எனது முதல் சிறுகதை தொகுப்புக்காக
இதுவரை எழுதின கதைகளில் நான்கு கதைகளை விடுத்து மிச்சத்தை தொகுத்துப் பார்த்தால்
19 கதைகள் வந்தன. ஆனால் மொத்த பக்கங்கள் 420. இவ்வளவு பக்கங்கள் சிறுகதைகள் மட்டுமே
எழுதியிருக்கிறேன் என நான் சத்தியமாக நினைக்கவில்லை.
என் பதிப்பாளரை அழைத்து இந்த அதிர்ச்சித்
தகவலை தெரிவித்தேன். அவரும் முதலில் நம்பவில்லை. “சரி எவ்வளவு பக்கங்களுக்குள் தொகுத்தால்
சரியாக இருக்கும்?” எனக் கேட்டேன். என் பார்வையில் மிகச் சிறந்த கதைகள் என படுகிறவற்றை
தொகுக்க சொன்னார். அத்துடன் பிரசுரமான போது கவனம் பெற்றவை, தனிப்பட்ட முறையில் எனக்கு
முக்கியமானவை என சேர்த்து மதிப்பிட்டு ஒன்பது கதைகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். தலைப்பு:
“அப்பாவின் புலிகள்”