முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹெரால்டு புளூம் எனும் எலும்புக்கூடு (2)


பிரதியை எழுத்தாளனிடம் இருந்து விலக்கி, அடுத்து மெல்ல மெல்ல பிரதியிடம் இருந்து அர்த்தத்தை பிரித்து, அர்த்தத்தில் இருந்து வாசிப்பை விடுதலை அடைவதே வாசிப்பின், மனித இருப்பின் நோக்கம் எனும் இடத்துக்கு கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலான கோட்பாட்டு விமர்சனம் வந்தடைந்துள்ளது என்றால் ஹெரால்ட் புளூமோ இந்த முன்னெடுப்பை நேர் மாறாக செய்தார் - வாசிப்பின் நோக்கம் என்பது புளூமைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனின் நோக்கத்தை அந்த பிரதியில் கண்டடைவது. அதை உறுதிப்படுத்த அவர் எழுத்தாளனின் பேட்டியில் இருந்து வாக்கியங்களை மேற்கோள் காட்டுவார். பிறகுநீ அப்போ இப்படி சொன்னே இல்ல, அதான் இப்படி இப்போ இந்த கதையை எழுதி இருக்கேஎன தீர்ப்பு எழுதுவார். இது நமது காவல்துறை விசாரணை பண்ணி குற்றவாளிக்கு முதல் தகவல் அறிக்கை எழுதுவதற்கு இணையாக இருக்கும். ஹெமிங்வேயின்கடலும் கிழவனும்”, தல்ஸ்தாயின்அன்னா கரனினாஆகிய நாவல்களுக்கு புளூம் எழுதிய விமர்சனங்கள் இதற்குஉன்னதஉதாரணங்கள்.

புளூமின்அன்னா கரனினாஇலக்கிய விமர்சனம் சுவாரஸ்யமானது என்றாலும் அவர் அன்னா என்பது தல்ஸ்தாயே தான் என முடிவுக்கு வரும் இடம் மிக மிக சிக்கலானது. அடுத்து அவர் தல்ஸ்தாயே தல்ஸ்தாயை காதலிக்கிறார் எனும் அவதானிப்பை வைக்கிறார். ஏன்
நீங்கள் வாழ்க்கைக்கதை விமர்சனத்தை செய்யும் போது எழுத்தாளன் எழுதுவது தன் கதையையே எனும் எளிமைப்படுத்தலை விமர்சனமாக முன்வைக்கிறீர்கள். இப்போதுஎழுத்தாளன் ஏன் தன் கதையை சொல்ல இலக்கிய பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும்?” என புளூமிடம் கேட்பீர்கள். அதற்கு எழுத்தாளன் தன் வாழ்க்கைக் கதையையே நேரடியாக (கதைக்குப் பதிலாக) எழுதலாமே? இதற்கு பதிலளிக்க புளூம் பிராயிடிடம் செல்கிறார்
எழுத்தாளன் தான் நேரடியாக தன்னிடம் எதிர்கொள்ள முடியாத / விரும்பாத தனக்குள்ளே அழுத்தி அடக்கப்பட்ட உணர்வுகளை கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்து எதிர்கொள்கிறான் எனும் இடத்திற்க்கு வருகிறார் புளூம். இப்போது எழுத்தாளன் தான் எதிர்கொள்ள விரும்பாத சுயபிம்பத்தை ஒரு பாத்திரமாக்கி அதனுடன் உரையாடுகிறான், அதுவே இலக்கிய பிரதி என முடிவு செய்கிறார் அவர். இங்கு, எழுத்தாளன் இரண்டு குரல்களாக பிரிகிறான் - தனது இருண்மையை அவன் தனது பகுத்தறிவின் ஒளியில் அடைவதே படைப்பூக்கமாகிறது என புளூம் சொல்கிறார் (இது ஏற்கனவே பிராயிட் சொன்னது தான்). ஆக அவர் ஒரு காதல் கதையை படித்தால் அதில் வரும் பெண்ணும் அந்த பெண்ணை காதலிக்கும் ஆணும் அதை எழுதுகிற எழுத்தாளனே தான் எனும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வையை வந்தடைகிறார் (இதனாலே அன்னா வழி தல்ஸ்தாயே தல்ஸ்தாயையே காதலிக்கிறார் எனும் அபத்தமான பார்வையை புளூம் முன்வைக்கிறார்). எந்த படைப்பில் இந்த சுய-ஆட்கொள்ளலை ஒரு எழுத்தாளன் கடந்து செல்கிறானோ அதுவே மேம்பட்ட படைப்பு என சொல்கிறார். “கடலும் கிழவனும்நாவலில் சாண்டியாகோவும் அவன் பிடிக்கும் அந்த பெரிய மீனும் ஹெமிங்வேயே தான் என புளூம் சொல்கிறார். ஹெமிங்கே தன் சுய-மோகத்தை மீற முடியாததால் இந்நாவல் ஒரு தோல்விப்படைப்பே என்கிறார். ஆனால் ஹெமிங்வேயின் தனிவாழ்க்கையைக் கடந்து தன்னால் அந்நாவலை, ஒரு பிரதியாக மட்டுமே, வாசிக்க முடியவில்லை என்பது தன் விமர்சனத்தையே ஒருதோல்வி விமர்சனம்ஆக்குகிறது என்பது பற்கள் உதிர்ந்த காலத்திலும் புளூமுக்கு ஏனோ புரியவில்லை.

அறிதல் என்பது, லகான் போன்ற நவீன உளவியலாளர்களின் நோக்கில், தன்னையோ உலகையோ அறிவது அல்ல - அறிதல் என்பது அறிதலைக் கடந்து செல்வதே. அப்படி கடந்து செல்லும் பொருட்டே மனிதன் இலக்கியத்தை உருவாக்குகிறான், நுகர்கிறான், அதன் பொருட்டே அவன் உலகுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுகிறான். அறிதலின் ஆழத்தில் உள்ளது சூன்யமே, அர்த்தமல்ல. ஒரு பிரதியினுள் விரவியுள்ள உள்முரண்களையும் அடுக்கடுக்கான இருமைககளையும் ஒரு வாசகன் கண்டுகொள்ளும் இடத்தே அவன் பெரும் வாசிப்பின்பத்தை அடைகிறான் என தெரிதா வலியுறுத்துகிறார். நீங்கள் ஒரு கதை / கவிதைக்குள் இதுஅதுஎன அறியும் சற்று முன்பே இதுஅதுவல்லஎன்பதையும் உணர்கிறீர்கள். அப்படி உணரும் போதே அந்த பிரதியின் அர்த்தம் தன்னையே ரத்து பண்ணுகிறது

.தா., “மோகமுள்நாவலில் பாபு யமுனாவை மிதமிஞ்சி விரும்புவதாலே அவளை அடைய தொடர்ந்து முயலாமல் விட்டு விலகி செல்கிறான் (அவளை அடைவது அருவருப்பானது என நினைப்பதாலோ அந்த கூச்சத்தினாலோ குற்றவுணர்வாலோ அல்ல.) யமுனாவும் பாபுவை விரும்பினாலும் அவனை தான் அடைய நினைப்பதே உள்ளுக்குள் அவனை அடைய விரும்பாமல் இருப்பது தான் என உணர்கிறாள். அதாவது பாபுவின் இச்சை முன்னோக்கி ஓடினால் யமுனாவின் இச்சை பின்னோக்கி ஓடுகிறது. இருவரின் இச்சையையும் வாசகன் அதன் உள்முரண்களுடன் மட்டுமே அறிகிறான். இந்த இச்சை என்பது நிகழும் போதே நிகழாமலும் இருக்கிறது. ஒரு பெண் ருதுவாகும் போதே குழந்தையாகவும் நீடிப்பது போன்றது இது. இதுவேமோகமுள்ளின்வாசிப்பு இன்பம். அந்த இன்பம் எனும்அதுஎதுவென வாசகன் முழுக்க பகுத்துணர தி.ஜா விடுவதில்லை என்பதே அவரது கலை. நம் ஒவ்வொருவரது மோகம் என்பதும் தள்ளிப் போடுவது தானே! நாம் ஒருத்தியை மோகிக்கும் போதே அவளை மோகிக்காமல் மற்றொருத்தியாக மாற்றவும் செய்கிறோம் தானே. இப்போதுமோகமுள்ளைவாசிப்பது நம் இருப்பை உணரும் அனுபவமாகிறது. “அதுவேமோகமுள்ளை மகத்தான இலக்கியமாக்குகிறது.
இப்படியே இலக்கிய வாசகன் இலக்கியத்தை அணுகுகிறான் எனும் முக்கியமானபுரிதல்புளூமைப் போன்ற ஆரம்பநிலை உருவியல் (formalist) விமர்சகர்களுக்கு என்றுமே விளங்கியதில்லை என்பது ஒரு பெரும் துயரம். ஒரு பெண்ணின் உடலைப் பார்த்து அதுவே பெண்மை என நம்புவதைப் போன்ற அபத்தம் இது

நாகார்ஜுனரின் பௌத்த தத்துவ பரிச்சயம் கொண்ட இந்திய வாசகர்களுக்கு இத்தகைய விமர்சங்களின் பிழை எதுவென சுலபத்தில் புரியும். ஆனால் புளூமுக்கோ, .நா.சு போன்ற ரசனைவாதிகளுக்கோ ஆச்சரியமாக இந்த நுணுக்கம் விளங்கவில்லை. இவர்களை நாம் மேற்கின் புலனறிவாதம் (empiricism) எனும் அறிவியல் சார் பொருண்மைவாத தரப்பாக புரிந்து கொள்ளலாம். மொழி, பண்பாடு, இலக்கியம், தத்துவம், மெய்யியல் ஆகிய துறைகளின் நேரெதிர் பள்ளியை சேர்ந்த இத்தகைய விமர்சகர்கள் இலக்கிய வாசிப்புக்கு செய்த பங்களிப்பு என்பது பெருமளவு பாதகமே அன்றி சாதகமானது அல்ல.

புளூமின் விமர்சனத்தைப் படிக்கையில் எனக்கு, சுவாரஸ்யமாக, நான் பங்குபெற்ற விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களும் புளூமைப் போன்றே ஒரு பிரதியை படைப்பாளியின் வாழ்க்கை, ஊர்ப்பின்னணி, அவனது வரலாறு மற்றும் பிரதியின் எளிய வடிவ சங்கதிகளைக் கொண்டே சுருக்கி புரிந்து கொள்கிறார்கள். ஒருவேளை புளூம் தமிழகம் வந்திருந்தால்விஷ்ணுபுரம் மேற்கத்திய விமர்சகர் விருதுஎன ஒன்றை அமைத்து அவருக்கு அளித்து விழா எடுத்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. சொர்க்கத்தில் இருந்து .நா.சுவும் பூ தூவியிருப்பார்


ஹெரால்ட் புளூம் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்த, தன் இருப்பால் இலக்கிய வாசிப்பை மேலும் மேலும் பின்னுக்கு நகர்த்திய, ஒரு எலும்புக்கூடு. அவருக்கு தமிழில் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பது ஒரு வேடிக்கையான துன்பியல்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...