Skip to main content

வலதுசாரிகள் ஏன் உளறுகிறார்கள்?



மக்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால் ஜாலியாகவும் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள் - தெளிவாக கவனமாக பேசுவதை விட உளறலாக முன்னுக்குப் பின் முரணாக பேசுவதே ஜாலியானது, சுதந்திரமானது. ஆக அவர்களில் கணிசமானோர் உளறுவதை ஒரு தனிபாணியாக எடுத்துக் கொண்டார்கள். நாம் என்னதான் வலதுசாரிசிந்தனையாளர்களின்உளறலை கேலி செய்தாலும் அவர்களுக்கு இன்று இணையத்திலும் வெளியிலும் கிடைக்கும் அபாரமான ஆதரவை மறுக்க முடியாது. “ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? இது சரி தானே?” என மக்கள் இன்று நினைக்கத் தொடங்குகிறார்கள். உதாரணமாக ஒரு புது வண்டியை வாங்கியதும் நீங்கள் எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் கீழே வைத்து நசுக்குகிறீர்கள். அதற்கு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் அந்த பண்பாட்டுப் போக்கை நீங்கள் நவீன முற்போக்கு, விஞ்ஞான வாழ்வில் பின்பற்றுவதில்லை. நாம் இரு கூறாக பிரிந்து செயல்படுகிறோம். இப்போது ராஜ்நாத் சிங் ரபேல் விமானங்களுக்கு அதே போல எலுமிச்சை நசுக்கி பூஜை செய்யும் போது இந்த குறிப்பிட்ட மக்கள் திரள் அதை பரவலாக ஆதரிக்கிறார்கள்; அதையே ஒரு பக்கம் கிண்டல் செய்யவும் அவர்கள் தவறவில்லை என்றாலும் கூட அது ஒரு அபத்தமாக அவர்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் வாழ்வின் உள்முரணை எதிர்கொள்ள சிறந்த வழி தடையின்றி உளறுவதே என அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எலுமிச்சை நசுக்கி வழிபடுவதை ஏற்கிறார்கள் என இதற்குப் பொருளில்லை. ஏன் இதையும் ஆதரித்துபகுத்தறிவுவாத அதிகாரத்தைஎதிர்க்கக் கூடாது என நினைக்கிறார்கள்.


டி.வி விவாதங்களில் திருப்பதி நாராயணன் போன்றோர் ஆதாரமே இல்லாமல் எடுத்து விடுவார்கள்; யாராவது சான்று கேட்டால்அதெல்லாம் இல்ல சார், நான் சொல்றது தான் சரிஎன கூலாக சொல்லுவார். ராகுல், ஸ்டாலின் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றி தயங்காமல்முட்டாள், துரோகி, உளவாளிஎன்றெல்லாம் சொல்லுவார். பாஜக ஆட்சியில் நடந்த நீட், ஜல்லிக்கட்டு சர்ச்சைகளின் போதுஇந்த திட்டங்கள், சட்டங்களை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தானே, பாஜக அல்லவேஎன்பார். ஆனால் இப்போது பாஜக இம்முடிவுகளை ஆதரிக்கிறதா எனும் கேள்விக்கு அவர் என்றுமே பதிலளிக்க மாட்டார். இது கூட பரவாயில்லை அவரும் அவரைப் போன்ற வலதுசாரி ஆதரவாளர்களும் நம் டிவி சேனல்களில் பேசுவதைக் கேட்டால் தலையில் அடித்துக் கொண்டு அழத் தோன்றும். சமீபமாக மனுஷ்யபுத்திரன் ஒரு நேரலை விவாதத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்துநான் பொறுக்கிகளுடன் உரையாட விரும்பவில்லைஎனக் கூறி விட்டார். அப்போதும் அந்த வலதுசாரி ஆதரவாளர் சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். ஏனென்றால் அது விமர்சனம் அல்ல, அப்படி அழைக்கப்படுவதை அவரைப் போன்றோர் விரும்புகிறார்கள். ஒரு நிதானமான ஆளை அசைத்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷம் இது. இந்த கோணங்கியான, உளறலான விவாதப் போக்கே இந்தியா பூரா பரப்பப்படுகிறது.

நான் முன்பு டிவி விவாதங்களில் திருப்பதி நாராயணனுடன் விவாதித்திருக்கிறேன், காரில் போகும் போது அவருடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். டிவியில் வரும் போது அவர் உளறுவார் என்றாலும் நேரில் ரொம்ப தெளிவாகப் பேசுவார். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் - இந்தியாவில் உளற விரும்பும் ஒரு மக்கள் தொகைக்கு அவர் தன்னை பிரதிநிதியாக கருதுகிறார்.

பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கலாச்சார யுத்தம் இன்று நடந்து வருகிறது. அந்த தரப்பை பாஜக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இது புரியாததால் தான் நமக்கு இத்தகைய உளறல்கள் எரிச்சல் தருகின்றன. அமைதியான இடத்தில் விளையாடும் குழந்தைகள் பொருட்களை இட்டு உடைத்து கத்துவதைக் கண்டு பெரியவர்கள் கடுப்பாவதைப் போன்றது இது. இது இப்படித் தான் இருக்கும்

மேலும் படிக்க

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...