முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவின் வாசகர்கள்

நமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.

 நேற்று சாரு வாசகர் வட்டத்தின் இரண்டு பெரிய தலைகள் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த போது எனக்கு இப்படி பட்டது: “இவர்கள் அவரது குறைகளையும் பிரச்சனைகளையும் தெரிந்தே அவரை நேசிக்கிறார்கள். இதற்குள் சந்தர்ப்பவாதமும் சுரண்டலும் இருக்கிறது. அதேநேரம் ஆத்மார்த்தமான பிரியமும் இருக்கிறது. அவர் ஒரு father figure ஆகவும் நண்பராகவும் இவர்களுக்கு இருக்கிறார்.”
 சு.ரா வாசகர்களை சமமான நண்பனாக நடத்துவார். அந்த உறவு சீராக நிதானமாக அக்கறை சார்ந்ததாக இருக்கும். சாருவை போன்றவர்கள் வேறு வகை. வாசகர்களை கோழி தன் குஞ்சுகளை கொண்டு திரிவது போல் அழைத்து போவார். கொத்தி விரட்டுவார். பாதுகாக்கவும் செய்வார். இதை அவர்கள் தெரிந்தே கூட இருக்கிறார்கள்.
சாருவின் வாசக நண்பர்களில் ஒ.பி.எஸ், சசிகலா, நத்தம் போல் ஒரு உள் அதிகார வட்டம் உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த அடிக்கடி சாரு யாரையாவது போட்டு மிதிப்பார். மிதிபடுகிறவர்களுக்கு சாரு ஏன் இப்படி பண்ணுகிறார் என தெரியும். அவர்கள் அவரது கோபம் ஆறும் வரை, அரசியல் வானம் தெளியும் வரை பொறுமையாக இருக்கிறார்கள். நேற்று நான் இவர்கள் இதையெல்லாம் தெரிந்தும் அவரோடு இணக்கமாக இருக்கிறார்கள் என அறிந்து வியந்தேன். இது சமத்துவமான உறவு அல்ல. எழுத்தாள-வாசக உறவு இப்படி இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சிலநேரம் பிழைகளில் நிறைய உண்மை இருக்கும். இந்த பிழையான உறவில் பூரணமான கனிந்த அன்பு உள்ளது. சமத்துவமாகவோ சமத்துவமற்றோ எப்படியும் நேசிக்கலாம் என்பது தானே சுதந்திரம்.

மற்றவர் பார்வையில் இருந்து உலகைப் பார்க்கும் போது மனம் சட்டென விரிகிறது. 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Good observation. Believe that this view doesnt get narrowed down only to Charu and need more view on other writers too.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.