சென்ற ஆண்டு பிப்ரவரி மாத உயிர்மை இதழில் வெளியான ஆர் அபிலாஷின் தேவி சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இனிய ஆத்மார்த்தமான நடையில் ஒரு அருமையான கதை. பஷிர் மீது அவர் கொண்டிருக்கும் காதல் வியக்க வைக்கிறது அவர் தன்னையே தான் தேவியாக புனைந்து எழுதியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. தேவி என்ற பஷிரின் வாசகி மற்றும் அவரை காதலிக்கும் அவருடைய புரபசரான கதை சொல்லி இருவரும் தேவியின் பிறந்தநாளான ஒரு சுதந்திர தினத்தன்று பஷிரை சந்திக்கப் போகிறார்கள் என செல்லும் இந்தக் கதையை வாசிப்பது ஒரு சுகமான அனுபவம்.
பஷீருடனான அவர்களுடைய சந்திப்பு அவர்களின் உரையாடல் கதையின் முடிவு எல்லாம் ஹை கிளாஸ்
வாழ்த்துகள் ஆர் அபிலாஷ்
(இந்த கதையை ஓராண்டாக தவற விடும் அளவுக்கு நான் தனித்திருக்கிறேன் என அறிய நேரும்போது துக்கமாக இருக்கிறது)
Comments