முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனாவின் போது குடிகாரர்கள்



கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது எனக்குத் தோன்றிய முதல் கேள்வி மக்கள் உணவுக்கு, மருந்துக்கு எங்கு போவார்கள் என்றல்ல, இந்த குடிகாரர்களின் நிலை என்னாவது என்பதே. ஏனோ என் இதயம் அவர்களுக்காகத் தான் முதலில் வாடியது. அந்தளவுக்கு சின்சியராக ஒன்றில் ஈடுபடுகிறவர்களை நான் பார்த்ததில்லை. தினமும் மதுவருந்தியே வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், மதுவின்றி கைகால் நடுக்கம் முதல் கடுமையான மனப்பிரச்சனை ஏற்படுகிறவர்கள் வரை இருக்கிறார்கள். சென்னையில் என் வீட்டுக்கு எதிரில் உள்ள கோயிலில் ஒருவர் வந்து அமர்ந்து தினமும் காலையில் ஒரு மணிநேரம் பிச்சையெடுத்து விட்டு அந்த காசில் குடிக்க செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் பார்க்க டீஸண்டாக இருப்பார், ஆனால் குடிக்காக தற்காலிக பிச்சைக்காரனாகவும் தயங்க மாட்டார். இது அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் தெரியும்

இவர்களில் சிலர் அன்றன்றைக்கு குடிக்கும் தேவைக்கு மட்டுமே வேலை செய்வார்கள், கடன் வாங்குவார்கள், ஏதாவது பித்தலாட்டம் பண்ணுவார்கள். மொத்தமாக சரக்கை வாங்கி வைக்க வக்கில்லாதஅன்றாடங்காய்ச்சிகள்பலர் இருக்கிறார்கள். இவர்களில் நிறைய பேருக்கு குடியை விட்டால் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனின் தன்மானத்தை இப்படி முழுக்க அழிக்கிற மற்றொரு வியாதி இல்லை என்பேன்

இவர்களால் 21 நாள் தனித்திருப்பை தாங்க முடியுமா
சென்னையிலும் கேரளாவிலும் இடைவெளி விட்டு வரிசையில் நின்று மக்கள் மது வாங்கும் படங்களைக் கண்டேன். அண்மையில் கேரளாவின் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் ஆணையிட்டு விட்டது. மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தாராளமாக சரக்கு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போல எதிர்விளைவுகள் ஆரம்பித்து விட்டன - கேரளாவில் இதுவரை மட்டும் 7 பேர் மது கிடைத்தாததால் ஏற்படும் விலகும் அறிகுறிகள் (withdrawal symptoms) காரணமாக தற்கொலை பண்ணியிருக்கிறார்கள். ஒருவர் ஷேவிங் லோஷன் குடித்து இறந்திருக்கிறார். மற்றொருவர் மின் கம்பியைப் பற்றியதால் மின்சாரம் தாக்கி மரணமடைந்திருக்கிறார். மேலும் சிலர் மாடியில் இருந்து குதித்திருக்கிறார்கள் - அதில் ஒருவர் கடும் காயங்களுடன் .சி.யுவில் இருக்கிறார். இந்த லாக்டவுன் காலத்தில் கேரளாவில் மனநோய் கடுமையாகி அட்மிட் ஆகுவோர் எண்ணிக்கை நாளுக்கு 300 என உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதை கேரள முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது அங்கு மருத்துவ பரிந்துரை சான்றுடன் சென்றால் மதுவை ரேஷன் போல வழங்குகிறார்கள். கர்நாடகாவிலும் இதே போல் ஏழு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மக்கள் கிடைத்ததை எல்லாம் போதைக்காக பயன்படுத்தி உயிரை விடுகிறார்கள் - அஸ்ஸாமில் இருவர் தொழிற்சாலை ரசாயனங்களுடன் சாப்ட் டிரிங்க்ஸில் கலந்து குடித்து செத்திருக்கிறார்கள்; ஒருவர் நிலைமை கவலைக்கிடம்.

இது ஒரு பெரிய பனிப்பாறையின் நுனி மட்டுமே. பரந்துபட்ட கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை
நான் தினம் தினம் பார்க்கும் அமைதியான குடிகாரர்கள் உண்மையில் ஒரு நடுங்கும் நூல்பாலத்தின் மீது நடக்கிறவர்களே; சின்ன தடுமாற்றம் போது சரிந்து விடுவார்கள். இரவுபகலாய் கடைகளைத் திறந்து வைத்து அரசும் தனியார் நிறுவனங்களுமாய் நம் மக்கள் தொகையில் சரி பாதியை மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை கொரோனா நாட்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. வரும் நாட்களில் பழையபடி எல்லா கடைகளையும் வருடம் முழுக்க திறந்து வைக்காமல் தினமும் குறைந்த நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும். இவர்களில் புதிதாக உருவாகும் குடிகாரர்கள் யார், நோயாளிகள் ஆகி விட்ட குடிகாரர்கள் யார் என அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பொதுவெளியில் வைக்க வேண்டும். இவர்களில் நோயாளிகளுக்கு அரசும் இந்த மதுவைக் தயாரிக்கும் ரிபைனரிகளும் நட்ட ஈடு மற்றும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்காது, ஆனாலும் சொல்லி வைக்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...