Skip to main content

Posts

Showing posts from August, 2017

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரை பற்றி ஜெ.பி ராஜேந்திரன்

ஜெ.பி ராஜேந்திரன் லண்டனில் வசிக்கும் உளவியலாளர். நுண்மையான வாசகர். தனித்துவமான பார்வை கொண்டவர். அவர் எனது ”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரைக்கு ஒரு சிறப்பான எதிர்வினையை முகநூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதையும் அதன் மொழியாக்கத்தையும் கீழே தந்துள்ளேன்: I quite like this article  Abilash Chandran .. fairly thorough and comprehensive 360 degree look at Prajna - the transcendental wisdom and its ramifications in linguistics. There is an extrapolation of Space and time continuum and it's association to essence of meaning in language you have touched upon. I kept thinking about this for a while to realise it is the same concept of Kant's 'Thing in itself'. Not sure if you kept this in back of your mind while dealing with this. Anyway helped me to refresh my thinking on the same. Thought I would highlight the same to you. Also NLP or neurolinguistics has many a practical applications to debride the attached emotions to understandings based on these principles too. Just...

நீட் சர்ச்சை: ஏன் objective தேர்வுகளையே ஒழிக்கக் கூடாது?

நீட் தேவையா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மெக்காலே காலத்து கல்வி முறையின் நீட்சியான objective தேர்வுகளை நாம் ஏன் ஒழித்துக் கட்டக் கூடாது? நீட் தேர்வுகளைப் பற்றி தீவிரமாய் விவாதிக்கும் பலரும் அத்தேர்வுத்தாளைக் கண்டார்களா எனத் தெரியவில்லை. நான் பார்த்தேன். நல்ல நினைவுத்திறன் கொண்ட ஒருவர் ஆறு மாதங்கள் இருந்து படித்தால் நிச்சயம் வெல்ல முடியும் (மருத்துவ ஆர்வமில்லாத என்னால் கூட முடியும் எனத் தோன்றுகிறது). இரண்டு திறன்கள் தான் பிரதானமாய் சோதிக்கப்படுகின்றன: 1) நினைவுத்திறன் 2) தர்க்க சிந்தனை. தொடர்ந்து உருப்போட்டால் முதலாவதையும் பயிற்சி மூலம் இரண்டாவதையும் ஒருவர் பெற முடியும். இந்த இரு திறன்களுக்கும் ஒரு மருத்துவருக்கும் என்ன சம்மந்தம்? ஒரு நல்ல மருத்துவருக்கு நினைவுத்திறன் அவசியமே. புரிகிறது. ஆனால் அது மட்டுமே அல்லவே. ஒரு மருத்துவருக்கு வேறு பல முக்கியமான இயல்புகளும் திறன்களும் அவசியம். ஆனால் நினைவுத்திறனை மட்டுமே அடிப்படையான தகுதியாய் கொண்டு இத்தேர்வு நடக்கிறது (நம் நாட்டின் எல்லா தகுதித்தேர்வுகளையும் போல). உதாரணமாய், நீட் தேர்வில் வரும் ஒரு சாம்பிள் கேள்வியை கீழே தருகிறேன...

பிரக்ஞை என்றால் என்ன?

டாம் ஸ்டாப்பர்ட் எனும் நாடக ஆசிரியரின் படைப்புகளில் பிரக்ஞை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் தோழி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். பிரக்ஞை பற்றி தான் படித்த பல்வேறு நூல்கள், கருத்துக்கள், சர்ச்சைகள் பற்றி குறிப்பிட்டார். பிரக்ஞை பற்றி பல நூற்றாண்டுகளாய் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால் இன்னும் கூட பிரக்ஞையை சுருக்கமாய் தெளிவாய் எளிதாய் யாராலும் விளக்க முடியவில்லை. பிரக்ஞை பற்றின விளக்கங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.  

வாழத் தகுதியற்ற ஊர்

பல வருடங்களுக்கு முன்பு “கற்றது தமிழ்” வெளியான போது சுஹாசினி ராமை பேட்டி எடுத்தார். அதில் ராம் இவ்வாறு சொன்னார்: “வரும் சில ஆண்டுகளில் ஓட்டலில் ஒரு கோப்பை காப்பி குடிப்பதற்கு நாம் ஒரு மூட்டை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல நேரும்.” பணவீக்கம் பற்றி ராம் சொன்ன ஆருடம் மிகையானது என எனக்கு அப்போது தோன்றியது. சமீபத்தில் fullyfilmy யூடியூப் பக்கத்தில் ராமின் பேட்டியில் மீண்டும் இதே விசயத்தை லேசாய் தொட்டுப் பேசினார். பேட்டியாளர்: “சார் உங்களுக்கும் சர்வைவல் பிரச்சனை இருக்கிறதா?” ராம்: “ஆமாம். அன்றாட செலவுகள், வாடகை எல்லாவற்றையும் சமாளிப்பது இப்போதும் பெரும்பாடு தான். யாருக்குத் தான் சர்வைவல் பிரச்சனை இன்று இல்லை? கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் தான் இருக்கிறது. ஆனால் என்னையும் உங்களையும் போல் இராது. அவர் அளவில் வேற லெவலில் அது இருக்கும். ஆனால் அவருக்கும் இன்று பணப்பிரச்சனை உள்ளது.”

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 2: நான் பாரபட்சமான விமர்சகனே!

பொதுவாசகன் எனும் பொய் “பொது வாசகன்” எனும் பிம்பம் நவீனத்துவாதிகளால் பொய்யாக கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. அப்படி ஒரு ஆள் வானத்தின் கீழ் எங்குமே இல்லை. ஒரு இலக்கியப் படைப்பின் சாரத்தை, எந்த சார்பும் இன்றி, சார்புநிலையின் “இழுபறிகள்” இன்றி, உறிஞ்சும் ஒரு அன்னப்பறவை வாசகன் எங்குமே இல்லை. ஏனென்றால் ஒரு நாவலுக்கோ கதைக்கோ அப்படி ஒரு மையம் - ஒரு சாரம் - இல்லை.  என் நாவல்களுக்கு / கதைகளுக்கு அப்படி ஒரு சாரம் உள்ளதாய் நான் நிச்சயம் கற்பனை பண்ணிக் கொள்கிறேன். ஏனென்றால் அப்படி செய்யாமல் என்னால் அவற்றை எழுதி விட முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எதிர்பார்க்கும் சாரத்தை என் வாசகன் தீண்டுவதில்லை, உணர்வதில்லை, எடுத்து சுவைப்பதில்லை என்பதையும் அறிகிறேன். ஏமாற்றமடைகிறேன். அப்படி ஏமாற்றமடைவது பற்றி எனக்குள் நானே சிரித்துக் கொள்வதும் உண்டு. ஆனால் அதுவே எந்த இலக்கியவாதியும் விதியும்.

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 1: இலக்கிய குழு அரசியலில் தவறில்லை!

இலக்கிய விமர்சகன் ஏன் மதிப்பெண்கள் இடக்கூடாது என்பது பற்றின எனது முந்தின கட்டுரையை ஒட்டி நண்பர் கோகுல் பிரசாத் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பி இருந்தார்: “சில இலக்கிய குழுக்கள் சில இலக்கிய படைப்புகளை அதீதமாய் விதந்தோதி உடனடி பரபரப்பை உண்டு பண்ணி ‘நல்லாத்தான் இருக்கும் போல’ என தற்காலிகமாக நம்ப வைத்து அந்தஸ்தை உருவாக்கி விடுகிறார்களே! அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவற்றை மறுத்து திரையை விலக்கி உண்மையை நிறுவ வேண்டியது விமர்சகனின் கடமை இல்லையா?”

மதிப்பெண் போடும் வியாதி

தமிழ் விமர்சனங்களில் நான் வெறுக்கும் வரி ஒன்று உண்டு: “ஆனால் இப்படைப்பு இலக்கியமாகுமா எனக் கேட்டால்… ” என ஆரம்பிப்பார்கள். ஒரு படைப்பு இலக்கியமாகுமா என ஏன் இவ்வளவு மெனெக்கெட்டு யோசிக்க வேண்டும்? ஏன் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க உங்களுக்கு இவ்வளவு அவசரம்? அதென்ன தேர்வுத் தாளா?

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது: தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

தமிழில் கோட்பாட்டு எழுத்திற்கு இன்றுள்ள இடம் என்ன?

இன்றைய வாசகர்கள், இளம் எழுத்தாளர்களுக்கு கோட்பாட்டு எழுத்தாளர்கள் மீது ஒரு அலுப்பு, இளக்காரம் உள்ளதை அறிவேன். அவர்கள் இருண்மைவாதிகள், அராஜகவாதிகள், மொழியை திருகி இடியாப்பமாக்கினார்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன. வேற்று கலாச்சார பண்பாட்டு, தத்துவ கருத்துக்களை அரைகுறையாய் புரிந்து கொண்டு தமிழில் சாயம் கலையாமல் இறக்குமதி செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் சில நியாயமானவை தாம். கோட்பாட்டு எழுத்து பீதியூட்டுகிறது என்பது உண்மையே. ஆனால் அது தமிழில் மட்டுமல்ல. ஆங்கிலத்திலும் அவ்வாறே. பொதுவாகவே கோட்பாட்டு எழுத்தாளர்கள் எங்கும் ஜீரணமாகும் மொழியில் எழுதுவதில்லை. மிக மிக பிரபலமான பிராயிடை ஆங்கிலத்தில் படித்துப் பாருங்கள். லேசாய் தலைசுற்றும். ஒரு வரியில் ஒன்பது மேற்கோள்கள் காட்டுவார். லக்கான், சிக்ஸூ போன்றோரையும் சுலபத்தில் படிக்க இயலாது. காயத்ரி ஸ்பிவாக் எப்படி தேவையற்று தன்னை சிக்கலானவராய் மாற்றிக் கொள்கிறார் என ஒரு பிரபல ஆங்கில இணைய பத்திரிகையில் ஒரு கட்டுரை படித்தேன். எல்லா இடங்களிலும் இக்குற்றச்சாட்டு உள்ளது. ஏன் இந்த குற்றச்சாட்டு வருகிறது?

நன்றி ஜெயமோகன்

ஜெயமோகன் எனது “போதையில் பலவகை” கட்டுரைக்கு ஒரு ஆழமான எதிர்வினை எழுதியுள்ளார். தனக்கு ஏற்புள்ள விசயங்களையும் பாராட்டவும், தான் மறுக்கும் இடங்கள் குறித்து விரிவாக விளக்கவும் செய்துள்ளார். வாசிப்பு நம் ஆளுமையை செறிவுபடுத்தும், ஒரு படைப்பாளியாய் நம்மை மேம்படுத்தும் என்பதால் அது போதை அல்ல எனக் கூறுகிறார். ஒருவிதத்தில் நானும் அவரும் விளக்க எத்தனிக்கும் இடம் ஒன்று தான் எனத் தோன்றுகிறது: வாசிப்பு படைப்பூக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை அல்லது படைப்பை நமக்குள் செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அல்லாவிட்டால் - வெறும் வாசிப்பு இன்பத்துக்காக தொடர்ந்து செய்யும் வாசிப்பு - வீணானது. நன்றி ஜெயமோகன். ஜெயமோகனின் கீழ்வரும் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது:  ”எப்போதும் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் மட்டுமே சிந்திக்க வேண்டுமென்று எண்ணுபவர்கள் சிந்திப்பதே இல்லை. சிந்திப்பது என்பது தன்னிச்சையாக ஒரு கேள்வியைச் சென்றடைவது. அதன் அனைத்து சாத்தியங்களையும் நோக்கி தன்னை விரித்துக்கொள்வதும் ஆகும். கண்டடைந்தவை பயனுள்ளவையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். செல்வது மட்டுமே சிந்தனையாளனால் செய்ய...

தென்றல் பத்திரிகையில் என்னைப் பற்றின குறிப்பு

தென்றல் கடந்த 17 வருடங்களாக வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகை . அதில் இம்முறை என்னைப் பற்றின அரவிந்த் எழுதிய ஒரு அறிமுகக் குறிப்பு வெளியாகி உள்ளது . ஒருவேளை என்னைப் பற்றி வந்துள்ள சிறந்த அறிமுகம் இது தான் .  நானே என்னைப் பற்றி இவ்வளவு துல்லியமாய் மதிப்பிட்டு எழுத இயலாது . 

சுஜாதாவும் சாருவும் – துள்ளுவதே இளமை

அன்புள்ள அண்ணன் ,       நேற்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் வாங்கினேன் . டி என் பி சி எஸ் பரீட்சைக்கு டியூட்டி போட்டிருந்தார்கள் . மனக்கசப்போடுதான் சென்றேன் . ஞாயிற்றுக் கிழமை அதுவுமா இப்படி சாகடிக்கிறாங்களேன்னு நொந்து கொண்டேன் . நானூறு ரூபாய் டியுட்டி பார்த்ததிற்கு கொடுத்தார்கள் . வாக்கிக் கொண்டு எதாவது புத்தகம் வாங்கலாம் என்ரு பனுவல் புத்தகக் கடைக்குச் சென்றேன் . முழுக்க அலசியும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை . கடைசியாக சுஜாதாவின் புத்தகம் . சுஜாதாவின் நாவல்களை வாங்க தற்போதைக்கு மனம் இல்லை . இதுபோன்ற விசயங்களில் நான் கட்டுரைகளையே காசு கொடுத்து வாங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன் . கணையாழி கண்ணில் பட்டது . இந்த புத்தகத்தின் விசேஷம் என்னவெனில் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்த போது ஒரு வாலிபர் வெண்ணிற இரவுகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார் . இன்னும் நினைவில் இருக்கிறது . கருப்புக்கலர் சட்டை . அவர்தான் சுஜாதா புளியமரத்தின் கதையைப...