முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்யபுத்திரனின் கவிதை குறித்த உரையாடல்



இன்று மாலை சிங்கப்பூர் தங்க மீன்கள் பதிப்பகம் சார்பாக நடந்த வாசக சந்திப்பில் மனுஷ்யபுத்திரன் அருமையாகப் பேசினார் - கவிதையின் மொழி, வடிவம், கவிதையை எடிட் செய்வது, தேய்வழக்குகளை கவிதையில் புதுமையாக, படைப்பூக்கத்துடன் பயன்படுத்துவது என தீவிரமான ஒரு இலக்கிய கலந்துரையாடலாக அது அமைந்தது. முன்பு சென்னையில் இருக்கும் போது மாலைவேளைகளில் நான் அடிக்கடி மனுஷின் வீட்டுக்கு சென்று கவிதையின் வடிவம், அவர் அப்போது படித்துக்கொண்டிருக்கிற புத்தகங்கள் குறித்தெல்லாம் உக்கிரமாக விவாதிப்பேன். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகவும், பின்னர்இன்மைஇணைய இதழை நடத்திய போதும் அவரை பேட்டி எடுத்தேன். அதெல்லாம் நினைவுக்கு வந்தது இன்று. ஆச்சரியமாக, பெரும்பாலான கேள்விகள் முதிர்ச்சியாக, கூர்மையாக இருந்தது, மரபுக்கவிதைக்கு இன்றுள்ள இடமென்ன போன்றவற்றைத் தவிர

மனுஷ் இன்று பேசியதில் ஒரு வாக்கியம் என் நெஞ்சில் தங்கி விட்டது - ஏன் கவிதை தீவிரமான கருத்துநிலையுடன், தத்துவப் பார்வையுடன் இருக்கத் தான் வேண்டுமா எனும் கேள்விக்குகவித்துவமான நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் தத்துவத்துக்குள் நுழைய வேண்டும் ஆனால் மாறாக நடக்கக் கூடாதுஎன்றார். கவிதைக்கும் தத்துவத்துக்குமான இந்த நுட்பமான வேறுபாடு முக்கியம். இந்த ஆபத்தான விளையாட்டை தமிழில் சரியாக நிகழ்த்தியவர்கள் யுவனும் தேவதேவனுமே. அதற்கு முன்பாக என்றால் ஓரளவுக்கு நகுலன். அவருக்கும் முன்பான வள்ளுவரைப் போன்ற எத்தனையோ செவ்விலக்கியவாதிகள் கவிதையின் கொதிக்கும் கரண்டியைக் கொண்டு தத்துவ வாணலியில் வறுத்திருக்கிறார்கள். .தா., வள்ளுவர். மனுஷ் இதைப் பற்றி சொன்ன போது எனக்கு சட்டென இந்த குறள் நினைவுக்கு வந்தது:


 “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலைஎனும் போது மிக எளிதாகத் தெரிகிறது. ஆனால் பௌத்தத்துக்கும் அத்வைதத்துக்குமான மோதலின் பின்னணியில் பார்க்கும் போது இது மிக விரிவான ஒரு அர்த்தத் தளத்தைப் பெறுகிறது. செவிச்செல்வத்தை, கேட்டு யோசித்து அலசி உணரும் புரிதலுக்கு புத்தர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தந்தார், அகச்செல்வம் (அது சிந்தனையை அறுத்து பிரம்மத்தை உணர்ந்து தோன்றுவது) என்பதன் இடத்தில் ஏன் வள்ளுவன் செவிச்செல்வத்தை வைத்தார் என யோசிக்கும் போது அவ்வளவு சுவாரஸ்யம் கிடைக்கிறது, மனம் விரிவடைகிறது. இதுதான் ஒரு கவிஞன் தத்துவத்துக்குள் வருவதன் பெருஞ்சிறப்பு. அப்போது நம் மொழி பொன்னை போல பொலிவடைகிறது.


கவிதை குறித்த டெக்னிக்கலான விவாதங்கள் எனக்குப் பிடித்தமானது, ஏனென்றால் சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களை இப்படி சுலபத்தில் அலச முடியும். மேலும் வேறெந்த வடிவையும் விட கவிதை ரொம்பவே நுட்பமானது - ஒரு சிறிய சொல், அதன் தொனி, அது அமர்ந்திருக்கும் இடம் ஒரு கவிதை வரியின் பொருளை மாற்றும், அதற்கு ஒரு தனி ஒளியைக் கொடுக்கும். கவிதை எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் மனத்திறப்பை தருவான் இவை. செவிச்செல்வம்!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...