(கவஞர் அகரமுதல்வனின் முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு மீள்பதிவு)
எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் "கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" துப்பறியும் நாவல் வாசகனுக்கு சிறந்த அனுபவத்தைத் தரக்கூடியது. நாவலின் களமாக வடிவம் கொண்டிருக்கும் கொலைகள் பற்றிய விசாரணைகள் துப்பறியும் தீவிரத்தோடு நிகழவில்லை என்ற போதிலும் அது வாசகனை அலைக்கழிக்கும் எழுத்து யுக்தியாக விளங்கிக் கொள்கிறேன். துப்பறிதல் எனும் சொல்லாடலில் எவ்வளவு பெரிய உழைப்பும் உளச்சிதைவும் அடையவேண்டும் என்பதற்கு நாவலின் முதன்மைப் பாத்திரம் சிறந்த எடுத்துக் காட்டு. பெண்ணுடல் மீதான பாலியல் சுரண்டல்களையும் குடும்பங்களில் தம் மிக நெருக்கமான உறவுக்காரர்களால் பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாகும் பெண்ணுடல்கள் குறித்தும் நாவல் கரிசனம் கொள்கிறது. அபிலாஷின் மொழி, சம்பவ வர்ணிப்புகளில் கோலோச்சுகிறது.வாழ்த்துக்கள் அபிலாஷ்.
Comments