முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டும் இந்துத்துவ-பெண்ணிய கைகோர்ப்பும்


பெண்ணியத்துக்கும் ஹிந்து தேசியவாதத்துக்கும் உள்ள தொடர்பு வெகுநுட்பமானது. பெண்கள் தம்மை ஒரு அதிகாரத் தரப்பாக உணரும் காலகட்டம் ஒன்றில் அவர்கள் ஒழுக்கவாதம் எனும் ஆண் ஆயுதத்தை எடுத்து ஆண்களுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள். மற்றொரு பக்கம் இந்துத்துவர்களும் இதே ஒழுக்கவாதத்தைக் கொண்டு சுதந்திரவாதத்தை தாக்குவார்கள். ஆண்-பெண் உறவு குடும்ப ஒழுக்கவியலில் இருந்து பிறழக் கூடாது எனும் ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உள்ளதை நாம் காண வேண்டும். ஐரோப்பாவிலும் ஒரு காலத்தில் தேவாலயத்தின் பின்னணியில் தான் முதல் தலைமுறை பெண்ணியவாதிகள் ஒழுக்க சுத்தீகரிப்பை மேலெடுத்தார்கள். அது பின்னர் பால் சமத்துவ இயக்கமானது. முகிலன் விவகாரத்தில் நாம் இதை இன்று அப்பட்டமாக காண்கிறோம். இன்று பெண்ணிய ஆயுதம் சுல்பமாய் இந்துத்துவர்களின் கையில் போகிறது. சற்று முன்பு தான் ஒரு தலைமை நீதிபதியை இதே சிலுவையில் அறைந்தார்கள். போராளிகள் எல்லாம் பெண் விசயத்தில் பொறுக்கிகள் என தாமரை இப்போது சொல்லுவதில் எனக்கு அதிர்ச்சி இல்லை
பெண்ணியவாதிகளுக்கும் இந்துத்துவர்களுக்குமான இலக்குகள் வேறு, ஆனால் ஆயுதம் ஒன்றே.

சில மாதங்களுக்கு முன்பு மீ டூ குறித்தான ஒரு கட்டுரையில் நான் இதைப் பேசிய போது பலரும் ஒத்துக் கொள்ளவில்லை. இன்று பலரும் சொல்கிறார்கள், விக்டோரிய ஒழுக்கவாதத்தை சில பெண்ணியவாதிகள் முன்னெடுக்கிறார்கள் என்று. இதை நாம் மேலும் விரிவாக விவாதிக்க வேண்டும். அல்லாவிட்டால் பெண்ணியத்தை முழுக்கவே ஒழுக்கவாதிகள் ஹைஜேக் பண்ணி விடுவார்கள். அதற்கு முதல் படியாக பெண்ணியவாதிகள் செய்ய வேண்டியது பெண்ணியத்தை பாலியல் சர்ச்சைகளில் இருந்து விடுதலை பண்ணி, சமூக அரசியல் ஏற்றத்தாழ்வுகளின், இயங்கியலின் பின்னணியில் வைத்து விவாதிக்க ஆரம்பிப்பது. செக்ஸில் மட்டும் தானா ஒடுக்குமுறை நடக்கிறது?

இப்பிரச்சனை குறித்து இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே
நேற்று ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆண்களுக்கு இது ஒரு பெரிய பலவீனம்தானே என்றார். அவர் சொன்னது முகிலன் விவகாரத்தை மனதில் வைத்து...

எனக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் நுட்பமான சிக்கல்கள் நிறைய உள்ளன. நாம் இன்னமும் பாலியல் சார்ந்த உரையாடல்களில் போன நூற்றாண்டு மதிப்பீடுகளையே கொண்டிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள் இதில் மிகவும் தடுமாறுகிறார்கள். ஒரே சமயத்தில் விடுதலையும் கட்டுப்படுதலும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண் பாலியல் விடுதலையை முன்வைக்கும் அளவுக்கு பெண்ணுக்கு அது ஏனோ சாத்தியமாகவில்லை. எவ்வளவு முற்போக்கான பெண்ணியம் பேசும் பெண்களும் ஒரு கட்டுப்பெட்டியான பெண்கள் போலவே இவ்விஷயத்தில் சிந்திக்கிறார்கள்

அடல்ட்ரி என்றோர் விஷயம் உண்டு. அது இருவருக்கும் இடையே அந்தரங்கமானது. ஒரு கட்டத்தில் உறவு வரைக்கும் தயாராகும் பெண் அதிலிருந்து வெளியேறியதும் அதன் மொத்தக் குற்றக்கணக்கையும் ( அது குற்றமா என்ன) ஆணின் தலையில் கட்ட விழைவது துரதிர்ஷ்டம்

அவன் சமூக செயல்பாட்டாளனாகவோ, கலைஞனாகவோ, பொது வாழ்வில் இருப்பவனாகவோ இருந்துவிட்டால் ஒட்டுமொத்த சமூகமும் விக்டோரிய ஒழுக்கவாதத்தை கையில் எடுக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் அந்தரங்கமாய் அதை மீறுபவர்கள்கூட கூச்சமின்றி கல்லெடுக்கிறார்கள்ஆண் நிர்தாட்சண்யமாய் கழுவில் ஏற்றப்படுகிறான். அவனின் இதுவரையான போராட்டங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் யாவும் வெறும் பெண் பிடிக்கும் தந்திரமென குறுக்கப்பட்டு காறி உமிழப்படுகிறது.


அவனின் அரசியல் எதிரிகளுக்கும், தத்துவ எதிரிகளுக்கும் இந்த முட்டு சந்து வாகாய் இருக்கிறது. அவனை பேசவே விடாமல் இதில் வைத்து வெளுத்துக்கட்டிவிடுகிறார்கள்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...