Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சாத்தான்குளம் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் நேரடிப் பங்கு!



நான் கீழே தந்துள்ள எஸ்.பி உதயகுமாரனின் அறிக்கையைப் படியுங்கள். சாத்தான்குளம் காவல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை நாளாய் நம் அரசு காட்டிய மெத்தனத்துக்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ்ஸின் கரம் உள்ளது:


“ "Friends of Police" மற்றும் "சேவா பாரதி" அமைப்புக்களைத் தடை செய்!


1993-ஆம் ஆண்டு பிரதீப் வி. பிலிப் என்கிற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் FOP அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறார். காவல்துறையில் வேலைக்குச் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.


தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் 15 முதல் 20 வரையிலான FOP உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 34 FOP மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்..


FOP உறுப்பினர்கள் இரவு ரோந்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள், இரத்ததான முகாம்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலங்களில் கிரிமினல் வழக்கு விசாரணைகளிலும், ஊரடங்கை மீறும் வாகனங்களைப் பிடிப்பதிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப் படுகின்றனர்.


சாத்தான்குளம் படுகொலையில் நான்கு FOP உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் பரவியதும், அந்த நான்கு பேரும் தங்கள் அமைப்பில் முறைப்படி பதிந்துகொண்டவர்கள் அல்ல என்று FOP நிர்வாகம் யூன் 29 அன்று முகநூல் வழியாக அறிவித்தது.


அப்படியானால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சித்திரவதை செய்த அந்த நான்கு பேர் (கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா) யார் என்கிற கேள்வி எழுகிறது.


அவர்கள் "சேவா பாரதி" அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களில் பலர் FOP என்கிற போர்வையில் காவல்துறைக்குள் ஊடுருவி சாதிமதவாத அட்டூழியங்கள் செய்து வருகின்றனர் என்று பல சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். FOP அமைப்புக்கும், சேவா பாரதி அமைப்புக்கும் உள்ள உண்மை உறவுநிலை என்ன?


"சேவா பாரதி" ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பு. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. தமிழகத்தில் "சேவா பாரதி" அமைப்பில் 2,500 தன்னார்வலர்கள் இருப்பதாக அவர்களின் இணையதளம் சொல்கிறது


இவர்கள் உண்மையிலேயே காவல்துறையில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால், இவர்களை காவல்துறைக்குள்காவல்நிலையங்களுக்குள் நுழைய விட்டவர்கள் யார்? இந்த முடிவு காவல்துறையில் யார் யாரால், எப்போது, எங்கே எடுக்கப்பட்டது? அல்லது ஆளும் .தி.மு.. அரசு இந்த முடிவை எடுத்ததா? காவல்துறை அமைச்சராக இருக்கிற முதல்வருக்கு இந்தப் பிரச்சினை பற்றி ஏதாவது தெரியுமா, இல்லையா? உள்துறைச் செயலாளருக்கு ஏதாவது தெரியு்மா, இல்லையா?


அண்மையில் .பி.யில் "போலிஸ் மித்ரா" என்கிற பெயரில் "ஹிந்து யுவ வாகினி" எனும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் குழு ஊடுருவி, இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் அடித்து நொறுக்கியது போல, இங்கே தமிழகத்தில் "சேவா பாரதி" அமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.


குடியுரிமைச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டில்லியில் சாதாரண உடையணிந்த பல ரவுடிகள் காவல்துறையினரோடு நின்று மக்களைத் தாக்கியதை நாடேப் பார்த்து அதிர்ந்தது. பாசிசக் குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது நாட்டிற்கும், நமது சனநாயக அமைப்புக்கும் மாபெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது.


இந்த FOP - சேவா பாரதி உறவு பற்றிய ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் உடனடியாக நடந்தாக வேண்டும். தேவையற்ற இந்த இரண்டு அமைப்புக்களையும் தமிழக அரசு நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும்.


பச்சைத் தமிழகம் கட்சி

யூலை 2, 2020.”



இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது - “சேவா பாரதிஎனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள நான்கு பேர் சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலையில் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இதனாலே பாஜக தலைவர் முருகன் இந்த வழக்கை ஒரு சிறிய பிரச்சனை என அறிக்கை விடுகிறார். இதனாலே துண்டுப்பிரச்சாரத்தை வினியோகித்த காரணத்துக்காக மிஷினரிகள் இழுத்து வரப்பட்டு இதே காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டார்கள். இதனாலே தான் நமது முதல்வரே இந்த சங்கி புல்லுருவிகள் நால்வர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். இன்று தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்பட்டமான ஆட்சி. அவர்களின் ஆட்கள் காவலர்களுடன் இணைந்து எளிய மக்களை அவர்கள் கிறுத்துவர்கள் என்பதாலே அடித்துக் கொல்கிறார்கள்.

இப்படியே போனால் இந்த நாடு விளங்காது!

Comments

Anonymous said…
மோடியை பற்றி எழுதுகிறீர்கள். இவர்களைப் பற்றி எழுதுகிறீர்கள். உங்களை யாரும் வந்து பிடித்துப் போய் அடிக்க மாட்டார்களா? தெரியாமல் தான் கேட்கின்றேன்...

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...