முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (4)


எண்ணிக்கையையும் தாக்கத்தையும் பார்த்தோம். இனி அடுத்த காரணங்கள்:
 Image result for mani ratnam kamal haasan
1)       
நானே-எல்லாம்-மனப்பான்மை: திரைக்கதையை திருடி பயன்படுத்துவது, ஒருவரை திரைக்கதை எழுத வைத்து டைட்டிலும்திரைக்கதைஎன தன் பெயரை போட்டுக் கொண்டு திரைக்கதையாளருக்குவசனகர்த்தாஎன சின்னதாய் மூலையில் இடம் கொடுப்பது தமிழ் சினிமாவில் வியாபித்துள்ள வியாதி. “கதை, திரைக்கதை, இயக்கம்எனப் போட்டுக் கொண்டால் தான் நம் இயக்குநர்களுக்கு கெத்து. டி.ராஜேந்தர் இதற்கு அடுத்த கட்டத்துக்குப் போய்கதை, திரைக்கதை, பாடல், இசை, நடிப்புஎன அனைத்துக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழில் திரைக்கதையாளர்கள் வலுவாக தோன்றாததற்கு இயக்குநர்களின் இந்த வர்வ-வியாபமும், அகந்தையும் ஒரு காரணம்.

2)       அரசியல்: நடிப்புக்கு அடுத்தபடியாய் இயக்குநர்கள் நுழைவது அரசியலில் தான். எல்லா மொழிகளிலும் சினிமா புகழை பயன்படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் உண்டு. நடிகர்கள் தமிழிலும் தெலுங்கிலும் தான் நடிகர்கள் முதல்வர் வரை ஆக முடிந்தது. (இரு முதல்வர்களுடன் இதில் தமிழுக்கே முதலிடம்.) ஆனால் இயக்குநர்கள் தமிழ் அளவுக்கு வேறெங்கும் அரசியலில் இடம் பெறுவதில்லை. சீமான் கட்சி நடத்துகிறார். மாநில தேர்தலின் போது மூன்றாம் (நான்காம்) அணியில் இவருக்கு தனி இடம் உண்டு. இயக்குநர்கள் டி.ராஜேந்தர் (அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்), மணிவண்ணன், ராம், ரஞ்சித், அமீர் என ஒரு வரிசையினர் நேரடி அரசியலில் ஈடுபட்டோ ஈடுபடாமலோ தமிழ் அரசியல் கதையாடல்களில் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக இருக்கிறார்கள். சமூகத்திடம் சொல்ல வேண்டிய கருத்துக்களை தம் படங்களின் வழி சத்தமாய் பேசுவது, பிறகு அதையே நேரடி அரசியல் உரையாடல்களில் நீட்டிப்பது இவர்களின் பாணி. திரைமொழியிலும் வசனங்களிலும் அரசியலை இணைப்பது தமிழில் வெற்றி பெறும் என்பதற்கு இவர்களின் படங்களும் செயல்பாடுகளும் அத்தாட்சி.

ஏன் தமிழகத்தில் இயக்குநர்-நடிகர்கள் ஒரு அசைக்க முடியாத தரப்பாக இருக்கிறார்கள்? “ஏன் நானே நடிக்கக் கூடாதுஎன இங்கு ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது? இயக்குநர்கள் மிக அரிதாகவே கச்சிதமான பிசிறற்ற நடிகர்களாய் மலர்ந்திருக்கிறார்கள்; அவர்கள் பெரிய நட்சத்திரங்களும் ஆவதில்லை. ஆனாலும் இந்த ஆசை ஏன் மறைய மாட்டேன் என்கிறது? ஏன் இவர்கள் தமது கருத்தியல், கதைகூறல் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து ஒரு அரசியல் தலைவராக உருப்பெற விரும்புகிறார்கள்? இது ஏன் மக்கள் ஆதரவு பெறுகிறது?
இயக்குநர்களுக்கு அடுத்தபடியாய் ஏன் இசையமைப்பாளர்களும், பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் நாயகர்களாக அவதரிக்கிறார்கள்?
 எனக்கு மூன்று காரணங்கள் தோன்றுகின்றன. (இவற்றில் இரண்டும் மூன்றுமே மிகவும் பிரதானம் என நினைக்கிறேன்.)

1)   மாற்று சினிமாவுக்கான இடமின்மை: நமது சினிமா நாயகனை மையமிட்டுள்ளது. நடுநடுவே இயக்குநருக்காய் படம் ஓடிய பாலசந்தர், பாரதிராஜாக்களின் எண்பது, தொண்ணூறுகளின் காலம் முடிவுற்றதும் நாயகனே ஆதியும் அந்தமுமாய் கருதப்படும் காலகட்டம் துவங்கி இன்று வரை தொடர்கிறது. உதாரணமாய், அஜித்திடம் கால்ஷீட் பெற்று விட்டால் உடனடியாய் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் உங்களை நாடி வருவார்கள். ஓரளவு சுமாராய் படத்தை அமைத்தால் கூட போட்ட பணத்தை எடுத்து விடவோ நல்ல லாபம் பெறவோ செய்வார்கள். ஆனால் நட்சத்திர நாயகன் தேவையிராத நடுநிலை (அரசியல் நடுநிலை அல்ல) சினிமாவுக்கு இங்கு இடம் உண்மையில் இல்லை. இப்படங்களுக்கான விளம்பரம், திரையிடும் வாய்ப்பு, பட்ஜட் ஆகியவை பெருமளவு குறையும். ஆனால் மலையாளம் மற்றும் இந்தியில் நீண்ட காலமாகவே மாற்று / நடுநிலை சினிமா இருந்து கொண்டிருக்கிறது; அத்தகைய படங்களை அறிமுக இயக்குநர்கள் கூட எடுத்து வெற்றி பெற முடியும். ஆனால் நட்சத்திர நடிகர்கள் இன்றி இங்கே அது சாத்தியமில்லை.
 ஆகையால் மிக குறைந்த பட்ஜட்டில் எடுக்கப்படும் இப்படங்களில் நட்சத்திரங்கள் இணைய மாட்டார்கள். .தா., பாக்யராஜின் பெரும்பாலான படங்களில் நாயகன் தன்னையே தாழ்த்திக் கொள்கிற, தன்னிரக்கத்தை பகடியாக மாற்றுகிற பாத்திரமாக இருப்பான். எந்த நட்சத்திர நடிகர்களும் இப்பாத்திரங்களை ஏற்க முன்வர மாட்டார்கள். புது நடிகர்களை இட்டாலும் படத்தின் வணிக வெற்றிக்கு பயன்படாது. மிஷினின்ஓநாயும் ஆட்டுக்குட்டியும்ராமின்தங்க மீன்களும்கூட இப்படியே. ஆகையால் பாக்யராஜ் துவங்கி ராம், மிஷ்கின் வரை தாமே நாயகனாகி விடலாம் எனும் முடிவுக்கு வருகிறார்கள். இவர்களின் நடிப்பு கவனம் பெற ராம், மிஷ்கின் போன்றோர் பிற மாற்று படங்களில் நடிக்கத் துவங்குகிறார்கள். மாற்று / நடுநிலை சினிமா இன்மையின் காரணமாய் இப்படி இயக்குநர்கள் நடிகர்களாவதும் தமிழ் சினிமாவின் தனித்துவம்.

2)   கட்டியங்காரன் மனப்பான்மை: கடந்த ஐம்பதாண்டுகளில் இந்திய சினிமா பலமடங்கு வளர்ந்திருக்கிறது என்றாலும் அது தனது நதிமூலம், ரிஷிமூலத்தை மறக்கவில்லை. பாடல், இசை வழியாக கதையும் கருத்தும் சொல்வது, விதூஷகனுக்கு தனி இடம் அளிப்பது, இடைவேளை, கவனச்சிதறல் ஆகீயவற்றை கருத்தில் கொண்டு பொறுமையாய் கதையை நகர்த்துவது என பல விசயங்களில் நமது சினிமா தனது தெருக்கூத்து, மேடை நாடக மரபை இன்னும் கைவிடவில்லை. சமீபத்தில் ஸ்டாலின் ராஜாங்கம் (மின்னம்பலத்தில் வெளியான) ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவின் டைட்டில் மற்றும் அறிமுக பாடல்களில் உள்ள கூத்து அம்சங்களைப் பற்றி அழகாக எடுத்துக் காட்டி இருந்தார். இதே பாணியில் நமது இயக்குநர்களும் தம்மை தெருக்கூத்தின் கட்டியங்காரனாக கருதிக் கொள்வதை தமிழில் அதிகம் பார்க்கிறோம்.
கட்டியங்காரன் தான் தெருக்கூத்தின் மையம். அவனே பிற பாத்திரங்களை அறிமுகம் செய்வான். கூத்தை தொடங்கி வைப்பவன் கூத்தின் கதையை மக்களுக்கு விளக்குபவன், இடையிடையே தோன்றி வேடிக்கை காட்டுபவன், கூத்தினை முடித்து வைப்பவன் என ஆதியும் அந்தமமுமாய் இருப்பவன் அவன். பாரதிராஜா துவங்கி இன்றைய இயக்குநர்கள் வரை இந்த கட்டியங்காரன் வேடத்தை தம்மையறியாது ஏற்றுக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். கதையை ஒரு முன்கதை சுருக்கத்துடன் துவங்குவது, கதை நடுவே தோன்றி கருத்து சொல்வது, தம் இருப்பால் கதையின் போக்கு படம் முழுக்க சிதறாமல் இருக்க செய்வது, படத்தை முடித்து வைப்பது என நம் இயக்குநர்கள் தொடர்ந்து படம் பூரா இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதாவது இவர்கள் நடிக்காத போது கூட தமது கருத்துகள், நம்பிக்கைகள், ரசனை, விருப்பங்களை தமது நாயக பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். .தா., பாலசந்தரின் குணச்சித்திர / நகைச்சுவைப் பாத்திரங்கள் தொடர்ந்து இயக்குநரின் கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். நாடக பாணியிலான உரத்த வசனங்களை நாயகன் / நாயகி / வில்லன் குறித்து கூறுவார்கள். ”புதுப்புது அர்த்தங்களில்விவேக் சொல்லும்இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுஒரு உதாரணம். “புன்னகை மன்னனில்சாப்ளின் செல்லப்பாவின் கருத்துக்களும் இவ்வாறே இயக்குநரின் கொள்கைகளை விளக்குகின்றன. பின்னர் இதையே பேட்டிகளிலும் முன்வைத்து நாயகனும் மறைமுகமாய் தாமே என மாயாவி நடிகராய் தம்மை காட்டிக் கொள்கிறார்கள்.
 ஆக விவேக்கும் சாப்ளின் செல்லப்பாவும் எந்தளவுக்கு விவேக்காகவும் சாப்ளின் செல்லப்பாவாகவும் தெரிகிறார்க்ளோ அந்தளவுக்க்கு அவர்கள் பாலசந்தராகவுமே பார்வையாளர்களுக்கு தோன்றுகிறார்கள். மணிரத்னம் போன்று வெகுசிலரே தமிழில் இதற்கு விதிவிலக்கு. இவர்கள் தமது தனிப்பட்ட வாழ்வை, நம்பிக்கைகள், கருத்துக்களை தாம் எடுக்கும் படங்களில் இருந்து துண்டித்துக் கொண்டு தொழில்பூர்வ வேட்டேத்தித் தன்மையுடன் படமெடுப்பவர்கள். “கன்னத்தில் முத்தமிட்டாலில்மாதவனின் ஈழ ஆதரவு மணிரத்தினத்துடையது என நாம் கருதுவதில்லை. ஆனால் நாளை ராம் தனது படமொன்றில் நாயக பாத்திரத்தை இஸ்ரேல் குறித்து பேச வைத்தால் அது ராமின் கருத்தாகவே பார்க்கப்படும். “பாம்பேபடத்தில் கலவரத்தில் ஈடுபடும் இரு சாராரையும் தான் மணிரத்னம் சித்தரிக்கிறார். ஆனால் இஸ்லாமியர் கலவரத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்வதாய்ஹே ராமில்கமல் சித்தரித்த போது இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் பல எழுத்தாளர்களும் அதைக் கண்டித்தனர். “அது என் பார்வையல்ல, அது இந்துத்துவ மனப்பான்மை கொண்ட சாகேத் ராமின் இஸ்லாமிய வெறுப்பில் ஊறிய பார்வைஎன கமல் விளக்கலாம். ஆனால் நாம் அதை ஏற்க மாட்டோம். தனதுதேவர் மகன்”, “விருமாண்டிஆகிய படங்களின் வழி தேவர் சாதியினரின் வன்முறை கலாச்சாரத்தை முன்னெடுத்ததாய் கமல் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாவதுண்டு.
ஏன் மணிரத்னத்துக்கு தரப்படும் சலுகை கமலுக்கு கிடைப்பதில்லை? இதற்கான பதில் மணிரத்னத்தை ஒரு தேர்ந்த தொழில்நுட்ப கலைஞராகவும் கமலை ஒரு கட்டியங்கார கதைசொல்லியாகவும் தமிழ் பார்வையாளன் மதிப்பிடுகிறான் எனபது.
(தொடரும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...