முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (1)

இல்லைஎன குழந்தையிடம் கேட்டாலும் சொல்லி விடும். ஆனால் பேஸ்புக்கில் செந்தில்வேல் என்பவர் இது போன்ற உதாரணத்தை வைத்து இலக்கியம், இலக்கியமற்றது எனும் தரம் பிரித்தலும் சரியே என வாதிட்டிருந்தார். இது போன்ற பார்க்கஅடடேஎன சொல்ல வைக்கும் வாதங்கள் அடிப்படையில் பிழையானவை. ஏனென சொல்கிறேன்

சினிமாவைப் பொறுத்தமட்டில் சங்கர் கணேஷும் ராஜாவும் வணிக இசையமைப்பாளர்களே. அவர்களுக்கான மரியாதை ரசிகர்கள் மத்தியில் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைத்தால் அப்படத்தை சீண்ட மாட்டோம் என எந்த தொழில்நுட்ப கலைஞரோ சக இயக்குநர் நடிகர் பாடகர் சொல்ல மாட்டார்கள். பாடல் நன்றாக அமைந்தால் அதை ரசிப்பார்கள், கொண்டாடுவார்கள்; இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள். இதே விதிதான் ராஜாவுக்கும். ஆனால் இலக்கிய எழுத்து, இலக்கியமற்ற சமரச எழுத்து எனும் பாகுபாட்டின் பிரச்சனை அதில் ஒரு தூய்மைவாதம் உள்ளது, அது ஒரு மற்றமையை முன்னெடுக்கிறது என்பது
.தா., ஏன் சு.ரா சிறந்தவர் எனக் கேட்டார் அவர் இலக்கியவாதி, பாலகுமாரனைப் போல சமரசம் பண்ணாதவர்  என ஒருவர் சுலபமாக முகாம் பிரித்து விடுவார். இங்கு ஒரு பிரதி அதனளவில் அனறி அதன் மற்றமையை (வெகுஜன வாசிப்பு) பொறுத்து மதிப்பு பெறுகிறது. சு.ரா அவரைப் போன்று எழுதாதவர்களால் மதிப்படைகிறார். அது தவறு - சு.ரா என்ற பெயரை நீக்கி விட்டு அவரை வாசித்து மதிப்பிட நம்மால் இயல வேண்டும். அவர் யார் அல்ல என்பது அவரை தீர்மானிக்க கூடாது. (இதற்கு அடுத்து, சு.ராவின் நவீனத்துவ ஸ்டைல், அவரது புறவடிவத்தின் சங்கதிகளைத் தாண்டி வெறும் ஆழ்மனப் பாய்ச்சலாக, சிக்கலான மொழி அமைப்பாக அதைக் கண்டு நம்மால் அதனுள் பயணிக்கவும் மதிப்படவும் முடிய வேண்டும். உணர்ச்சியற்ற, உருவக நடையில் எழுதியுள்ளார் என்பதால் மட்டுமேஆனா இலக்கியம்என கூவினால் அது சிறுபிள்ளைத்தனமான வாசிப்பு.)
 ஒரு வெகுஜன எழுத்து மேடையில் நீங்கள் வீற்றிருந்தால் நீங்கள் எழுதுவது தரமற்றது என நான் முடிவெடுப்பேன் என ஒருவர் சொல்வது (ஜெயமோகனைப் போல்) வெகுஜன எழுத்தை மற்றமையாக வைத்து இலக்கியத்தை மதிப்பிடும் ஒரு மேம்போக்கான காரியம் ஆகி விடும். இந்த நிலைப்பாடே இலக்கிய விரோதமானது.
பரங்கிமலை ரயில்நிலையம்எழுதி கடந்த வருடம் அமேசான் கிண்டில் போட்டியில் பரிசு வென்ற சென் பாலனை கார்ல் மார்க்ஸ் நிராகரிப்பதும் இப்படியே இருக்கிறது
சென் பாலன் தான் ஒரு இலக்கியவாதி அல்ல, வெகுஜன எழுத்தாளன் அல்ல என்கிறார். கார்ல் மார்க்ஸ் ஒரு வெகுஜன படைப்பாகவும் உங்கள் நாவல் தரமாக இல்லை என்கிறார். அதன் பிறகு தன்னை மருத்துவராகவும் சென் பாலனை ஒரு நோயாளியாகவும் கற்பித்து தனது விமர்சனம்கடுமையாகத் தான் இருக்கும்என்கிறார். ஒரு விமர்சகன் தன்னை மருத்துவராக கருதும் அளவுக்கு நம் சூழல் அவ்வளவு விஷமாக மாறி விட்டதா? கடவுளே! ஒரு மருத்துவன் ஒரு நோயாளியை கருணைக்கொலை பண்ணலாம், அவனது உறுப்பை வெட்டி நீக்கலாம். நீங்களெல்லாம் இலக்கிய அதிகாரம் பெற்றால் இதையே தான் எழுத்தாளனுக்கும் பண்ணுவீர்களா?
 சென் பாலனின் அரசியல் நிலைப்பாடுகள் அவரது புனைவில் வெளிப்படையாக, பிரச்சார உத்தியாக வந்துள்ளது என்பது கார்ல் மார்க்ஸின் குற்றச்சாட்டு. இதைசுரண்டல்என்கிறார். இதுவே ஒரு தட்டையான பார்வை தான். “சுரண்டாமல்நீங்கள் எழுதவே முடியாது. புலப்படாமல் நாசூக்காக சுரண்டலாம், சென் பாலனைப் போன்று வெளிப்படையாக பண்ணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் தமிழில் பெண் பாத்திரங்களை மட்டும் எடுத்துப் பாருங்கள். அதில் இல்லாதசுரண்டலா”? தஸ்தாவஸ்கியின்பேதைநாவலில் அவர் கர்த்தரின் பிம்பத்தில் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மாவாக பிரதான பாத்திரமான மிஷ்கினை காட்ட முயன்றுசுரண்டிஇருப்பார். தஸ்தாவஸ்கி ஒரு மேம்பட்ட படைப்பாளி என்பதால் மிஷ்கினின் குழப்படிகள், முரண்பாடுகளையும் அந்த மேன்மையான பிம்பத்துடன் கொண்டு வருவார். இப்போது அது கர்த்தரை போற்றும் பிரச்சார எழுத்தாக தோன்றாது. ஆனால் அதன் அடிவேர் இறங்கி நிற்பது சுரண்டலில் தான். அவரது வாசகர்கள் யாருமே கிறித்துவர்கள் அல்லவென்றால் அவர் அப்படி அப்பாத்திரத்தை அமைக்க மாட்டார். “குற்றமும் தண்டனையில்சோனியா பதின்வயது விபச்சாரி. ஆனால் அவளது இளம் உடல் அவளை அப்பழுக்கற்றவளாக மனதளவில் காட்ட, கர்த்தருடன் ஒப்பிட உதவுகிறது. இதுவே சோனியா அறுபது வயது கிழவி என்றால் அப்படி காண்பித்தால் எடுபடாது. “கரமசோவ் சகோதரர்கள்நாவலின் முடிவில் அவர் எதிர்கால நம்பிக்கையை குறிப்புணர்த்த குழந்தைகளை பயன்படுத்தி இருப்பார். குழந்தையை கண்டாலே புத்துணர்ச்சி, நம்பிக்கை, களங்கமற்ற வாழ்க்கை சாத்தியம் என நம் மனிதமனம் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறது. தஸ்தாவஸ்கி இதை வைத்து நம்மைசுரண்டுகிறார்”. தஸ்தாவஸ்கி மனித உடல்களை பயன்படுத்தும் விதத்தை நாம் உற்று கவனித்தாலே அதில் நிறைய சுரண்டல்களை நாம் கவனிக்கலாம். கார்ல் மார்க்ஸ் தன் எழுத்தை பரிசீலித்தால் அதிலும் காணலாம்

சுரண்டுவது என்பது அசைவம் சாப்பிடுவது போல. கறிக்கடையில் நின்று கோழியை ஒருவர் நீரில் அமுக்கி கொன்று கழுத்தை வெட்டுவதை எல்லாம் பார்த்து வாங்கி வருவது வெகுஜன படைப்பு; அதையே பிரியாணியாக யாரோ சமைத்து கவிச்சி வாடை இன்றி நெய்மணக்க மென்மையாக ஆக்கி தந்தால் அது உயர் இலக்கியம். இரண்டுக்கும் வித்தியாசம் அதன் தீவிரத்தில் என்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிரச்சார நெடி என்பது ஒரு தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் தான் என்பதற்காக இந்த உதாரணத்தை தருகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...