முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது நியாயமா அழகிகளே?


வனிதா விஜயகுமாரின் யுடியூப் சேனலில் அவர் லைவாக செய்த 40 நிமிட ஒப்பனை அலங்காரத்தை நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பொதுவாக மேக் அப் மீது பெரிய மரியாதை இல்லை என்பது மட்டுமல்ல மேக் அப் அணிந்த பெண்களை அருகில் வைத்துப் பார்த்தால் குமட்டிக்கொண்டு வரும். ஆனால் நேற்று அந்த லைவ்வைப் பார்த்ததில் இருந்து மேக் அப் மீது ஒரு தனி மரியாதையே வந்து விட்டது. எவ்வளவு லேயர்கள், அதில் என்னவொரு கலை நுணுக்கம்

தன்னுடைய முக அமைப்பு, நிறம், குற்றங்குறைகள் தெரிந்து அதற்கு ஏற்ப ஒப்பனைப் பொருட்கள் வாங்கி பொறுமையாக ஒவ்வொன்றாகப் பூசிய முகத்தை ஒரு ஓவியத்தைப் போல மெருகேற்றுவதற்கு நிதானத்துடன் நிறைய கற்பனையும் வேண்டும். பொதுவாக புருவத்துக்கு மை பூசுவார்கள் என நினைத்திருந்தேன், ஆனால் வனிதா ஒருவித அடர்சிவப்பை லேசாய் தேய்க்க ஒரு ஆர்ப்பாட்டமான ஸ்டைல், ஒரு குறும்புத்தனம் அந்த முகத்துக்கு வந்து விட்டது. பின்னர் இமையில் நீலம், கன்ன எலும்புகளை தனித்துக்காட்ட ஒரு ஹைலைட்டர், மொழுமொழுவென தோலைக்காட்ட ஒரு கிரீம், பளபளவெனக் காட்ட மற்றொன்று, மினுமினுவெனக் காட்ட மற்றொன்று என பார்க்கப் பார்க்க அதிசயித்தபடி இருந்தேன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது அவர் தன் கண்ணுக்குக் கீழ் பூசின கன்சீலர் தான். அதைத் தேய்த்ததும் அவரது கண்ணுக்குக் கீழ் உள்ள அந்த கறுப்பு அரைவட்டம் அப்படியே காணாமல் போய் விட்டது
ஒப்பனையை துவங்கும் முன்னர் அவர் தன் முகத்தைக் காட்டினார் - அது ஒரு வெள்ளைக்காகிதத்தைப் போல டெரராக இருந்தது. உதடுகள் சிலருக்கு பழுப்பாக, சிலருக்கு கறுப்பும் சிவப்பும் கலந்திருக்கும். இவருக்கு உதடுகளும் வெளிறி இருந்தன. ஆனால் ஒப்பனை முடிந்ததும் 50% உருமாறி விட்டது அந்த முகம். லிப் ஹைலைட் பென்ஸிலும், லிப் கிளாசும் அணிந்ததும் அந்த உதடுகள் இரு பூவிதழ்களைப் போலஎன்னைக் கொஞ்சு கொஞ்சுஎனக் கேட்டன.

மிக சுமாரான முகத்தோற்றம் கொண்ட வனிதாவுக்கே மேக் அப் இவ்வளவு அதிசயங்கள் செய்யுமென்றால் ஒரு அசல் அழகியை அது எங்கோ தூக்கி சென்று விடும் என்பதில் சந்தேகமில்லை.
 இங்கே இன்னொரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும் - நேற்று இந்த லைவ்வைப் பார்த்த பின்னர் பெண்கள் எவ்வளவுதான் அழகியாய் பிறந்தாலும் இயல்பில் அழகில்லை எனத் தோன்றியது. அவர்கள் தம்மை அழகியாய் காண்பிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு கவிதையை ஒவ்வொரு சொல்லாக திருத்தி, வாக்கியமாக வெட்டி எடிட் செய்வதைப் போல முகத்தில் ஒரு பெருங்காவியத்தையே தினமும் இயற்றுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இப்படி ஒரு பெண் தன் அழகை செயற்கையாய் வடிவமைப்பது ஆணினத்துக்கு செய்யும் அநியாயம் அல்லவா என்றும் கேட்கத் தோன்றியது.

ஒரு உதாரணம்:
ஒரு பார்க்கத்தக்கப் பெண் தன் காதலனைப் பார்க்க செல்லும் போதெல்லாம் இது போல மேக் அப் அணிந்து தன்னை அழகியாய் உருமாற்றிக்கொண்டு போகிறாள். ஆனால் அந்த பையனோ சும்மா முகம் கழுவி அதே அழுதுவழியும் தோற்றத்தில் அவளைக் காண வருகிறான். அவள் முன் வந்ததும் தான் ஒரு வெண்கல விளக்கின் முன் இருக்கும் கற்சிலை போல இருண்டு விடுவதாக அவனுக்கு தோன்றுகிறது. அவன் அவளை ஒருவித மிரட்சியுடன், மயக்கத்துடன் தினமும் நோக்குகிறான். சுமார் இரண்டு வருடங்கள் இப்படி ஓடுகின்றன. அவர்கள் திகட்டத் திகட்ட காதலிக்கிறார்கள். அவன் அவளை மேக் அப் இன்றி ஒருநாள் கூடப் பார்த்ததே இல்லை. அவர்கள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த பின்னரே மேக் அப் இல்லாத அவளது முகத்தை அவன் முதன்முதலாக பார்க்க நேர்கிறது. அப்போது அவனுக்கு இது அதிர்ச்சியாக இருக்காதா? காலையில் ஒரே படுக்கையில் விழிக்கும் போதுயார் இந்தப் பெண்?” என ஒரு நொடித் தோன்றினால் என்ன செய்ய? (அவன் அதை வெளியே சொல்ல மாட்டான் என்பது வேறுவிசயம்.)
 மேக் அப் அணிவது அவளது உரிமைதான் என்றாலும், ஒரு பெண் அவளது உடல்தோற்றம் மட்டுமே அல்ல என்றாலும், இப்படி தொடர்ந்து உருமாறி செல்வது ஒருவித ஏமாற்றுதல் இல்லையா? “ஐயோ இந்த பெண்ணையா இரண்டு வருடங்களாய் பார்த்தோம்?” என அவன் மனதுக்குள் குழம்பினால் நாம் அவனை பழிசொல்லவா முடியும்?

என்ன சொல்றீங்க?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...