முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்


Image result for chinmayee

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரை அவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும் தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது கொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டிஒருவர் உங்களிடம் 2004இல் தவறாக நடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்க முடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த சின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண்டதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளார். அந்நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டது தான் அல்ல, “அதற்கு பொறுப்பானவரிடம் என் தேதிகளை ஒப்படைத்த நிலையில் எனக்கு முடிவெடுக்கும் வாய்ப்பு இருக்கவில்லைஎன்கிறார். ஆனால் இந்த விளக்கம் ஏற்கும்படியாய் இல்லை. சின்மயி இவ்விவகாரத்தில் முரண்படவே செய்கிறார்.

என் ஊகம் என்னவெனில், ஒருவேளை அவர் சொல்வது போல வைரமுத்து தவறு இழைத்திருந்தால், தனது திரைவாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு அவர் வைரமுத்துவிடம் நட்பு பாராட்டியிருக்கலாம். அதை நான் தப்பென்று சொல்ல மாட்டேன். வாழ்க்கை என்பதே பலவகையான சமரசம் தானே!
 அன்று நான் வெளிவந்து அவரைப் பற்றி பேசியிருந்தால் யாராவது ஏற்றுக் கொண்டிருப்பாரா? அன்று எனக்கு பேச ஒரு தளம் இல்லைஎன்றெல்லாம் சின்மயி சொல்வது சப்பைக்கட்டு.
இதற்கு ஒரு நல்ல ஆதாரம் அவர் இதுவரை திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட வி..பிகள் பற்றி எதுவும் வெளியிட வில்லை என்பது. திரைத்துறையில் நடக்கும் கேஸ்டிங் கவுச் குறித்து நன்கு அறிவோம். ஆனால் சின்மயி அது குறித்து வாயே திறக்கவில்லை. சுசித்ரா லீக்ஸ் பிரச்சனை எழுந்த போது நடிகைகள் பயன்படுத்தப்படுவது பற்றி பேசினாரா இவர்?
ஏன் இல்லை என்றால் அவர் சாமர்த்தியசாலி. சாமர்த்தியசாலியாய் இருப்பது தப்புமல்ல. நான் உண்மையில் இதைப் பாராட்டுகிறேன்.
சின்மயி சமரசம் செய்து கொண்டிருப்பார் என்றால் என்ன பொருள்? (சின்மயியின் குற்றச்சாட்டு உண்மையானால்)
வைரமுத்து அவரை இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கோர, இவர் அதை ஏற்றுக் கொண்டு சமரசம் நடந்திருக்க வேண்டும். அல்லாவிடில் 2004க்கு பிறகு இவ்வளவு பாடல்கள் அவர் வைரமுத்துவுக்கு பாடவோ, வைரமுத்துவை விண்ணுயர புகழவோ அவரை திருமணத்துக்கு அழைத்து காலில் விழவோ செய்திருக்க மாட்டார்.
இருவருக்குமிடையே ஒரு சுமூகமான உறவு நிலவியிருக்கும். வைரமுத்து இவரை அதிகம் அண்டாமல் இணைந்து பணியாற்றி இருப்பார். “பெரியவர்இறங்கி வருகிறாரே என சின்மயியும் நெகிழ்ந்து பல சந்தர்பங்களில் அவரை புகழ்ந்திருப்பார். (மீண்டும் சொல்கிறேன்சின்மயியின் குற்றச்சாட்டு உண்மை எனும் பட்சத்தில் மட்டுமே இதைச் சொல்கிறேன்; அது பொய்யாகவும் இருக்கலாம்.)
ஆனால் இந்த சுமூக உறவுக்குப் பின்னால் சின்மயி புகைந்து கொண்டு தான் இருந்திருப்பார்.
இது பெண்களுக்கே உரிய ஒரு பிரத்யேக சுபாவம். அவர்களால் முரண்பாடுகளுடன் தொடர்ந்து வாழ முடியும். அப்படி முரண்பாட்டுக்குள் அவர்களைத் தள்ள கடுமையான அழுத்தங்கள் எல்லாம் அதற்குத் தேவையில்லை. மிகக் கடுமையாய் வெறுக்கிற ஒருவரையே மதிக்கவும் அவருடன் இணைந்து செயலாற்றவும் பெண்களால் முடியும். ஆனால் சூழ்நிலை என்றோ ஒருநாள் மாறும் போது அதே அவர் மீது கடுமையாய் தாக்குதல் நடத்தவும் அவர்களால் முடியும்.
ஏன் இத்தனைக் காலம் கழித்து?
முரண்பாடுகளுடன் வாழும் பெண்ணின் மன இயல்பு பற்றி சொன்னேனே. இந்த இயல்பு அவர்களுக்குள் கடும் அழுத்தத்தை உருவாக்கும். ஒரு கட்டத்தில் வெடித்து விடுவார்கள். அவரை புகழப் புகழ அவரை இகழ்வதற்கான சாத்தியங்களும் அவருக்குள் எட்டிப் பார்க்கும். அதை தலையில் தட்டி அப்போதைக்கு துயில வைப்பார்கள். ஒரு கட்டத்தில் புகழ வேண்டிய மனம் உறங்க காறித் துப்ப வேண்டிய மனம் விழிக்கும்.
சின்மயி செய்தது சந்தர்ப்பவாதமா என்றால் ஆமா மற்றும் இல்லை என்பேன்.
அவருக்கு உண்மையிலேயே வைரமுத்து மீது மரியாதை இருக்கலாம். அவரது பாடல் வரிகளை இவர் புகழ்ந்து எழுதியுள்ளதைப் பார்க்கும் போது இது தெரிகிறது. “சரசர சாரக் காத்துபாடலைப் புகழும் போது எப்படி வைரமுத்துவால் பெண் மனத்தை நுணுக்கமாய் புரிந்து கொண்டு இவ்வளவு எதார்த்தமாய் எழுத முடிகிறது என சிலாகிக்கிறார் சின்மயி. இது பாசாங்கு அல்ல.
ஆனால் இதைச் சொல்லும் போதே ஒரு பெண் மனத்தை இவ்வளவு நன்றாய் எழுத்தில் சித்தரிக்கத் தெரிந்தவர் நடப்பில் அதே புரிதலுடன் கண்ணியமாய் தன்னை நடத்தவில்லையே என (ஒருவேளை அவரது குற்றச்சாட்டு உண்மையெனில்) சின்மயியின் மனம் சொல்லும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அழைத்து விடுக்கும் போது பெண் அதை அவனது பிரச்சனையாக மட்டும் பார்க்க மாட்டாள். தன் மீதான பாலிய ஒழ்க்க விமர்சனமாகவும் அதைப் பார்ப்பாள். “இத்தனைப் பெண்கள் இருக்கையில் நான் மட்டும் ஏன் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறேன்? என்னைப் பார்க்க இவனுக்கு அப்படி ஒழுக்கமற்றவள் எனப் படுகிறதா?” என்றெல்லாம் அவர்கள் குமைவார்கள். ஆக அவர்களை அழைப்பது என்பது ஆயிரம் முறை முகத்துக்கு முன்னால் ஈனமானவளே என கூவுவதற்கு சமம். ஆகையால், விரும்பாத பாலியல் அழைப்பை பெண்கள் வெறும் அழைப்பாய் மட்டும் பார்ப்பதில்லை; அவர்கள் கடுமையாய் காயப்படுகிறார்கள். இவ்வளவு குழப்பங்கள் அவர்களுக்கு ஏற்படுவதை ஆண்கள் உணர்வதில்லை.
இப்படி அவமதிப்பு நிகழ்ந்த பின் அதை வெளியே சொல்லாமல் இருந்தால், அவருடன் சுமுகமாய் பணியாற்ற நேர்ந்தால், கூடுதல் சமாளிப்புக்காகவும் உண்மையாகவும் அவரை பலமுறை புகழவும் காலில் விழுந்து அவரிடம் ஆசி வாங்கவும் செய்தால் அப்பெண்ணுக்கு என்னவாகும்? ஒரு பக்கத்தை மட்டும் வைத்து அவரை புகழ்கிறேனே எனும் உறுத்தல் பாம்பாய் படமெடுத்து அவரைக் கொத்தும். ஒருநாள் சின்மயியே அந்த பாம்பாகி வெளிவந்து சீறி விட்டார். அது தான் நடந்திருக்க வேண்டும்.
நான் சின்மயியின் முரண்பட்ட செயல்களை ஒருவித உள்முரணின் வெளிப்பாடாக பார்க்கிறேன். இது பெண் உளவியலின் அடிப்படை இயல்பு என்கிறேன். அதேவேளை தன் தொழிலை பாதுகாத்துக் கொள்ளும் சின்ன சந்தர்ப்பவாதமும் இருக்கிறது.
மற்றபடி அவர் எந்த அச்சமும் இல்லாத பெண்ணுரிமைப் போராளி என சொல்ல மாட்டேன். காஸ்டிங் கவுச் விவகாரத்தில் அவர் மௌனம் காப்பது அதைக் காட்டுகிறது.
ஆனால் அவர் ஏன் போராளி ஆகி ஊருக்கே கொடி பிடிக்க வேண்டும்? அவசியமில்லை.
அவர் தன் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சராசரி மனுஷி அவ்வளவு தான். தன்னை ஒத்த பெண்களின் டிவீட்களையும் இதை ஒட்டி அவர் பகிர்ந்திருக்கிறார். இதுவரையில் அவரது பகிர்வு அவரது திரைவாழ்வை முழுக்க காலி பண்ணாது என நம்புகிறேன். அவர் கர்நாடக இசைப் பாடகர்களை, பிராமண சங்கத் தலைவரை எல்லாம் இழுத்து விட்டிருக்கிறார். ஆனால் இவர்களுடன் அவர் எப்படியும் பணியாற்றப் போவதில்லை.
 ஆக, அவர் பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. இனிமேல், வைரமுத்து பங்கேற்கும் படங்களில் அவர் பாடுவது சிரமமாகும். வைரமுத்துவின் பாடலாசிரியர் வாழ்க்கை அஸ்தமனத்தில் இருக்கும் இந்த சந்தர்பத்தில் சின்மயியின் பாடல் வாய்ப்புகளும் பெரிய அளவில் இனி பாதிக்கப்படாது என நினைக்கிறேன். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என யாரையும் சீண்டாமலே அவர் விளையாடி வருகிறார். Safe play!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...