முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புகைக்கும் பெண் (3)


Image result for smoking in bollywood
பாலிவுட்டில் சிகரெட்
பாலிவுட்டில் 1943இல் அஷோக் குமாரும் (“கிஸ்மத்”), 1954இல் தேவ் ஆனந்தும் (“டாக்ஸி டிரைவர்”) சிகரெட்டை ஒரு ஸ்டைலான எதிர்நாயக குறியீடாக நிறுவினர். நாற்பது, ஐம்பதுகளில் நிழலுலக படங்களின் அலட்சிய தொனி, கலகம், வன்மம் ஆகியவற்றை சிகரெட் புகையே திரையில் சித்திரமாய் வரைந்தது. “ஹவ்ரா பிரிட்ஜ், “நைட் கிளப், “இன்ஸ்பெக்டர் ஆகிய படங்களை உதாரணம் காட்டலாம். இதன் பிறகு எழுபது, எண்பதுகளில் அமிதாப் பச்சன் தனது சமூக கோபம் மிக்க நாயகன் எனும் பிம்பத்துக்கு புகையும் சிகரெட்டை ஒரு சின்னமாக்கினார். “கூலி, “தீவார், “ஷோலே ஆகிய படங்களை சுட்டிக் காட்டலாம்


தொண்ணூறுகளில் பாஸிகரில் ஷாருக்கானும், “கல்நாயக்கில் சஞ்சய் தத்தும் சிகரெட் ஏந்தி சீறும் சிங்கங்கள் ஆயினர். இப்படி எதிர்நாயக பிம்பமும் சிகரெட்டும் தாயும் சேயுமாக ஒன்றிணைந்த பின்னர், நாயகிகள் மற்றும் நடிகைகள் விசயத்திலும் புகை விளையாடியது. 1975இல் வெளியானமௌசம்முதல் ரெண்டாயிரத்தின்சமேலி”, “சாந்தினி பார்”, “தெ டெர்ட்டி பிக்சர்ஆகிய படங்களை வரை எதிர்-நாயகிகள், கவர்ச்சிக் கன்னிகள், குலுக்கல் நடிகைகள் ஆகியோருக்கான குறியீடாக சிகரெட் உதடுகளில் நடுவே புகைந்தது; விரல் இடுக்கில் அமர்ந்து ஆண்களை அது சீண்டியது.
தடைச்சட்டம்
இந்த சிகரெட் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது 2005இல் உடல்நல மற்றும் குடும்பநல அமைச்சகம் கொண்டு வந்த சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டம். இதன்படி ஒரு படக்காட்சியில் சிகரெட் காட்டப்பட்டால் கூடவே சிகரெட்டின் தீங்கு பற்றின வாசகம் ஒன்றையும் (சிகரெட் உயிருக்குக் கேடு / சிகரெட் புகைப்பது புற்றுநோயை உண்டாக்கும்) கீழே காட்ட வேண்டும். திரை விமர்சகர் அமிதவா நாக் இந்த சட்டமே சிகரெட் திரைச்சட்டகங்களில் மாயமாகி வருவதற்கு முக்கிய காரணம் என்கிறார். மதுவருந்தப்படும் காட்சிகளில் எச்சரிக்கை வசனம் காட்டப்பட வேண்டும் எனும் விதிமுறை 2014இல் கோண்டு வரப்பட்டது; ஆனால் இது மதுவருந்தும் காட்சிகளை குறைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆக, தடைச்சட்டம் மட்டுமே சிகரெட்டின் மறைவுக்கு காரணமல்ல.
நடப்புலகில் சிகரெட்டும் பெண்களும்
இங்கு நான் மற்றொன்றை குறிப்பிட வேண்டும்: தொண்ணூறுகளை விட இன்றே நகரங்களில் பொதுவெளியில் இளம்பெண்கள் புகைபிடிக்கும் காட்சிகளை அதிகம் நாம் காணுறுகிறோம். பெண்கள் பொதுவெளியில் புகை வளையங்களுடன் தோற்றமளிக்க ஆரம்பித்ததும் இவர்களை சிகரெட்டுக்காக கேலி செய்து சீண்டி நாயகன் மிரட்டும் டெம்பிளேட் தமிழில் காணாமல் ஆகி விட்டது. ஆணோ பெண்ணோ பொதுவெளியில் சிகரெட்டுடன் தோன்றுகையில் சினிமாவில் அவர்கள் சினிமாவில் அவ்வாறே தோன்றுவது குறைந்து விடுகிறது. (எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வண்ணமல்ல ஒரு குறியீடாகத் தான் சிகரெட் நம் கலை வடிவங்களில் வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று.)
இலக்கியத்தில் சிகரெட்
பாலிவுட்டிலும் ஓரளவு தென்னிந்திய படங்களிலும் பைப் பிடிப்பது சற்றே எலைட்டான வில்லன்களுக்கும் அலட்சியம் தொனிக்கும் உயர்த்தட்டு குணச்சித்திர ஆண் பாத்திரங்களுக்கும் உகந்ததாக இருந்து வந்துள்ளது. தமிழ் எழுத்தாளர்களில் சதா பைப்புடன் நாம் அடையாளப்படுத்தும் ஒருவர் பாரதி மணி. சொல்லப் போனால் பாரதி மணி உயிர்மையில்பல நேரங்களில் பல மனிதர்கள்தொடர் எழுதக் காரணமே பைப் தான் என மனுஷ்யபுத்திரன் ஒருமுறை என்னிடம் சொன்னார். அந்த கதை இப்படிப் போகிறது: ஒரு மது சந்திப்பில் எழுத்தாளர்கள் சிறு சிறு கூட்டங்களாய் பிரிந்து போதையில் சலம்பியபடி இருக்க பாரதி மணி எனும் முதியவர் மட்டும் ஸ்டைலாய் தனியனாய் கையில் பைப்புடன் இருக்கிறார். அந்த காட்சியை கண்டு ஈர்க்கப்படும் மனுஷ்யபுத்திரன் அவரிடம் உரையாடுகிறார். பாரதி மணி அபூர்வமான ஆளுமை என உணரும் அவர் அவரை தன் உயிர்மை பத்திரிகையில் ஒரு தொடர் எழுதும்படி வேண்டுகிறார். பாரதி மணியும் எழுதுகிறார்; தமிழுக்கு ஒரு கூர்மையான சுவாரஸ்யமான கட்டுரையாளர் பிறப்பெடுக்கிறார். ஆனால் இத்தனைக்கும் பாரதி மணி முகத்தில் அறையும் கலகவாதி அல்லஇனிமையான விளையாட்டுத்தனமான கனிவான மனிதர். அதேநேரம் அவர் வித்தியாசமானவர்; யாரையும் பிரதியெடுக்காதவர்இதற்கான ஒரு குறிப்பானாக அவரது பைப் இருந்திருக்கிறது. இதை கவனித்து உள்ளுணர்வு ரீதியாய் கண்டுணர்ந்து மனுஷ்யபுத்திரன் அவரை பத்தியெழுத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். இதைப் பற்றி யோசிக்கையில் எனக்குள் இக்கேள்வி எழும்: சிகரெட் / பைப்பின் குறியீடு சினிமாவில் மட்டுமல்ல இலக்கிய உலகினுள்ளும் ஒரே போலத் தான் இருக்கிறது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள இரு வகைமைகளில் பாரதி மணி எலைட்டான வில்லனாக வர மாட்டார்; அந்த பைப்புடன் அவரது படம் காண்கையில்அலட்சியம் தொனிக்கும் குணச்சித்திர நடிகராகஅவரை நாம் வாசகர்கள் ஆழ்மனதில் கண்டுணர்கிறோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...