“கடலும் கிழவனும்” நாவல் பற்றி அருள் ஸ்காட் எழுதிய
இந்த பதிவை ரசித்தேன். அந்த நாவலில் மஞ்சள் நிறம் எப்படி ஒரு குறியீடாக செயல்படுகிறது
என அவர் சுட்டுவது எனக்கு புது புரிதலை அளித்தது. மஞ்சள் நோய்மையின், மரணத்தின் நிறம்.
எழுபது, எண்பதுகளின் தமிழ் கவிதையில் இந்நிறம் அடிக்கடி வரும். இந்நாவலில் கடலில்,
கீழவனின் உணவில் எங்கும் மஞ்சள் வியாபிக்கிறது. இன்னொரு விசயம் கடலை நெருங்கிப் பார்க்கையில்
அது பழுப்பு நிறமானது என்பது. ஆக இது இயல்பாகவும் கதையில் பொருந்துகிறது. ஒரு படைப்பை
திரும்ப படிக்கையில் அது குறித்து பேசுகையில் சட்டென ஒரு புதிய அவதானிப்பு கிடைப்பது
சிலாக்கியமானது. இந்நாவலையும் நண்பர்கள் கூடி வாசித்து உரையாடும் போது தான் அருளுக்கு
இந்த கருத்துக்களும் தூண்டுதலும் கிடைக்கிறது. இலக்கியம் தனியாய் வாசிக்க வேண்டியதல்ல.
சினிமா, நாடகம் போல் கூட்டமாய் அமர்ந்து ரசிக்க வேண்டிய ஒன்றும்
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்