முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்கமாக இல்லையா உங்களுக்கு?



திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்களே அதுதான் ஜிக்கும் நடந்துள்ளது, அதை மறைக்கத்தான் இந்த 59 சீன செயலிகளின் தற்காலிகத் தடை எனும் நாடகம். ஜீயால் இத்தனை நாட்களில் ஒருமுறை கூடசீனா நம் எதிரிஎன வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அவரது pmcares நிதிக்கு 100 கோடிக்கு மேல் சீன நிறுவனங்கள் அண்மையில் பணம் கொடுத்திருக்கின்றன. இப்போது தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் கூட 30 கோடி கொடுத்திருக்கிறது. இன்று குஜராத்தில் (ஜியின் பினாமியான) அதானி 3000 கோடிக்கான ஒரு வணிக ஒப்பந்தத்தை ஒரு சீன நிறுவனத்துடன் செய்துள்ளார். பிஎஸென்னெல்லுடன் ஹுவாய் நிறுவனத்துக்குள்ள தயாரிப்பு ஒப்பந்தமும் இன்னும் ரத்தாகவில்லை. Paytmஇல் 50% மேல் அலிபாபா எனும் சீன நிறுவனம் பங்குகளை வகிக்கிறது. அதைத் தடை செய்தால் அதை பெரிதும் நம்பியிருக்கும் நம்மைப் போன்றோர் அதிகம் பாதிக்கப்படுவோம் என்றாலும் தேசப்பாதுகாப்பு என வரும் போது நிர்தாட்சண்ணியமாக தடை செய்ய வேண்டியதுதானே. ஜிக்கு இதில் என்ன பிரச்சனை?

 என் ஊகம் சீனாக்காரனின் கையில் அவரது குடுமி இருக்கிறது, அவர்களுடனான புரிந்துணர்வில் கோடானுகோடி பணம் அவருக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் லாபம் உள்ளது. அதனாலே அவர்களை நேரடியாகத் தாக்கவோ ஒரேயடியாய் தடை செய்யவோ ஜிக்கு துணிச்சல் இல்லை. அது தன் விரலைக் கொண்டு தன் கண்ணையே குத்துவதைப் போல என அவர் நினைக்கிறார்


மற்றொரு பக்கம், நாம் சீனாவை ஓட ஓட விரட்டி விட்டோம் என பிரச்சாரம் தூள் பறக்கிறது. அமேசானில் எந்த பொருளைப் போய் பார்த்தாலும் அங்கு கேள்வி-பதில் பகுதியில் யாராவது ஒருவர் வந்துஇது சீனப்பொருளா?” எனக் கேட்பதைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வியை ஒவ்வொரு பக்கமாய் போய் காப்பி பேஸ்ட் செய்வது சங்கிகளின் சமூகவலைதளப் படையே, இதன் மூலம் மக்கள் சீனாவுக்கு எதிராய் கொதித்துப் போயிருப்பதாய் ஒரு தோற்றத்தை உண்டு பண்ண நினைக்கிறார்கள். மற்றொரு பக்கம் டிக்டாக் நிறுவனத்தின் இந்திய சி.. (குஜராத்தை சார்ந்த ஒரு காந்தி) “இது ஒரு பிரச்சனையே இல்லை, மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது, அங்கே எங்கள் தரப்பை விளக்கி நாங்கள் மீண்டு வருவோம்.” என எகத்தாளமாக டிவீட் போட்டிருக்கிறார். இந்த கெத்து எங்கிருந்து வருகிறது? பணபலம், அதிகார பலம் மற்றும் செல்வாக்கால். அரசு இப்போதைக்கு விதித்துள்ளது ஒரு பாவனையான தடை எனும் நம்பிக்கையால். நாம் தான் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்திருக்கிறோமே எனும் துணிச்சலால். இதுவே இந்த அரசுநாங்கள் சீன செயலிகளை தடை செய்கிறோம், சீன வணிக நிறுவனங்களையும் உடனே தடை செய்வோம்என வெளிப்படையாக துணிச்சலாக அறிவித்திருந்தால் பேச்சுவார்த்தைக்கே இடமிருக்காதே. ஒரு சின்ன ஆள் ஒரு இந்திய தேசத்தின் தலைமைக்கே சவால் விடும்படி ட்வீட் போடும் நிலை ஏற்படாதே. ஏன் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் டபாய்க்க வேண்டும்

 அதாவது இவர்களின் மன்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சீன வியாபாரிகள், முதலீட்டாளர்களிடம் கையைக் கட்டி நிற்பாராம், மக்கள் மட்டும் சீனப் பொருட்களை பகிஷ்கரித்து போராட வேண்டுமாம். இந்த லட்சணத்தில் இந்த போலி நடவடிக்கைக்குடிஜிட்டல் ஸ்டிரைக்என ஒரு பெயர் வேறு. வெட்கமாக இல்லையா உங்களுக்கு?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...