முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிழக்கு பதிப்பக சிறுகதைப் போட்டி


கிழக்கு பதிப்பகம் நடத்தும் சென்னை நாள் சிறுகதைப் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராய் 44 கதைகளைப் (நானூற்று சொச்சம் பக்கங்கள்) படித்து மதிப்பெண் இட்டு இப்போது தான் அனுப்பி விட்டேன். கதைகள் பற்றின என் கருத்துக்களை இப்போதைக்கு கூறப் போவதில்லை. ஆனால் பொதுவாக ஆர்வமூட்டும் சற்றே ஆச்சரியப்படுத்தும் ஒரு  நல்ல வாசிப்பு அனுபவமாய் இது அமைந்தது எனபதை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.
 உணர்ச்சிகளை வைத்து விளையாடும் மலினமான வணிகக் கதை பாணியில் இருந்து இன்றைய வெகுஜன கதைசொல்லிகள் நகர்ந்து வந்திருக்கிறார்கள். இலக்கிய கதைகளுக்கு மட்டுமே உரித்தான சில கதைக்கருக்களை, களங்களை இன்று வெகுஜன எழுத்தில் கையாள்கிறார்கள். விளிம்புநிலையினர் பிரச்சனைகள், ஒடுக்கப்பட்டோர் நிலைமை முன்னுரிமை பெறுகின்றன. எப்போதும் போலவே வசனத்தை நன்றாய் எடுத்தாள்கிறார்கள்.
நமக்கு இப்போதைக்கு தேவை இத்தகைய கதைசொல்லிகளுக்கு ஒரு பெரும் கவனப் பரப்பு – டிவி போல, பெரிய மேடைகள் போல. கதையை படைப்பாளி சத்தமாய் வாசித்துக் காட்டுவதை, அதை உணர்ச்சிகரமாய் நிகழ்த்துவதை பல லட்சம் பேருக்கான ஒரு பொழுதுபோக்கு வடிவமாய் நம்மால் உருவாக்க முடிந்தால் அது சிறுகதை வடிவை ஒரு பெரிய இடத்துக்கு கொண்டு போக உதவலாம்; சிறுகதையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும்; பல்லாயிரம் கதைகள் எழுதப்பட்டால் நூறு கதைகளாவது சாதனைப் படைப்புகள் ஆகும். பிக்பாஸில் அடிக்கொரு தரம் கேரள வெள்ளம் பற்றி பேசும் கமல் அதே பொறுப்புணர்வுடன் தனக்கு உவப்பான ஒரு சிறுகதையில் இருந்து அரைப்பக்கம் படித்து காண்பிக்கலாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு முக்கிய கதையை பரஸ்பரம் வாசித்துக் காட்டி நிகழ்த்துவதை ஒரு டாஸ்காக செய்ய சொல்லலாம்.
எப்படியோ நீங்கள் இத்தகைய முயற்சிகள் எடுக்காவிட்டாலும் பதிப்பகத துறையினரும் வாசக சாலை போன்ற இலக்கிய அமைப்புகளும் தொடர்ந்து முயன்றபடி தான் இருக்கிறார்கள்.
இந்த போட்டியை ஒருங்கிணைத்த கிழக்கு பதிப்பகத்துக்கு என் வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...