Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தரிசனம் என்றால் என்ன?



ஒரு எழுத்தாளர் மலைமேல் இருக்கும் முருகனைதரிசிக்கசென்றதைப் பற்றி எழுதியிருந்தார். நான் அவரிடம் நீங்க போகும் போது முருகன் இருந்தாரா எனக் கேட்டிருந்தேன். அவரை கிண்டலடிப்பதோ கடவுளை மறுப்பதோ என் நோக்கமல்ல. அவர் சொன்னதில் ஒரு தத்துவக் குழப்பம் இருப்பதாய் நினைத்தேன். அது என்ன?
 இந்த தரிசனம் என்பது இந்த இடத்தில் குறிப்பாக என்ன எனும் சந்தேகம் முதலில் தோன்றியது. தரிசனம் என்றால் பார்ப்பது அல்ல - முருகனைப் பார்க்க முடியாது. தரிசனத்துக்கு உள்ளொளி ஞானம், மனத்திறப்பு, இருள் விலகுதல், மாயை அகலுதல் போன்ற பொருட்களும் உண்டு. ஆனால் நாம் கோயிலுக்குப் போய் சாமி தரிசிக்கும் போது இந்த குறிப்புணர்த்தப்பட்ட விசயங்களை உணர்கிறோமா? யாருக்காவது ஒவ்வொரு முறை முருகனை தரிசிக்கும் போதும் தமக்கு ஞானம் ஏற்படுவதையோ, மாயை விலகி மனம் தெளிவாகிடுவதோ உண்டா? (ஒரு பொருளோ பொருள் சார்ந்த செயலோ தானேஏற்படமுடியும்? தெளிதலும் அப்படித் தானே? அரூப விசயங்களில் அது சாத்தியமா என்பன வேறு கேள்விகள்.) 


 நம் நாட்டில் பல்லாயிரம் கோடி பேர் தினமும் கோயிலிலோ பூஜையறையிலோ இறைவனை தரிசிக்கிறார்கள்? இவர்களும் திரிபறத் தெளிந்த ஞானிகளா ஆகி விடுகிறார்களா? இல்லையே.

நமது அன்றாட பயன்பாட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மட்டும் இப்படி தெளிவின்றி நோக்கமின்றி பயன்படுத்துகிறோம். பிளேட்டோவின் Dialogues நூல் வரிசையில் சாக்ரடீஸ் நாம் நமது சொல் பயன்பாடு குறித்து தெளிவுடன் இருந்தாலோ தெளிவற்ற பயன்பாடுகளை அலசினாலோ விவேகம் கிடைக்கும், மூடநம்பிக்கைகள், பிழையான சிந்தனையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் (Euthyphro நல்ல உதாரணம்). தேசப்பற்று பற்றி ஒருவர் பேசினால் அவரிடம் தேசம் என்பதை முரணின்றி விளக்க சொல்லுங்கள். ஜனநாயகம் என்று பேசுகிறவர்களிடம் அனைத்து ஜனங்களாலும் ஆளப்படுவதா எனக் கேளுங்கள். மக்களாட்சி பற்றி பேசுகிறவர்களிடம் ஆட்சி என்பதன் பொருளென்ன என வினவுங்கள். திருமணம் செய்யுமுன் அச்சொல்லினால் எந்த உத்தேசிக்கிறீர்கள் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். நம் சொற்கள் தெளிவற்றவை, முரண்களால் பின்னப்பட்டவை என்றால் அவை சாரமற்றவை. சாரமற்ற விசயங்களை நாம் உதறி விட்டு மகிழ்ச்சியாய் இருக்க முடியும்

பொருண்மையான பல விசயங்களில் மொழி இப்படி இடறுவதில்லை என்பதை கவனிக்கலாம் - நான் பாட்டுப் பாடுகிறேன் என்றால் அது தெளிவானது. போனில் பேசுவது, உணவருந்துவது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது, அழுவது, தழுவிக் கொள்வது ... இப்படி கணிசமான மொழிப்பிரயோகங்களில் பிரச்சனையில்லை. உடனடியாய் நம் முன் இல்லாத விசயங்களைப் பேசும் போது இப்பிரச்சனைகள் உடனடியாய் முளைக்கின்றன - .தா., “தூக்கம் வருகிறது”. தூக்கம் உங்களுக்கு நீங்கள்தூங்கும்முன்பு எப்படி வரும்? அல்லது தூக்கம் உங்களை நோக்கி வருகிறது என உருவகமாய் சொல்கிறீர்களா? தூக்கம் உங்களை நோக்கி மெத்து மெத்தென நடந்து தன் அழகிய கரங்களை நீட்டி அரவணைக்க அருகில் வருகிறது என்றால் அதுநடக்கிறசமயத்தில்அதுஎங்கே? எங்குமே இல்லையே

இப்போது சொல்லுங்கள் நீங்கள் முருகனைப் பார்க்கிறீர்களா தரிசிக்கிறீர்களா? தரிசிப்பது தான் இல்லை என்று ஆகி விட்டது.
 பார்ப்பதைப்பார்ப்போம்’ - நீங்கள் மலைமேலுள்ள முருகனைப் பார்க்க போகிறீர்கள். ஒருவரை நீங்கள் பார்ப்பதற்கான சில நிபந்தனைகளில் ஒன்று அங்கு பார்க்கிறவரும் பார்க்கப்படுபவரும் இருக்க வேண்டும் என்பது. (நாகார்ஜுனர் தனதுமூலமாத்யாமிக காரிகாநூலில் இந்த சிக்கலைப் பற்றி ஒரு சூத்திரத்தில் குறிப்பிடுகிறார்.) நீங்கள் முருகனைப் பார்த்து அவரைபார்க்கப்பட்டவராகஆக்கினால் அங்கு ஒரு இருமை தோன்றுகிறது - நீங்கள் பார்க்கிறவர், முருகன் பார்க்கப்படுகிறவர். ஒன்று இல்லாமல் இன்னொன்று அங்கு இல்லை. நீங்கள் அந்த சமயம் பார்க்கவில்லை என்றால் முருகன் அழிந்து விடுவார். அதை விடப் பிரச்சனை நீங்கள் பார்க்காத போது முருகன் இருக்க மாட்டார் என்பதால் முருகன் சாரமற்றவர் என ஆகி விடுகிறது. (நாகார்ஜுனரின் வாதம் இப்படித் தான் போகும்.) கணிசமான பக்தர்கள் தம் கடவுள் சாரமற்றவர் என்பதை ஏற்க மாட்டார்கள். ஆகையால் முருகனை நீங்கள்பார்க்கவில்லைஎன்றே சொல்லியாக வேண்டும்.

அடுத்து ஒரு பிரச்சனை வருகிறது - பார்ப்பது எனும் செயலே பார்க்கிறவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் / நபரைப் பொருத்தே சாத்தியமாகிறது. முருகனைப் பார்ப்பதே பக்தி என்றால் பார்க்கப்படும் முருகன் நீங்கள் பார்ப்பதனாலே சாரமற்றவர் ஆகி விடுகிறார். ஆகையால் மலையேறி நீங்கள் முருகனைப் பார்க்க செல்வதால் முருகன் மட்டுமல்ல பக்தியும் சாரமற்றதாகிறது. நீங்கள் மலையேறி செல்வதால் நாத்திகவாதி ஆகி விடுகிறீர்கள்!


சரி தரிசிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை என்றால் நீங்கள் முருகனிடம் என்னதான் பண்ண முடியும்? உங்கள் கருத்து என்ன? நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் செல்லும் போது என்ன பண்ணுவீர்கள்? எது சரியான சொல்?

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...