முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Metooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே! (3)


Image result for victorian morality

மனித உறவுகளில் பல வீழ்ச்சிகளும் முரண்களும் சமரசங்களும் உண்டு. கராறான நல்லவன்கெட்டவன் எனும் இருமைக்கு ஆண்-பெண் உறவுகளில் பெரிய மதிப்பில்லை. நாம் நம்புகிறவர்கள், நாம் விரும்புகிறவர்கள் எல்லாம் நமக்கு நல்லவர்களே. தன் கணவன் ஒரு தோழிக்கு ஆபாசமாய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் உடனே ஒரு பெண் அவனை மன்னிக்கலாமா அல்லது அவனை விவாகரத்து பண்ண வேண்டுமா? ரேடிக்கல் பெண்ணியவாதிகள்எந்த சமரசமும் கூடாது, அவனை உதைத்து வீட்டை விட்டு துரத்துஎன்பார்கள். இந்தியாவில் எத்தனையோ குடும்பங்களில் கள்ள உறவுகளை ஜீரணித்து தாம்பத்ய பந்தங்கள் உயிர்வாழ்கின்றன

தாம்பத்யம் இப்படி மிக மிக சிக்கலான ஒன்று. மனிதர்கள் தொடர்ந்து உருமாறும் உயிர்கள். எளிய கட்டமைப்புகளைக் கடந்த பிரியமும் கருணையுமே நம் காதல்களை, தாம்ப்தயங்களை உய்விக்கின்றன. ஆனால் ரேடிக்கல் பெண்ணியவாதிகள் சிலுவை எடுத்துக் காட்டிஅப்பாலே போ சாத்தானேஎன கூவும் பாதிரியாரைப் போன்றவர்கள். ஆண்கள் எல்லாரும் சாத்தான்கள் எனும் போது சாத்தானுடன் சமரசம் பண்ணலாமா? கூடாது என்பார்கள் அவர்கள். ஹிலாரியின் சமரசம் என்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு, குடும்ப நலனுக்கு, தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு அவசியமாக இருந்திருக்கலாம். அவரை பெண்கள் பெருமளவில் ஆதரித்திருந்தால், இன்று டிரம்பின் பெண் நலனுக்கு எதிரான வலதுசாரி வரிச்சலுகை ரத்துகளை தவிர்த்திருக்க முடியலாம். அரசியல் என்பது எளிய மற்றமை உருவாக்கமோ, மற்றமையை கடுமையாய் வெறுத்து போருக்காக அறைகூவல் விடுக்கும் முனைப்போ அல்ல என்கிறார் சூசன். Metoo இயக்கத்தின் முக்கிய குறையாக இந்த இருமையைக் காணும் சூசன், இதைக் கடந்து வந்து பரந்துபட்ட அரசியல் சமூக பொருளாதார அக்கறைகளை அது உள்ளடக்க வேண்டும் என்கிறார். ஆனால் அதற்கு ரேடிக்கல் பெண்ணியம் கிறித்துவ மதவாத கதையாடலின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமே!
சரி செக்ஸ்-நேர்மறை பெண்ணியவாதிகளுக்கும் போர்னோ எதிர்ப்பாளர்களுக்குமான மோதலுக்கு வருவோம்.
அறுபது-எழுபதுகளின் போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பை விடுத்து ஏன் விபச்சாரத்தை தாக்கினார்கள்?
1)   குடும்ப அமைப்பு ஒப்பிடுகையில் ஆபத்து குறைவானது. ஆகையால் அதை தாக்க வேண்டியதில்லை.
2)   விக்டோரிய காலகட்டத்தில் இருந்தே ஓங்கி ஒலிக்கும் ஒழுக்கவாத குரல்கள் உருவாக்கி வைத்துள்ள செக்ஸ்-வெறுப்பு கதையாடலை இந்த போர்னோ-எதிர்ப்பு பெண்ணியவாதிகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டார்கள். குடும்ப செக்ஸை எதிர்ப்பது மிக மிக சிரமம், ஆனால் ஏற்கனவே அதிகார வர்க்கம் கண்டிக்கிற ஒழுக்க மீறல் செயலொன்றை (விபச்சாரம், போர்னோ) எதிர்ப்பது உடனடி வெகுமக்கள் ஆதரவை தமக்குப் பெற்றுத் தரும் என இவர்கள் அறிந்திருந்தனர்.
3)   தீவிர பெண்ணியவாதத்தில் உறைந்திருந்த பாலியல் ஒழுக்கவாதம், தூய்மைவாதம் (puritanism), ஒழுக்க எதேச்சதிகாரம் இந்த போராட்டங்களில் வெளிப்பட்டதாய் செக்ஸ்-நேர்நிலை பெண்ணியவாதியான எல்லென் வில்லிஸ் தான் 1981இல் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சொல்கிறார் (Lust Horizons: Is the Women’s Movement Pro-sex?).
மூன்றாம் அலை பெண்ணியம் போர்னோவை ஒரு குற்றமாய், ஆணாதிக்க நிகழ்த்தலாய் பார்ப்பதில்லை. இச்சையை முன்னெடுப்பது ஆதிக்க எதிர்ப்பின் முக்கிய உத்தி என மூன்றாம் அலை பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கான மென்-போர்னோ பரவலாக உள்ளது. இன்று தம்பதிகள் போர்னோவை செக்ஸுக்கு முன்பான ஒரு பிரதான ஊக்கியாக கருதுகிறார்கள். இன்று பெண்களுக்கு சேவை செய்யும் ஆண் விபச்சாரிகள் ஒவ்வொரு நகரத்திலும் (சென்னையில் கூட) இருக்கிறார்கள். ஆனால் இன்றைய கணிசமான ரேடிக்கல் பெண்ணிவாதிகள் போர்னோ எதிர்ப்பாளர்களே. செக்ஸை நான்கு சுவர்களுக்குள் முடக்குவதே சிறந்தது என நம்புபவர்களே. உதாரணமாய், ஒரு ரேடிக்கல், போர்னோ-எதிர்ப்பு பெண்ணிவாதியால் ரப்பர் ஆண்குறி போன்ற ஒரு செக்ஸ் பொம்மையை ஏற்க முடியாது. அவர்களைப் பொறுத்தமட்டில், ஆண்குறி என்பது அது ஒரு பொம்மை என்றாலும் ஒரு ஆதிக்க குறியீடே.
இன்றைய metoo இயக்கம் ரேடிக்கலான, போர்னோ-எதிர்ப்பு பெண்ணியத்தின் ஒரு நகலைப் போன்றே உள்ளது. ஆணுடலை ஆணாதிக்கமாகவும் செக்ஸை அச்சம் தரும் ஒன்றாகவும், பாலுறவை ஒடுக்குமுறையாகவும் காண்பவர்களாகவே இவர்களில் கணிசமானோர் தெரிகிறார்கள். ஆகையால் தான் நேரடியான பாலியல் அத்துமீறல்களை பதிவு செய்யும் போதே ஒரு ஆணின் செக்ஸ் விருப்ப வெளிப்பாட்டை, அவன் பெண்ணுடலை உற்றுப் பார்ப்பதை, அவன் அவளிடம் வழிவதை, ஒரு பெண்ணின் தோற்றத்தை அவன் பாராட்டுவதை எல்லாம் ஒரு மறைமுக வன்முறையாய், மென்மையான பலாத்காரமாய் இந்த இயக்கம் பார்க்கிறது; பெண்ணின் கழுத்துக்குக் கீழ் ஒரு நொடி பார்த்தவனைக் கூட ரேப்பிஸ்டாக முத்திரை குத்துகிறது. ஒரு திருமணமான ஆள் / அந்நியன் / நண்பன் ஒரு பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் காதல் கடிதம் எழுதினால், அதற்கு அவளது பதிலை வினவினால் அதை பாலியல் ஒடுக்குமுறையாய் metoo போராளிகள் பார்க்கிறார்கள்.
உடல்மொழியிலோ பார்வையிலோ சொற்கள் வழியாகவோ பெண்ணிடம் விருப்பம் தெரிவித்தாலே அது மறைமுக பலாத்காரம் எனும் கதையாடல் இன்று ஏன் metooவினால் வலுப்பெற்றுள்ளது என நாம் யோசிக்க வேண்டும்.
ஆண்கள் தமது செக்ஸ் விழைவுகளை, இச்சையை அடக்கிக் கொள்ள வேண்டும். பெண்ணாகவே நேரடியாய் விரும்பி வேண்டாத வரை ஆண்கள் தம் இச்சையை காட்டுவது தப்பாகும். ஏன்?
 ரேடிக்கல் பெண்ணியவாதிகளின் வாதம் இப்படிப் போகும்: “செக்ஸ் என்பது ஆண் அதிகாரம் வெளிப்படும் செயல்பாடு. ஆக ஆண் அதிகாரத்தை எதிர்க்க பெண்கள் முதலில் செக்ஸை எதிர்க்க வேண்டும். ஒரு ஆண் தனது விருப்பத்தை காட்டும் போது தன் அதிகார ஆயுதத்தையே பெண்ணை நோக்கி உயர்த்துகிறான். பெரும்பாலான பெண்கள் ஆண் அதிகாரத்தை அஞ்சியே ஆண் விருப்பத்துக்கு உடன்படுகிறார்கள். சில பெண்கள் இதை அறிந்தும் சிலர் அறியாமலும் செய்கிறார்கள்.”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...