முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கர் கணேஷும் இளையராஜாவும் ஒன்றா? (2)

பிரச்சாரமாக இல்லாத ஒன்று எப்படி இலக்கியமாகாதோ அதே போல பிரச்சாரமாக இருப்பதால் ஒன்று இலக்கியமல்லாமல், படிக்க அருகதை அற்றதாக ஆகாது. கார்ல் மார்க்ஸ் உங்களுடையது ஒருவித அலெர்ஜி. அது விமர்சன நோக்கு அல்ல. சொல்லப் போனால் அது ஒரு பிழையான வாசிப்பு முறை.
சென் பாலனும் எழுதி முதிர்ந்த பின் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த தளுக்கையெல்லாம் பழகிக் கொள்வார் எனலாம். ஆனால் அது மட்டுமே அவரை தரமானவராக்காது. (தரம் என்பது சிடுக்கு, உள்முரண், சிக்கல்கள், கட்டற்ற பாய்ச்சல் மட்டுமே. அது தலையை படிய வாரிக் கொள்வது அல்ல. அது புறவடிவத்தையும் கடந்தது.)


 இதே தட்டையான பார்வையை வைத்து நீண்ட காலமாக தி.ஜாவையும் வண்ணதாசனையும் நாம் பின் வாசலில் நிறுத்தி இருந்தோம் (அதற்காக சென்பாலனும் திஜாவும் ஒன்று என நான் சொல்ல வரவில்லை). ஒருவர் பரவலாக படிக்கப்பட்டாலே அவர் மேம்போக்கானவர், மலினமானவர் என நினைக்க தலைப்பட்டோம். நாம் இந்த குறுகியவாதத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்
செந்தில்வேல் போன்றவர்களிடம் திரும்ப வருகிறேன்: நியாயமாக, தர்க்கரீதியாக, சங்கர் கணேஷை இளையராஜாவிடம் அல்ல சங்கீத மும்மூர்த்திகளுடன் ஒப்பிட வேண்டும். அதை செய்ய மாட்டீர்கள். அதை கற்பனையே பண்ண முடியாது என நினைப்போம். ஆனால் சாஸ்திரிய இசையை நன்கு அறிந்தவர்கள் வெகுஜன இசை மேடைகளுக்கும் வருகிறார்கள். நித்யஶ்ரீ, ஜக்ஜீத் சிங் போன்றவர்கள் இரண்டு மேடைகளிலும் புழங்குகிறார்கள். இரண்டு இசையும் அதன் தீவிரத்தை பொறுத்து ஒன்றல்ல என அறிவார்கள் அறிவார்கள். ஆனால் இரண்டு இசையிலும் நாம் ரசிக்கத் தக்க அம்சங்கள் உண்டு, மரபார்ந்த இசை சில நேரம் தட்டையாகவும் சினிமா இசை உணர்வுரீதியாக மனதை அசைப்பதாகவும் ஆழம் கொண்டதாகவும் அமையலாம் என அறிவார்கள். இளையராஜா தனது பேட்டி ஒன்றில் தன்னால் சின்ன சின்ன சப்தஙக்ளிலும் இசையை உணர முடிந்ததுண்டு, அப்படியே தனது பதின்பருவ இசைப்பயிற்சி துவங்கியது என சொல்லி இருக்கிறார்


வித்தியாசங்களே இல்லை என நான் கூறவில்லை; ஆனால் வித்தியாசங்களை தர அளவுகோல்களாக மாற்ற வேண்டாம் என்கிறேன். ஒருவர்நான் பேஸ்புக்கில் எழுதுவது எதையுமே படிக்க மாட்டேன்என்றால் அவர் சில நல்ல கவிதைகளை, சுய அனுபவ பதிவுகளை, தீவிர அரசியல் தத்துவ குறிப்புகளை இழந்து விடுவார். வெகுஜன எழுத்தை ஒரேயடியாக நிராகரிப்பவருக்கும் இதுவே நடக்கும். நீங்கள் ஒரு ஊரில் வசிக்கிறீர்கள். அங்கு சாதி வெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் முற்போக்காளர். நீங்கள் சாதி வெறியை எதிர்க்கிறீர்கள். நீங்க இந்த அடிப்படையில் அவர்களிடம் பேசாமலே தவிர்த்தால் இழப்பு உங்களுக்குத் தான். இந்த உலகில் சிலர் அழகானவர்கள், சிலர் அழகற்றவர்கள். சிலர் மென்மையானவர்கள், சிலர் முரடர்கள். ஆனால் நாம் அழகானவர்களால், மென்மையானவர்களால் மட்டும் ஈர்க்கப்படுவதில்லையே. வித்தியாசங்களை கடந்து செல்வதே மானுட வாழ்வு. வித்தியாசங்களை கடந்து பார்ப்பதே இலக்கிய நோக்கு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...