கொரோனா காலத்தில் அரசின் செலவுகளைக் குறைத்து மக்கள் நலனுக்கு செலவு செய்வதற்கு சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளை பிரமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தந்துள்ளார். அவை முக்கியமானவை. இக்கடிதத்தில் உறைந்திருக்கும் அரசியலையும் ரசித்தேன். குறிப்பாய் இரண்டாவது பரிந்துரையான ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்களைத் தடை செய்வது. அரசு வருடாவருடம் 1250 கோடி பணத்தை ஊடகங்களில் விளம்பரம் செய்ய பயன்படுத்துகிறது. இந்த பணத்தைக் கொண்டே அரசு கிட்டத்தட்ட அனைத்து டி.வி, பத்திரிகைகளையும் தனது செல்ல நாய்க்குட்டிகளைப் போல நடத்துகிறது. அரசை எந்த சேனலாவது விமர்சித்தால் அதற்கு விளம்பரங்களை தடை செய்வது, அதன் ஒளிபரப்பை தடை பண்ணுவதற்கு, அதற்கு எதிராக பொய் வழக்குகளைத் தொடுப்பது என அரசு பல விதங்களில் தொல்லை கொடுக்கும், மிரட்டும், மூச்சுத்திணறடிக்கும். டி.வி சேனல்கள் தங்களது வருமானத்துக்கு அரசு விளம்பரத்தை நம்பியிருப்பதால் தான் அவை சோரம் போய் அரசின் கைக்கூலிகளாகும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றன.
இன்றைய நிலையில் ஆங்கில சேனல்களில் என்ன விசயம் எப்படி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நமது பாரதப் பிரதம்ர் தான் முடிவு செய்கிறார். அவர் தான் ஆயிரக்கணக்கான சமூகவலைதள ஊழியர்களைக் கொண்டும், ஊதியமற்ற லட்சக்கணக்கான சங்கிகளைக் கொண்டும் எந்த செய்தி வைரலாக வேண்டும் எனத் தீர்மானிக்கிறார். அரசியலமைப்பு சட்டம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரமும் சுயமரியாதையையும் இந்த அரசு முழுக்க காலி பண்ணி விட்டது. அதை மறைமுகமாய் உணர்த்தும்படி தான் இப்போது சோனியா இந்த 1250 கோடி ஊடக ‘லஞ்சப்’ பணத்தைக் குறிப்பிடுகிறார். மோடி ஒரு போதும் இதைப் பண்ண மாட்டார் என்பது வேறு விசயம். அவர் சோறு இல்லாமல் கூட வாழ்ந்து விடுவார், ஆனால் விளம்பரம் இல்லையென்றால் அவருக்கு மூச்சு நின்று விடும்.
சோனியா இதே போல தொடர்ந்து மக்களிடம் உரையாட வேண்டும். இன்னும் மும்முரமாக அரசியலில் ஈடுபட வேண்டும்.
Comments