ராஜன் குறை தன் முகநூல் பதிவில் சொல்வது போல திருக்குறளை திராவிடப் பண்பாட்டுக் குறியீடாகக் காண்பது நியாயமே. அதில் வைதிக சுபாவம் நிச்சயமாக இல்லை என்பது வெளிப்படை. அதை தத்துவார்த்த ரீதியாகவும் நிரூபிக்க முடியும் (தமிழ் பௌத்தமாக அயோத்திதாசர் சார்ந்து).
வைதீகம் ஒரு உடல்மறுப்பு தத்துவம். ஆனால் வள்ளுவர் உடலை, பொருண்மையான உலகை கொண்டாடுகிறார். சம்ஸ்கிருத சொல் இருக்கிறதெனக் கொண்டு அதில் வைதிக சாயல் இருக்கிறது என சங்கிகள் கூறுவது அபத்தம்.
ஆனால் திருக்குறள் திராவிட அரசியல் சித்தாந்த பிரதி அல்லவும் தான். (ராஜன் குறை சொல்வது போல) அதன் மதசார்பின்மை திராவிடத்தோடு இணங்குகிறது, ஆகையால் திராவிட பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளலாம்.
இங்கு இரு கேள்விகள்:
1) மணிமேகலைக்கும் அத்தகுதி உண்டெனக் கொள்ளலாமா?
2) திராவிட இயக்கம் தன் அடுத்த கட்டத்துக்கு நகர பௌத்தத்தை, தமிழ் பௌத்தத்தை, ஏன் முன்னெடுக்கக் கூடாது? ஏன் குமரியில் வள்ளுவனுக்கு அடுத்து புத்தரின் சிலையை திமுக எழுப்பக் கூடாது?
Comments