Skip to main content

ஹைடெக்கர் குறிப்புகள் (3)



ஹசர்லுக்கும் ஹைடெக்கருக்குமான தத்துவ மோதல்:


  • ஹசர்ல் இந்த உலகின் பொருட்களிடத்து நமது அனுபவங்கள் வழி பிரக்ஞை எப்படி செயல்படுகிறது என விசாரிக்கத் தலைப்பட்டார். இது தவறான அணுகுமுறை என்றார் ஹைடெக்கர் - நமது அனுபவங்கள் காட்டும் உலக இருப்பு என்பதே ஒரு கருத்து வடிவம் அல்லவா, ஒரு கருத்து வடிவின் வழி அனுபவங்களை, பிரக்ஞையை எப்படி அறிய முடியும் எனக் கேட்டார். .தா., உங்கள் மனத்தைப் பற்றின உங்கள் அனுமானங்கள்மனத்தைப் பற்றின மனத்தின் அனுமானங்களேஅன்றி அசலான அனுமானங்கள் அல்லதானே?
  • ஹசர்ல் மரபான மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சியை (formal ontology) முன்னெடுத்தார். இதில் மானிட இருப்பை இந்த உலகில் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்ட, முன்னறிவான மெய்மையின் மூலக்கூறுகள் (a priori categories) மூலம் அணுகுவதே பிரதானம். ஆனால் ஹைடெக்கரோ அரிஸ்டாட்டிலின் வழியில் அனைத்து பொருட்களின் இருப்பை ஒன்றிணைந்த இருப்பாகக் காணும் ஒரு ontology முன்னெடுத்தார். இதில் மனிதன் தன் மனத்தின் செயல்பாடால், பிரக்ஞையால், செயல்நோக்கால் அல்ல வெறுமனே தன் உடலால் உலகியலில் பங்கெடுப்பான் வழியாகவே தன் இருப்பை உணர்கிறான். இதில் உலகின் இருப்பு அவனை தன்பால் இழுக்கிறது (அவன் உலகை நாடுவதில்லை).
  • மனிதன் தன் உள்ளுணர்வை நம்பி உலகின் ஒவ்வொரு பொருளும் ஒரு சிறு உலகம் எனக் காணும் போக்கை transcendental சிந்தனை என்கிறார்கள். ஹசர்ல் மானிட பிரக்ஞை இப்படியே தோன்றுகிறது என்றார். ஹைடெக்கர் இதனிடத்தில் da-sein என்றொரு புதிய கோட்பாட்டைக் கொண்டு வந்தார் (da-sein என்றால் ஜெர்மன் மொழியில்அங்கே இருத்தல்என பொருள்) - அதாவது சிந்தனைக்கு, முன்னெறியான புரிதலுக்கு முன்பே தோன்றும் இருப்பு, உலகுடன் சமூகத்துடன் ஒரு பகுதியாக இருத்தல் என இதை வடிவமைத்தார். அதாவது இருட்டில் காலடியில் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அது கயிறு அல்லது அரவம் என சிந்திக்கும் முன்பு அங்கு வந்து சேர்வது, வந்த பின் அது கயிறோ என யோசிக்கும் முன் அங்குஇருப்பது”. (யோசித்த மறுநொடி அது மனத்தைப் பற்றின மனத்தின் அநுமானமாக கயிற்றரவமாகி விடும்.)  ஒரு கரப்பான் பூச்சி என்னைக் கடந்து உரசிப் பறக்கும் போது ஒரு பயம், அருவருப்பு ஏற்படுகிறது, ஆனால் அது ஏற்படும் முன்பு ஒன்று தோன்றுகிறது, அங்கே நாம்இருக்கிறோம்”, அதுவே நமது da-sein. ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் நம் நாவில் படும் அந்த மைக்ரோ நொடி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நிலையில் இருந்து குறிப்பிட்ட ஐஸ் கிரீமை குறிப்பிட்ட ஸ்பூனால் எடுத்து வாயில் வைக்கிறோம், அது நம் நாவில் படுகிறோம் - இப்படி பல சங்கதிகள் ஒரே சமயம் இணைந்து ஒரு இருப்பை உண்டாக்கிறது. இதுவே ஐஸ்கிரீம்-சாப்பிடும்-நான் எனும் இருப்பு, அதன் da-sein. இது என்னவிதமான ஐஸ் கிரீம் என யோசிக்கும் போது அது இல்லாமல் ஆகிறது.
  • ஹசர்லின் பொருட்கள் குறித்த பிரக்ஞை (intentionality) என்பதை ஹைடெக்கர் care / being-in-the-world ஆகிய கருத்தமைவுகளாக மாற்றியமைத்தார். இதன்படி இங்கு நமது இருப்பானது பிரக்ஞை பொருட்கள் மீது தன்னை வடிவமைக்கும் முன்பே, அறிவு அதை கோட்பாடாக்கும் முன்பே நிகழ்கிறது. ஒரு குழந்தை தன் அப்பாவின் கரத்தை நம்பிக்கையுடன் பற்றும் போது அது அக்கரத்தை அல்ல உலகின் கரத்தைப் பற்றுகிறது. அது சிந்திக்காமலே இந்த உலகுடன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன் இருப்பை ஏற்படுத்துகிறது. இதை ஹைடெக்கர் care என்கிறார்.


 


ஹைடெக்கர் தத்துவ வரலாற்றில் எந்த இடத்தை சேர்ந்தவர்?


ஹைடெக்கர் ஒரு phenomenologist என பொதுவாக அறியப்படுகிறார். Phenomenology (நனவு அனுபவ இயல்) என்றால் the study of structures of consciousness as experienced from the first-person point of view. அதாவது நமது பிரக்ஞையைப் பற்றி, அதை நரம்பியல் செயல்பாடாக அன்றி ஒரு அனுபவ செயல்பாடாக ஆய்வு செய்து, தத்துவ விசாரம் மூலம் அறிவது. குறிப்பாக அனுபவம் என்பதை ஒரு குறிப்பிட்ட பொருளை நோக்கி செலுத்தப்படும் intentionality ஆகப் பார்ப்பது. Intentionality என்றால் இல்பொருள் கற்பனைப் போக்கு. அதாவது மனத்தின் கட்டமைப்புகளை அனுபவம் வழியாக வெளியே நாடுவது

 ஹைடெக்கரின் ஆசானான ஹசர்ல் இந்தத் துறையில் ஒரு பெரும் சாதனையாளர். ஆனால் ஹைடெக்கர் தன்னை நனவு அனுபவ இயல்வாதியாக அல்லாமல் ontologist என அறியப்படவே விரும்புவார். Ontology என்பது மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி. அதாவது இந்த உலகில் மனிதனின் இருப்பு எப்படி அவனது இருப்புக்கான ஒரு பிரக்ஞையை தோற்றுவிக்கிறது, இந்த இருப்பை அவன் எப்படி பருப்பொருட்களாலான அனுபவங்களால் அறிகிறான் என விசாரிப்பது. நனவு அனுப இயல் என்பது ஒரு மனிதனின் அனுபவம் எப்படி உலகை நோக்கி செலுத்தப்படுகிறது என விசாரித்தால் ontology எப்படி இந்த உலகை நோக்கி அவனது இருப்பு செலுத்தப்படுகிறது என விசாரிகிக்கிறது. முன்னதில் மனரீதியான அனுபவம் என்றால் பின்னதில் பௌதீகமான இருப்பு பிரதானம்.

 இதுதான் ஹைடெக்கர் நுட்பமாக ஆழமாக அறிய வேண்டுமெனில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய வித்தியாசம்.


பிற தத்துவ அறிஞர்களின் வரிசையில் ஹைடெக்கரை எங்கே வைப்பது?


சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், விட்ஜென்ஸ்டைன், சார்த்தர் போன்ற தத்துவ அறிஞர்களை விட ஹைடெக்கர் இலக்கிய வாசகர்களுக்கு அணுக்கமானவர். அவரது மொழி உருவகங்களால் ஆனது, இதனாலே அவரை நேரடியாகப் படிப்பவர்களுக்கு பல குழப்பங்களை விளைவிப்பவர். ஆனால் அதே நேரம் மறைபொருளை விரும்பி வாசிக்கும் ஒரு வாசகனுக்கு அவரது அடிப்படையான சிந்தனைகள் புரிந்து கொள்ள எளிதானவை. இந்த சிந்தனைகள் என்னென்ன?


ஹைடெக்கரின் காலத்தில் இருப்பு குறித்து நிறைய முக்கிய சிந்தனைகள் தோன்றின - குறிப்பாக இருப்பை சுயத்திற்கு இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், சமூக ஊடாடல்களுக்கு நடுவில் உள்ள இடமென்ன, அவனுக்கு தன் வாழ்க்கை குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரமும் சுதந்திரமும் உண்டா, அவன் காலத்தில் கைவிடப்படுகிறானா போன்ற எதிர்மறையான, இருண்மையான கேள்விகளை இந்த சிந்தனையாளர்கள் எழுப்பினார்கள். இருத்தலியம் என அறியப்பட்ட இந்த தத்துவ மரபில் நமக்கு இருந்த ஒரே சாத்தியம் நமது கைகள் கட்டப்பட்டுள்ளன என உணர்ந்து துணிச்சலாக நெருக்கடிகளை எதிர்கொள்வதே. இந்த பார்வையில் உண்மை ஓரளவுக்கு உண்டு, நவீன வாழ்வின் ஒரு முக்கிய சிக்கலாக நாம் இதை உணர்கிறோம் என்பது சரியே, அதனாலே இந்த தத்துவம் இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தமானது, இன்றும் அது தாக்கம் செலுத்துகிறது. ஆனால் ஹைடெக்கர் இருத்தலியத்தின் இந்த பாதையை மாற்றி அமைத்தவர். இருப்பு என்பதை ஒரு சுயத்தின் தன்னுணர்வு எனும் இடத்தில் இருந்து உலகில் அவனது இருப்பு என புதிய ஒளியில் நோக்கியவர். அவ்விதத்தில் அவர் மெய்யியல் (metaphysical) தத்துவத்தின் திசையையும் மாற்றியமைத்தவர்


நீட்சேயை வாசித்தவர்களால் ஹைடெக்கருடன் பயணிப்பது சற்றே சுலபமாகும் - ஏனென்றால் இருவரும் தொல் கிரேக்க சிந்தனைகள், வாழ்வு முறைகளால், குறிப்பாக ஆரம்பகால கிரேக்கர்கள் காலத்தைப் புரிந்து கொண்ட விதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். காலத்தை நவீன சிந்தனையில் இருந்து ஆதி கிரேக்க சிந்தனைக்கு நகர்த்தியதே இவர்களின் தத்துவத்தின் பிரதான சாதனையாகவும், அவர்களின் சிந்தனை அமைப்புகளுக்கு அடித்தளமாகவும் அமைந்தது


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...