முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: யஷிகாவின் யுக்தியும் தர்க்க விளையாட்டும் (2)


Image result for yashika anand
செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற டாஸ்க் சற்றே சிக்கலானது. போன் மணி அடிக்க அதை எடுக்கிறவர் அடுத்த வாரம் வெளியேற்றத்துக்காக நாமினேட் ஆகிறார். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள இன்னொரு பங்கேற்பாளரை ஒரு கஷ்டமான டாஸ்கை செய்ய வைக்க வேண்டும். யஷிகாவை பிக்பாஸ் அழைத்து ஜனனியை தனது இமையை பிளீச் செய்ய வைக்க வேண்டும்; அப்படி செய்தால் நீங்கள் தப்பிக்கலாம் என்கிறார். யஷீகாவும் ஜனனிக்கும் சும்மாவே முட்டிக் கொள்ளும். இப்போது போய் எப்படி இந்த சிரமமான காரியத்தை செய்யும் படி வேண்டி ஏற்க வைப்பார்? ஜனனிக்கு கண்கள் தனித்து தெரியும். அந்த முட்டைக் கண்களை கூடுதலாய் மலர வைக்கும் இமைகள். அந்த இமைகளை பிளீச் செய்தால் ஒன்று அவை வெளிறும் அல்லது சிவக்கும். எந்த பெண்ணும் யோசிப்பாள். தான் வெறுக்கும் யஷிகாவுக்காக ஜனனி இதை செய்வாரா?
Image result for ஜனனி ஐயர்
பிக்பாஸில் எல்லா பங்கேற்பாளர்களும் தமக்கு ஒவ்வாத உடன்பாடில்லாத காரியங்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு செய்து தியாகியாக மக்களிடம் பெயரெடுக்க முயல்கிறார்கள். செண்ட்ராயன் தன் சுருள் முடியில் சாயம் பூசினார், விஜலக்ஷ்மி சாணி நிரம்பிய தொட்டியில் படுத்துக் கொண்டார், பாலாஜி மொட்டை அடித்தார்; ஜனனியும், ஆக, இதை செய்யலாம். ஆனால் யஷிகாவுக்காக செய்வாரா என்பதே கேள்வி. யஷிகா எப்படி ஒப்புக்கொள்ள வைக்கப் போகிறார்?
யஷிகா தன் மொத்த தந்திரத்தையும் காட்டின இடம் இது. அவர் ஜனனியிடம் போய் சொன்னார்: “நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என உங்களுக்குத் தெரியும். எனக்கு பிக்பாஸில் ஜெயிக்க வேண்டும். ஆனால் அதற்காக நீங்கள் இமையில் பிளீச் அடிப்பது சிரமம் தான். உங்களுக்காக பாலாஜி அண்ணன் மொட்டையெல்லாம் அடித்துக் கொண்டாரே? அப்படி இருக்க நீங்கள் எனக்காக இந்த தியாகத்தை செய்யலாம் தானே. உங்கள் கண்கள் தான் உங்களுக்குப் பிளஸ். அதை அசிங்கப்படுத்தும்படியாய் இந்த ப்ளீச் ஆகி விடலாம். ஆனால் என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் இதை செய்ய வேண்டும்.”
1)   எந்த இடத்திலும் அவர் இறங்கி வந்து கெஞ்சவோ, தான் இதுவரை அவருடன் முறைத்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோரவோ இல்லை. ஏனென்றால் ஜனனி என்ன தான் வாயாடினாலும் இயல்பில் சற்று பணிந்து போகிறவர். அவரிடம் சற்று கெத்தாய் ஆதிக்க தொனியில் பேசினால் எடுபடும் என யஷிகா அறிந்து வைத்திருக்கிறார்.
2)   தனது பிக்பாஸ் போராட்டத்தை மிகைப்படுத்திப் பேசி, ஜனனியின் தியாகம் ஒரு உன்னத தியாகம் எனும் பிம்பத்தை ஏற்படுத்துகிறார். நாம் எப்போதுமே ஒரு பெரிய விசயத்துக்காக இழப்பை சந்திக்க தயங்க மாட்டோம் – அடுத்தவர்களின் விசயமே என்றாலும் கூட. ஆகையால் தான் யஷிகா “என்னை ப்ளீஸ் காப்பாற்றுங்கள்” எனக் கோராமல், “என்னைப் போன்ற ஒருவர் காப்பாற்றப்படுவது அவசியம், நான் அந்தளவுக்கு போராடி இருக்கிறேன், உழைத்திருக்கிறேன்” என பில்ட் அப் கொடுக்கிறார்.
3)   கடைசியாய் அவர் பாலாஜி ஜனனிக்காக அடித்த மொட்டையை, தியாகத்தை, ஏதோ யஷிகாவே ஜனனிக்காக செய்தது போல சித்தரித்தார். பாலாஜி செய்த தியாகத்துக்கு பதிலாக பாலாஜிக்காக ஜனனி பிளீச் செய்யலாம். ஏன் யஷிகாவுக்கு செய்ய வேண்டும். ஆனால் யஷிகா பேசும் போது அத்தியாகத்தை செய்தது பாலாஜி அல்ல, யஷிகாவே எனும் தொனி ஏற்பட்டது.

தர்க்கத்தில் ஒரு வாக்கியம் ஒரு முதற்கோள் (premise) மற்றும் அதன் விளைவினால் (conclusion) தோன்றுவது என்பார்கள்.
 “பசிக்குது, சோறு போடுங்க” என்பதில் ”பசிக்குது” முதற்கோள், “சோறு போடுங்க”” அதன் விளைவு. வெறுமனே “சோறு போடுங்க” என்றாலே உங்களுக்கு பசிக்கிறது எனும் அர்த்தம் வந்து விடும். பசியில்லாமல் நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள்.
”வெயில் அடிக்கிறது” என்றால், அவ்வளவு நேரமும் வெயில் இல்லை, இப்போது தான் அடிக்கிறது என பொருள் வந்து விடும்.
முதற்கோள் அடித்தளம் என்றால் அதன் மீது கட்டி எழுப்பப்பட்ட கட்டிடமே விளைவு / முடிவு.
யஷிகா இங்கு என்ன செய்கிறார் என்றால் சாமர்த்தியமாய் ஒரு செயலுக்கான முதற்கோளை இன்னொன்றுக்கு பொருத்துகிறார்.
“பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால் ஜனனி அவருக்கு கடன்பட்டிருக்கிறார்” என்பதில் முதற்கோள் “பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார்.” அதை யஷிகா எடுத்துக் கொண்டு “பாலாஜி மொட்டை அடித்து தியாகம் செய்தார். அதனால் எனக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்” என இணைத்து பித்தலாட்டம் செய்கிறார். இதை சரிவர யோசிக்காமல் கேட்டுக் கொண்டால் “ஆமா சரி தானே” எனத் தோன்றும்.

இது பாஜகவினர் தமக்கு எதிராய் போராடுகிறவர்கள் தேச துரோகிகள் என்பது போல.
பாஜகவினரின் கோரலை நாம் இப்படி வகுத்துக் கொள்ளலாம்.
முதற்கோள்: பாஜக என்பது தேசப்பற்றாளர்களின் கட்சி. தேசப்பற்றாளர்களை எதிர்ப்பது தேசத்துரோகம்.
இதில் இருந்து நாம் வகுப்பது
பாஜக = தேசப்பற்று
முடிவு: ஆக பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் துரோகிகள்.

இது கேட்க சரியாக தோன்றினாலும் தவறான வாதம். பிழை முதற்கோளில் உள்ளது. பாஜக என்பது தேசப்பற்று மட்டுமல்ல; அக்கட்சி மதவாதமும் தான். ஆக முதற்கோளின் சரியான வழிப்பொருள் (derivative): பாஜக = தேசப்பற்று / மதவாதம்.
ஆக, இதன் சரியான முடிவு – “பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது மதவாத எதிர்ப்பாளர்கள்”

இதே போன்ற ஒரு உதவி கோரும் நிலை ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட போது அவர் பதற்றப்பட்டு குழம்பி செண்ட்ராயனிடம் பொய் சொல்லி பெரிய குழப்பங்களை ஏற்படுத்தி கெட்ட பெயரை சம்பாதித்தார். ஆனால் யஷிகாவோ ஒரு தேர்ந்த வியாபாரியைப் போல தேர்ந்த சொற்களால் பித்தலாட்டமான வாதங்களால் ஜனனியை மறுவாதமே இன்றி ஏற்றுக் கொள்ள வைத்து விட்டார். அவர் ஒரு வியாபார குடும்பத்தை சேர்ந்தவர். பேசி எதையும் விற்கும் திறன் அவர் ரத்தத்திலே உண்டு போல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.