Skip to main content

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (2)


முதலில் பாஜக இதை தனது சட்டத்தின் பின்னுள்ள கொள்கைக்கு எதிரான போராட்டமாகக் காணவில்லை. தனது குறிப்பிட்ட செயல்பாடு ஒன்றுக்கு எதிரான போராட்டமாகவும் இதைக் காணவில்லை. மாறாக எதிர்காலம் குறித்தஆதாரமற்றபயத்தின் வெளிப்பாடாக, அந்த பதற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட போராட்டமாகக் காண்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிரடி அறிக்கைகளை செய்து, கண்மூடித்தனமான மாற்றங்களை கொண்டு வந்து இந்த அரசு மக்களை அப்படி அச்சுறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் நாளை தூலமான மாற்றம் ஒன்று வரும் போது ஜனங்கள் இப்படி ஒட்டுமொத்தமாக பதறி தமக்கு எதிராக திரள மாட்டார்கள் என இந்த அரசு நம்புகிறது. இது ஏன் என ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன்:

 கொடுங்கோல் தந்தையருக்கும் அவர்களின் அப்பாவி மகன்களுக்குமான உறவை எடுத்துக் கொள்ளலாம். கொடுங்கோல் தகப்பன்கள் அடித்தும் மறைமுகமாய் வதைத்தும் பிள்ளைகளை ஒடுக்கும் போது அவர்கள் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் அதை ஏற்பார்கள். ஆனால் என்றோ ஒருநாள் தாம் செய்த சிறிய குற்றத்துக்காக தகப்பனார் மிகப்பெரும் தண்டனை ஒன்றைத் தருவார் எனும் அச்சம் பிள்ளைகளை திடீரென கலகம் பண்ணத் தூண்டும் அல்லது வீட்டை விட்டு ஓடிட வைக்கும். தகப்பனார் இதை இவ்வாறு எதிர்கொள்வார் - அவர் தனது தண்டனைகள் அத்துமீறியதாக இருக்காது என நம்ப வைப்பார். தண்டனைகள் மேலும் மேலும் இயல்பாக்கி பிள்ளைகளை அமைதிப்படுத்துவார். அமைதியானபின் பிள்ளைகளை வரிசையில் வந்து நின்று உதை வாங்குவார்கள். ஓடிப் போனவர்கள் திரும்ப வந்ததும் தகப்பனார் அவர்களை அரவணைத்து விருந்து வைப்பார். ஆனால் அடுத்தடுத்த சிறிய குற்றங்களுக்கு கராறாய் தண்டனைகள் அளிக்க இதே பிள்ளைகள் எதிர்ப்பின்றி, குற்றவுணர்வுடன், அவற்றை வாங்கிக் கொள்வார்கள். மோடியும் தம் பிள்ளைகள் இவ்வாறே மீண்டும் தமது அரவணைக்கும் கரங்களை நாடி ஓடி வருவார்கள் என நம்புகிறார். அவர் இந்த கலகக்கார பிள்ளைகளின் தாய்; அவர் அமைதிப்படுத்தி இவர்களை கோபக்கார தந்தையார் அமித் ஷாவிடம் அனுப்பி விடுவார்.

சரி இந்த தண்டனைகள் தாம் என்ன
இந்த குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பேசும் வேளைகளில் எல்லாம் அமித் ஷா பாராளுமன்றத்தில் இதை தேசிய குடிமக்கள் பதிவேட்டு சட்டத்துடன் பொருத்திஎச்சரித்தார்’ - அதாவது வெளியில் இருந்து வரும் அகதிகளின் குடியுரிமையை தீர்மானிப்பது மட்டுமல்ல உள்ளே மக்களோடு மக்களாக கலந்து விட்டவந்தேறிகளைகளைபறிப்பதும் தன் நோக்கமே என அவர் குறிப்புணர்த்தினார். சரி இந்த அகதிகள் என்பவர்கள் யார்? ‘வந்தேறிகள்’, ‘அந்நியர்கள்என்பவர்கள் யார்? மத்திய பாஜக அரசு இந்த இரு பதங்களையும் பூடகமாக குழப்பமாக கையாள்கிறது, அதன் மூலம் தனது இனவெறியை தந்திரமாக செயல்படுத்துகிறது.
 ‘அகதிஎன்பவர் ஒடுக்கப்படும் முஸ்லீம் அல்லாதவர் என உலகமே ஏற்காத ஒரு பழமையான வரையறையை கொண்டு வரும் இந்த அரசுஅந்நியர்எனும் பதத்தையும் அவ்வாறே வரையறுக்கும் என்பது வெளிப்படை - அதற்காகவே குடியுரிமைச் சட்டத்தையும் குடிமக்கள் பதிவேட்டையும் அவர் ஒன்றுக்குள் ஒன்றை மடித்து வைத்து நமக்குத் தருகிறார் - இப்போது நீங்கள் குட்டி பாகிஸ்தான் என கேரளாவில் வர்ணிக்கும் ஒரு மாவட்டத்து ஜனங்களை அகதிகளாக, பாகிஸ்தானில் இருந்து வந்த, ஆவணங்கள் இல்லாத மக்களாக வரையறுத்து அவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப முடியும். இஸ்லாமியர் அனைவரும் வந்தேறிகள் எனும் இந்துத்துவரின் நீண்ட கால கதையாடலை சட்டமாக்க முடியும். அகதிகள் குறித்த கதையாடல் இன்றி நீங்கள் ஆவணமில்லை எனும் காரணத்தை வைத்து ஒரு சிறுபான்மையினர் கூட்டத்தைவந்தேறிகள்என முத்திரை குத்த முடியாது. நமது பிரதமர் குடியுரிமை திருத்த சட்டம் இந்த நாட்டின் குடிமக்களான சிறுபான்மையினரை இலக்காக்காது என கூறுவதை நாம் இப்படியே புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நேரடியாக அவ்வாறு இந்த அரசால் தேசப்பிரஷ்டம் செய்ய இயலாது - அதற்குத் தான் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அகதிகளை தனிமைப்படுத்தி அவர்களை தடுப்புமுகாமில் வைத்து விட்டு அந்த அடையாளத்துக்குள் சிறுபான்மையினரில் பலரையும் திணித்து மக்களை குழப்பி இந்த அரசு குளிர்காய திட்டம் போடுகிறது. ஒரு உதாரணம் தருகிறேன்

ஒரு ஊரில் உள்ள கறுப்பான மக்களை ஒடுக்குவதற்காக வெள்ளைத்தோல் கொண்ட பெரும்பான்மையினர் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவர்கள் முதலில் சில கறுப்புத்தோலினரைப் பிடித்து விசாரணை பண்ணி அவர்கள் திருடர்கள் என பிரகடனம் பண்ணுகிறார்கள். அடுத்து கறுப்புத்தோல்காரர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என அரசும் காவல்துறை ஆணையரும் தொடர்ந்து பேட்டி அளிப்பார்கள். கடைசியாக கறுப்பாகத் தெரியும் அத்தனை பேரையும், குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை நோக்கில், ஒட்டுமொத்தமாக கைது பண்ணி முகாம்களில் அடைத்து வைப்பார்கள். இப்போது இதை யாரும் இனவெறுப்பு என இதை பேசி விட முடியாது; திருடன் + கறுப்புத் தோல் = கறுப்பானவர்கள் எல்லாம் திருடர்கள் எனும் சூத்திரத்தை உருவாக்கி மக்கள் மனத்தில் பீதியை அரசு உருவாக்கி இருக்கும். இதே தந்திரத்தை தான் பாஜக அரசு சிறுபான்மையினர் மீது பிரயோகிக்க உத்தேசிக்கிறது

அகதிகள் எனும் கதையாடலுக்கு மற்றொரு நோக்கமும் உண்டு - சிறுபான்மையின மக்களை முத்திரை குத்தி குடியுரிமையும் வாக்குரிமையும் மறுத்த பிறகு என்ன பண்ணுவது
அகதிகளை ஒரு அரசு அடையாளம் கண்ட பின் அவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும். இந்திய அரசு இதுநாள் வரையிலும் அகதிகள் எனும் அந்தஸ்தை இம்மக்களுக்கு அளிக்காமல், சட்டவிரோதமாய் வந்திருக்கும் அந்நியர் என்றே பார்க்கிறது; பார்த்து சிறையில் அடைக்கிறது. இந்த அரசு இந்த விசயத்தை ஒரு புதுச்சட்டம் மூலம் ஒரு பிரச்சார ஆயுதமாக முயல்கிறது. இப்போது நாடு முழுக்க பல்வேறு தடுப்பு முகாம்களை கட்டி வருகிறது. அஸ்ஸாமில் கோல்போரா மாநிலத்தில் ஏழு கால்பந்தாட்ட விளையாட்டரங்குகளின் பரப்பளவில் தடுப்பு முகாம் ஒன்றை கட்டி வருகிறது. கடந்த ஒரு வருடமாக இதற்கான பணி அங்கு நடந்து வருகிறது. இதில் 3000 அகதிகள் தங்க வைக்கப்படலாம். இதற்கான செலவு 45 கோடி. அஸ்ஸாம் அரசு மேலும் பத்து தடுப்பு முகாம்கள் கட்டுவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது. செலவு 450 கோடி என்றால் இவற்றில் சிறை வைக்கப்படுவோரின் எண்ணிக்கை 30,000 ஆக இருக்கும். ஆனால் அரசின் கணக்குப்படி 30,000 சிறிய தொகை. பத்து முகாம்கள் போதுமானவை அல்ல. இப்போதைய திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கணக்கெடுப்புப் படி 19 லட்சம் பேர் அகதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மக்களில் இந்து வங்காளிகளும் கணிசமாக இருப்பதாலே பாஜக அரசு அவர்களுக்கு ஆவணமின்றியே குடியுரிமை அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது அகதிகள் என வரையறுக்கப்பட்டோரில் இஸ்லாமியர் மட்டுமே வடிகட்டப்பட்டு முகாம்களில் சிறைவைக்கப்படுவார்கள் - The Hindu Business Line இந்த எண்னிக்கையை 5 லட்சம் என்கிறது. (இந்த அரசியலுக்கு எதிராகத் தான் அஸ்ஸாமில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன) அரசு 160 தடுப்பு முகாம்களை கட்ட உத்தேசிக்கிறது. அங்கு ஐந்து லட்சம் அகதிகளை குடியமர்த்தி சோறு போடுவது, அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அகதிகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதியமைப்புகளுக்க்கான செலவையும் சேர்த்துப் பார்த்தால் 1200 கோடி செலவாகும்

 அடுத்து நவி மும்பை, பெங்களூரு, கொல்கொத்தா என பல மாநிலங்களில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வளவு ஆயிரம் கோடிகளை இந்த அரசு ஏன் தடுப்பு முகாம்களுக்கு செலவிட வேண்டும்? அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இவை ஒரு முக்கிய பிரச்சார மையமாக இருக்கப் போகிறது என்பதைத் தவிர வேறெதற்காக இதை பாஜக செய்ய வேண்டும்? இந்த முகாம்களை அரசு அகதிகளுக்கான தற்காலிக குடியிருப்புகள் என நியாயப்படுத்தும். ஆனால் அகதியல்லாத சிறுபான்மை மக்களையும் இங்கு அனுப்புவதே அரசின் எதிர்காலத் திட்டமாக இருக்கும்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...