முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புக் கட்டுரை: #metoo பிரச்சாரம் ஆண்களை வேட்டையாடுகிறதா?

அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஆண் ஜொள்ளு விடுவதை பலாத்காரம் என மிகைப்படுத்தக் கூடாது. ஆண்கள் தம் எல்லைகளை, தாம் விருப்பத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்தான். ஆனால், அதற்காய் ஓர் ஆண் செய்வதெல்லாம் ரேப் ஆகாது. இது உண்மையான பாலியல் தாக்குதல் வழக்குகளின் தீவிரத்தை இல்லாமல் ஆக்கும்.
இது நான் சொல்வதல்ல, பிரான்ஸின் முக்கியமான பெண்ணியவாதிகள் இந்த இயக்கம் குறித்து தம் கவலைகளை தெரிவிக்கையில் கூறியது. Vox / Morning Consult நிறுவனம் பெண்களிடம் நடத்திய சர்வே ஒன்றில் கணிசமான பெண் பங்கேற்பாளர்கள் தெரிவித்த கவலை இது. ஊரில் உள்ள ஆண்களை எல்லாம் காமக் குரோதர்களாய்ச் சித்தரிக்காதீர்கள். நாளை உங்கள் மகனோ, தம்பியோ ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து “நீ அழகாய் இருக்கிறாய்” எனச் சொன்னால் அப்பெண், “இவன் என்னிடம் பாலியல் அத்துமீறல் செய்தான்” எனப் பொதுவெளியில் சொன்னால் உங்களுக்கு அது எப்படி இருக்கும் என சர்வே பங்கேற்பாளர்கள் பலர் வினவுகிறார்கள். பத்தியாளர் மார்கரெட் வெண்டே, எழுத்தாளர்கள் மார்கரெட் ஆட்வுட், நடிகர்கள் மேட் டேமன், லீயம் நீசம் உள்ளிட்ட பலரும் இத்தகைய கருத்தை இந்த #metoo இயக்கத்துக்கு எதிராய் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


நடிகை கேதரின் டெனுவே தலைமையில் நூறு பெண் கருத்தாளர்கள் #metoo குறித்து கவலை தெரிவித்து லெ மொண்டே பத்திரிகையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சார இயக்கம் இப்போது ஒட்டுமொத்த ஆணினத்தையே ஒழிக்கக் கிளம்பியிருக்கும் சூனியக்கார வேட்டையாக (witch hunt) மாறிப் போயிருப்பதாய் இவர்கள் கோருகிறார்கள். அனைத்து ஆண்களும் ரேப்பிஸ்ட்டுகள் அல்ல. சில செயல்கள் தெரியாத்தனமாகவும் சில மென்மையான விருப்பத் தெரிவிப்பாகவும் சில நடவடிக்கைகள் எளிய தொந்தரவுகளாகவும் உள்ள நிலையில் அனைவரும் பொத்தாம் பொதுவாய் தாம் அத்துமீறப்பட்டதாய் ஒப்பாரி வைக்கையில், “அத்துமீறல்” எனும் குற்றச்செயலே நீர்த்துப் போகும் நிலை ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு தம் தரப்பை விளக்கவோ, நிரூபிக்கவோ வாய்ப்பே தராமல் அவர்களைக் கூட்டமாய் மக்கள் மொத்துவது ஒருவித பெண்ணிய சர்வாதிபத்தியம் என்கிறார்கள் இந்த விமர்சகர்கள்.
“அவன் ஆணா என்று பார். ஆணென்றால் ரேப்பிஸ்ட்தான் என முத்திரை குத்தி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றும் ஒருவித வெறித்தனத்தை இந்தப் பிரச்சாரத்தின்போது எல்லாத் தளங்களிலும் பார்க்க முடிகிறது” என்கிறார் கேதரின் டெனுவே. இது பெண்ணியம் அல்ல, ஆண்கள் மற்றும் பாலியல் மீதான ஒருவித வெறுப்பு பிரச்சாரம் இது என்கிறார்.
பாலியல் அழைப்பை எப்போது தொந்தரவாகவோ, தாக்குதலாகவோ பார்க்கலாம் எனும் விஷயத்திலேயே இரு சாராருக்கும் கருத்து முரண். இன்முகம் காட்டினாலே பாலியல் தாக்குதல் என வகைப்படுத்தக் கூடாது என ஒரு தரப்பும், எந்த அளவுக்குப் போனால் பாலியல் குற்றமாகும் என்பதைப் பாதிக்கப்பட்டவரே முடிவெடுக்க வேண்டும் என அதன் எதிர்த்தரப்பும் கூறுகிறார்கள். பாதிக்கப்பட்டோரின் கோணத்தில், அவர்களின் விருப்பப்படி, பார்வையின்படி, ஒரு குற்றத்தை மதிப்பிடலாம் என்பது ஆபத்தானது மற்றும் அநியாயமானது.

http://www.minnambalam.com/k/2018/10/17/37?fbclid=IwAR2x49EadTH02rzH1yKF4Zo_mjIbELJCaUJKp2KoEEhfnbROurYez5Dfp4w

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...