நமது கழிப்பறை / குளியலறைகள் மிக இடுங்கலாய் கட்டப்பட்டவை.
வெளி ஓசைகள், அசைவுகள், நிழல்கள், சிறு சிறு தொந்தரவுகள் அங்கு இல்லை. பாத்ரூமில் நமக்கு வேறெந்த பொறுப்பும்
இருக்க முடியாதல்லவா! படுக்கையில் படுத்துப் படிக்கையில்கூட ஏதாவது வேலை நினைவு
வந்து நாம் கவனம் சிதறலாம்; போன் வந்தால் பேச நேரிடலாம்;
டிவி பார்க்கத் தோன்றலாம்; பசியெடுக்கலாம்;
ஜன்னல் வழி வெளியே தெருவில், எதிர்வீட்டு
பால்கனியில் கடந்து போகும் பெண்களை சைட் அடிக்கத் தோன்றலாம். ஆனால், பாத்ரூமுக்குள் இவையெல்லாம் தடை சாத்தியப்படாதவை.
மார்க் ஸ்கோன்பெல்ட் எனும் வலைப்பதிவர் இதைப் பற்றி எழுதுகையில்
மலம் கழிப்பதில் ஒருவித சுகானுபவம் உள்ளதைக் குறிப்பிடுகிறார். வயிற்றின் பாரம்
இறங்குவதன் ஆறுதலைப் பற்றிக் கூறுகிறார். மலத்துவாரம் உள்ள பகுதியில் உள்ள
ஏகப்பட்ட நரம்பணுக்கள் செக்ஸுடன் சம்பந்தப்பட்டவை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆக, மலம் கழிப்பதன் கிளர்ச்சியை
உணர்ந்துள்ளவர்கள் அதை நீட்டிக்க விரும்புகிறார்கள். வாசிப்பு அதற்கு உதவுகிறது.
அது மட்டுமல்ல, வாசிப்பு என்பதன் சுவையே மலத்துவாரத் தசைகள்
விரிவுறும் கிளர்ச்சியுடன் இணைந்து பல மடங்கு மேலாகிறது என நான் கருதுகிறேன். பொன்னியின்
செல்வனில் கரிகாலனும் நந்தினியும் சந்திக்கும் பகுதியாகட்டும், முராகாமியின் நார்வேஜிய வனம் நாவலின் துவக்க அத்தியாயங்களாட்டும், அடிவயிற்றை எக்கி ரசித்து பாரம் இறக்கியபடி அவற்றை வாசிக்கும் அனுபவமும்
வெறுமனே நாற்காலியில் அமர்ந்து கூர்ந்து வாசிக்கும் அனுபவமும் ஒன்றல்ல.
ரொமான்டிக்கான அத்தியாயங்கள், பரபரப்பான திகில் மற்றும் ஆக்ஷன்
அத்தியாயங்கள் பாத்ரூமில் வாசிக்கத் தோதாய் உள்ளது இதனால்தான் எனக் கருதுகிறேன்.
மேலும் படிக்க: http://www.minnambalam.com/k/2018/10/03/24
Comments