முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செயலியை பயன்படுத்துவதும் காதலிப்பதும் ஒன்றா?


ஶ்ரீவள்ளியின்பொல்லாத மைனாக்கள்தொகுப்பு குறித்து பேசிய பா.வெங்கடேசனின் உரை ஒரு சிறப்பான தீவிரமான உரையாடல் (https://m.youtube.com/watch?v=Fr_SQpsarDQ&fbclid=IwAR0dGW-DHYygDurttPeh1X-ZlxJwj_tr0mhvp5SuAfAAk5UCt83b4nXg7bo). அதை ரசித்தேன். அதேவேளை அவருடன் என்னால் உடன்பட முடியாத சில புள்ளிகளும் உண்டு. என்னென்ன?

ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ள சங்கக் கவிதை நீட்சியை நாம் அறிவோம். அதன் உன்மத்தம், உள்முரண், பித்து நிலை, பரவசம், துயருற்றவாறே அதில் மீட்சி விழையாவது திளைத்தல் ஆகியவை, அதே நேரம், ஆதி தமிழ்க்கவிதையின் இயல்புகள் அல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்த அம்சத்தை பா. வெங்கடேசன் அழகாக சுட்டிக் காட்டி இருந்தார். எனக்கு இருந்த ஒரே மனக்குறை அவர் பிடிவாதமாக இந்தமைனாக்களைபின்நவீன பிரதிகளாக மட்டும் கூண்டிலிட்டு பூட்டி ரசிக்க பார்க்கிறார் என்பது. கவிதையில் எப்போதுமே மைனாக்கள் சுதந்திரமாகவே இருக்கும் என்பதை அவர் மறந்து விட்டார்.


 .தா., பிரிவின் கடும் துயரில் ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி ஒரு மனத்திளைப்பை உணர்கிறார். நீ இல்லை என்னுடன் என்னுடம் எனும் போது இந்த பிரிவு சீக்கிரம் முடியட்டும் என அவசப்படுபவர், நீ இருக்கிறாய் என்னுடன் எனும் போதுசீக்கிரம்போய் விடு என அவசப்படுத்துகிறார். இதே நிலையை நீங்கள் பாப்லோ நெருதாவின் பல கவிதைகளில் காண முடியும். “இன்றிரவு துயர்மிகு வரிகளை எழுதப்போகிறேன்ஒரு உதாரணம்.
 காதலி இல்லாத அந்த கடும் தனிமையான இரவில் அவள் காதலின் இழப்பை பேசும் போது அதை ஒரு சிறிய கொண்டாட்டமாக, அவள் இல்லாதிருப்பதில் அவள் இருப்பதை ரசித்து சிலாகிப்பதாக குறிப்புணர்த்துவார் நெருதா. அந்த துயரகவிதையை நாம் தொடர்ந்து ரசிப்பதன், அதை மீள மீள மொழியாக்குவதன் காரணம் அது தான். கூரை எரிந்து விட்டது, இனி நிலவை நன்றாக பார்க்கலாம் எனக் கோரும் பாஷோவின் ஹைக்கூவும் ஓரளவுக்கு இந்த மனநிலை கொண்டது தான் (இயற்கை ரசனை, இக உலக வெறுப்பு எனும் கட்டமைப்பை தாண்டி பார்த்தோமானால்). 
இதைப் பற்றி பேசும் போது தெரிதா சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். இருப்பது, இல்லாமல் போவது (presence - absence) என்பவை மொழியின் அடிப்படை செயல்பாட்டில் உறைந்துள்ள ஒன்று என்கிறார். நீங்கள் ஒரு சொல் மூலம் (யானையை பார்க்கப் போன குருடர்களின் கதையைப் போல) அதை முழுக்க உணர்த்துவதில்லை - அது இருக்கிறது எனும் போதே அது இல்லை என்பதையே சேர்த்தே சொல்கிறோம் என்கிறார். (அவர் கையெழுத்து என்பதை உதாரணமாக காட்டுகிறார். கையெழுத்திட்டவர் இல்லை என்றாலே கையெழுத்துக்கு மதிப்பு தோன்ற முடியும். நீங்கள் கையெழுத்திடாத ஒரு காசோலையை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுஇது நான் தான்என சொன்னால் ஏற்க மாட்டார்கள்.) ஶ்ரீவள்ளியின் பிரிவுத் துயரம் கூட அது உணர்த்தும் பொருளில் தொடர்ந்து இருந்தும் இல்லாமல் ஆகியிருக்கிறது என்பதாலே அது தொடர்ந்து வாசிக்கையில் இன்பமளிக்கிறது. இது மொழியின் அடிப்படையான சுபாவம். இது ஒரு பின்நவீன இயல்பு மட்டுமல்ல. எல்லா காலத்திலும் நாம் அப்படித் தான் இருந்திருக்கிறோம்.

ஶ்ரீவள்ளியின் இச்சையைப் (அல்லது பிரிவு துயர் அல்லது காதல் இன்பம்) பற்றி பேசும் போது அது தொடர்ந்து ஒன்றை அடையாமல் தள்ளிப் போடும், தள்ளிப் போடுவதன் மூலம் அந்த கணத்தில் ஆழ்ந்து போய் அனுபவிக்கும் நிலை என பா. வெங்கடேசன் அழகாக அவதானிக்கிறார். அவர் இதை தொழில்நுட்பம் கட்டமைக்கும் சுயம் / மனநிலை என சொல்வதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை

ஏனென்றால் நீங்கள் இந்த உள்முரணை, திளைப்பை, பரவசத்தை உணர தீவிர உணர்வுநிலைக்கு செல்ல வேண்டும். காதல் பிரிவில் தவிப்ப்பது, மனம் சிதறி கலங்குவது, தன் கண்ணீரில் உப்பு சுவையில் ஒரு வெம்மையை இன்பத்தை அறிவது என்பதும் ஒரு மொபைல் செயலி மூலம் தனது தற்படத்தை பதிவேற்றி குதூகலிப்பதும் ஒன்றல்ல. தொழில்நுட்பம் நம்மை இன்று எந்த தீவிர எதிர்நிலைக்கும், முரண் நிலைக்கும் செல்ல முடியாமல் ஒருவித தட்டையான உணர்வுநிலைக்குள் சிறைவைத்திருக்கிறது என்பதே உண்மை. நெடுஞ்சாலை பயணத்தின் போது மோட்டலின் ரம்மியமான சூழலில் காப்பி அருந்துவதும் (வெங்கடேசனின் உவமை) காதலியின் மடியில் கிடந்து உன்மத்தத்தை உணர்ந்தபடி அதில் தான் இருப்பதை உணர்ந்து துணுக்குறுவதும் நேர் எதிரான மனநிலைகள்

இன்றைய காலம் என்பது தன்னிலை முன்னிறுத்தப்படும் காலம் என பா. வெங்கடேசன் ஆரம்பத்தில் சொல்கிறார். அடுத்து, இந்த தன்னிலையின் பெயரிலேயே இன்று வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் அறியப்படுவதை விவரிக்கிறார். இன்று பொதுக்கருத்து என ஒன்று இல்லை, சாராம்சமான கருத்துநிலை என்பதே, ஒருவர் தான் காண்பதே தனதுண்மை என நம்புவதாக அது மாறி உள்ளது என்கிறார். ஆனால் அவரே தான்தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட தன்னிலைஎன ஒரு பிரயோகத்தை வைக்கிறார். தன்னிலை அவ்வளவு சுதந்திரமாக தான் காண்பதே தனக்கான உண்மை என கருத வாய்ப்பு உண்டென்றால் அந்ததான்எப்படி மற்றொன்றால் (தொழில்நுட்பம்) கட்டமைக்கப்பட்ட தன்னிலையாக இருக்க முடியும்? அது சுதந்திரமாக, சுயகட்டமைப்பாக அல்லவா இருக்க வேண்டும்? இது முரண் அல்லவா

இறுதியாக சுதந்திரம், தன்னிலை குறித்து ஹைடெக்கர் என்ன சொல்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். நவீன வாழ்க்கையில் மனிதன்உலகில்இருந்து தொழில்நுட்பத்தால் துண்டிக்கப்படுவதைப் பற்றி சற்று கவலையுடன் பேசுகிறார் ஹைடெக்கர். இதைவீழ்ச்சி” (fallenness) என சொல்கிறார். ஆனால் இங்கு தொழில்நுட்பம் என்பது டெக்னிக்கலான தொழில்நுட்பம் மட்டுமல்ல. நீங்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்பது கூடடெக்னாலஜிதான். இப்போது நீங்கள் முழுமையாக உலகுடனான உங்கள் இருப்பை உணர முடியாதாகிறது. நீங்கள் ஒரு குளத்தில் போய் முக்குளித்து எழுவது உங்கள் ஆழமான தன்னிலை அனுபவம். ஆனால் ஒரு தாளை புரட்டுவது துண்டுபட்ட தன்னிலை. நான் டெக்னாலஜி உருவாக்கும் தன்னிலையை இப்படித் தான் பழுதான ஒன்றாக பார்க்கிறேன். அதை நீங்கள் பெருந்தேவியின் எதிர்கவிதைகளில் காணலாம். ஆனால் ஶ்ரீவள்ளியின் கவிதைகளில் காணும் பரவசமும் கட்டற்ற பறத்தலும் சற்றே ரொமாண்டிக்கான ஆட்படலும்  “டெக்னாலஜியால்தோன்றுவது அல்ல. நான் பா. வெங்கடேசனுடன் முரண்படும் முக்கியமான இடம் இது தான்.

கடைசியாக, ஶ்ரீவள்ளியின் கவிதைசொல்லி உணரும் அந்த தன்னிலையின் பாரம் (கூடலின் போது அவர் தன்னை அங்கு பாரமாக உணர்கிறார்) சற்றே பின்நவீன சாயல் கொண்ட நிலை தான். அது ஒரு நல்ல அவதானிப்பு. ஆனால் அதையே நாம் பழைய கவிதைகளிலும் காண்கிறோமே:
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார் என

சொல்லிச் சென்றார்” (நகுலன்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...