனிமை பிடிக்கும். ஆனால் அந்த தனிமையின் போது மக்கள் நம்முடன் இருக்கிறார்கள் எனும் உத்தரவாதம் இருந்தது. அது தான் டிசம்பர் மாத வெள்ளத்தின் போது நொறுங்கிப் போனது.

ஆண்-பெண் உறவில் சமத்துவம் தேவையா?

(  பர்தா அணிவதன் சுதந்திரம் குறித்த எனக்கு ஜீவிக்குமான விவாதத்தின் அடுத்த பதிவு இது. ) வணக்கம் அபிலாஷ் ,         நீங்கள் இந்த விவாதத்தை உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்ததை பார்த்ததும் மீண்டும் ஆர்வம் தொற்றிகொண்டது . விவாதத்தை தொடரலாம் .       பர்தாவை விரும்பித்தானே அணிகிறார்கள் என்கிறீர்கள் . அந்த விருப்பம் அவர்களுடையது தானா என்பது தான் இங்கு கேள்வி ...  நண்பகள் ஷேர் ஆட்டோவில் ஒருபெண் அந்த இஸ்லாமிய பெண்ணிடம் எப்படிங்க இத போட்டு இருக்கீங்க புழுக்கமா இல்லையா என்று கேட்டார் .. ஆமாங்க புழுக்கமா தான் இருக்கு ஆனா என்ன பண்றது என்றார் . அந்த பெண்ணுக்கு பர்தா அணிவது ஒன்றும் புதிதல்ல . அவர் எத்தனையோ மே மாதங்களை பார்த்திருப்பர் , அவருக்கு அதில் கஷ்டம் எதுவும் இல்லை . அந்த தருணத்தில் அதை அணிவது அவருக்கு வசதிப்படவில்லை . ஆனால் அவரால் அதை கழட்டி வீசமுடியாது . இது அவர் விருப்பம் தானா ?( இது சமரசம் என்றால் இந்த சமரசத்தை நாம் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறோம் ?)

சாருவின் வாசகர்கள்

நமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.

இடமும் வலமும்

கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான்.

மகிழ்ச்சியை அளப்பதன் சிக்கல்

உலக மகிழ்ச்சி வரிசை 2016 அறிக்கை படி முதலில் இருப்பது ஸ்வீடன். நான் சமீபத்தில் கொல்கொத்தா சென்றிருந்த போது  ஸ்வீடனில் இருந்து ஒருவரை சந்தித்தேன். அவரிடம் "உங்கள் ஊர் ப...

சாதியை கடந்தவர்கள் இருக்கிறார்களா?

ஆணவக்கொலைகளை சாடுவது எளிது, ஆனால் சாதியை கடப்பது அது போல் சுலபம் அல்ல என கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு ஒன்று பார்த்தேன். எனக்கு இது பற்றி இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன.

பர்தாவும் பெண்ணுரிமையும் (2)

என்னுடைய கட்டுரையான “பர்தாவும் பெண்ணுரிமையும்” பற்றி தோழி ஜீவிக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு உரையாடல் இது. நல்ல ஒரு விவாதப் புள்ளியை தொடுவதால் இங்கு பகிர்கிறேன். வணக்கம் அபிலாஷ் ,        உங்கள் ' பர்தாவும் பெண்ணுரிமையும் ' கட்டுரையை படித்தேன் . எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஓடிகொண்டிருக்கும் ' இஸ்லாம் மற்றும் பெண்ணுரிமை ' பற்றிய கேள்விகளை கேட்டு விடலாம் என்று இதை எழுதுகிறேன் .                 முதலில் உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன் . ஆம் பர்தாவும் அணிவது அடிமைதனமும் இல்லை , ஜீன்ஸ் அணிவது விடுதலையும் இல்லை . பர்தா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் . ஆனால் இதை ஏன் நம் மதம் நம்மை அணிய சொல்கிறது என்ற கேள்வி எழாமலே அதை அணிந்துகொல்வதிலும் , அது எங்களுக்கு ஒரு தடை இல்லை என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை ..

”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” பற்றி அன்பரசன் செல்வராஜ்

”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” மற்றும் என் எழுத்து பற்றி முகநூலில் அன்பரசன் செல்வராஜ் எழுதியதன் மீள்பதிவு இது. நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது .   Abilash Chandran , சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன் . உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog( http://thiruttusavi.blogspot.in/?m=1 )- சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது . படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்க ெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன் ( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது ) அதன்பின் அவரின் சினிமா ( குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000 க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள் ,...