முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ அமெரிக்காவுக்கே திரும்பப் போயிடு சிவாஜி



ஆட்டுக்கார அண்ணாமலைபாரதிராஜாஎனப்படும் பாஜகவில் இணைந்ததை ஒட்டி நிறைய மீம்கள் வெளியாகின்றன, #டகால்டிஅண்ணாமலை எனும் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்த பகடிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு இது ஒரு திரைக்கதைக்குள் அவசரமாய் திணிக்கப்பட்ட காட்சியாகத் தெரிகிறது:

அதாவது ஆட்டுக்காரர் கர்நாடகாவில் காவல் அதிகாரியாக இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் மும்முரமாய் பங்கேற்று, அங்குள்ள பாஜக தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி, அவர்களின் செல்லப்பிள்ளையாகி வேகமாய் மேலதிகாரியாக வளர்கிறார். ஊடகங்களிலும் தன் பெயர் தொடர்ந்து வரும்படி பார்த்துக்கொண்டு ஒருதுடிப்பான அதிகாரிபிம்பத்தை வளர்த்தெடுக்கிறார். ஆனால் வழக்கமான பாணியில் ஒரு கட்சி-சார் .பி.எல் காவல் அதிகாரியாக தொடர்வதில், ஓய்வுறும்போது கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு .ஸி.ஆரில் பெரிய பங்களா அமைத்து செட்டில் ஆவதில் நம் ஆட்டுக்காரருக்கு ஆரம்பத்திலே ஆர்வமில்லை. அவர்பெரிதினும் பெரிதுகேட்பவர். ஏன் அரசியல்வாதிகள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுகளுக்காக வேலை செய்து, அடிக்கடி ஆட்சிமாற்றங்களின் போது பந்தாடப்பட்டு, பலரது கால்களில் விழுந்து, தலை நரைத்த நிலையில் தொப்பையும் பங்களாவுமாய் ஊர்ப்பக்கம் முடங்க வேண்டும்? நாமே அரசியல்வாதி ஆகி விட்டால் என்ன? ஐந்தே வருடங்களில் மொத்த மாநிலத்தையும் நம் சுட்டு விரல் அசைவுக்கு நடனமாட வைக்கலாமே


இப்படித்தான் அவர் தில்லியில் ஷா, மோடியை சந்தித்து கட்சியில் இணைந்து, கர்நாடகத்தில் பதவி பெற்று, தேர்தலில் சீட் வாங்கி எம்.எல்., எம்.பி ஆகலாம் என கனவு கண்டிருக்கிறார். அதற்கு ஏற்ப அவர் அரசியல் தொடர்புகள், கர்நாடகாவுக்குள் தன்னை கன்னடியராகக் காட்டிக் கொண்டு உயிர் உள்ளுளவும் கன்னடமே பேசுவேன், இம்மண்ணின் மைந்தன் நான் என்றெல்லாம் நாடகம் போட்டிருக்கிறார். ஊடக நண்பர்களைக் கொண்டு ஒரு எதிர்கால நட்சத்திரம் எனும் பிம்பத்தை அவ்வப்போது தூசுதட்டி வைத்திருக்கிறார். ஆனால் தில்லியில் நடந்ததோ வேறு - அவர்களுக்கு 1) இவர் கர்நாடகாவில் இருப்பது தேவையில்லை / உள்ளூர் அரசியல் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது 2) தமிழகம் மீதே நட்டா, ஷா போன்றோருக்கு கவனம் இருந்ததால் இவரை - ஊழலற்ற அதிகாரி சகாயத்தின் பாணியில் துடிப்பான .பி.எஸ் இளஞ்சிங்கம் போல முன்னிறுத்தி - இங்கே அனுப்பலாம் எனத் திட்டமிட்டு அனுப்பி இருக்கிறார்கள்

இதை நமது ஆட்டுக்காரர் எதிர்பார்த்திருக்க மாட்டார், ஜெர்க்காகி விட்டு சரி இதே பிம்பத்தை தமிழகத்தில் போய் உருவாக்கிப் பார்ப்போம் என கிளம்பி வந்து விட்டார். இங்கே வந்தால் அவர் பேசுவது ஒன்றும் எடுபடவில்லை. என்ன பண்ணினாலும் கலாய்க்கிறார்கள், என்ன சொன்னாலும் திட்டுகிறார்கள். கன்னடா அளவுக்கு சரளமாக தமிழில் பேசவும் வரவில்லை. அந்த முகத்தில் அதிகாரத் திமிர் இப்போதும் வழிகிறது. அவரைப் பார்த்தாலே கோபம் வருகிறது. GobackModi என டிரெண்டிங் செய்த மாநிலத்துக்கு வந்து எனக்கு மோடியை ரொம்ப பிடிக்கும் என எடுத்த எடுப்பிலே பேசினால் எப்படி எடுபடும்? பாஜகவினரைப் போன்றே இவரும் சாதி, மதவாதம், இட ஒதுக்கீடு, காவல்துறை வன்முறை என எதைப் பேசினாலும் அதில் ஒரு மக்கள் விரோத மனநிலை வெளிப்படுகிறது. அதாவது வடக்கேயும் கர்நாடகாவிலும் ஒரு சங்கி பேசி கைத்தட்டு வாங்குவதை இங்கே பேசினால், செருப்படி வாங்குகிறார். ஆனால் தொடர்ந்து ஊடகங்கள் சளைக்காமல் அவரை ஊதிப்பெருக்கியபடியும் இருக்கின்றன.


ஆட்டுக்காரருக்கு ரொம்ப பொறுமை இல்லை - ஒரே நாளில் மனிஷா கொய்ராலாவை கல்யாணம் பண்ணிக்கொண்டு, ரௌடிகளுடன் சண்டைபோட்டு, மூத்த அரசியல்வாதிகளை முறியடித்து, மக்கள் ஆதரவுபெற்ற ஒரே தலைவனாக முதல்வராக கால்மேல் கால் போட்டு உட்கார வேண்டும். ஆனால் அது சினிமாவில் மட்டும்தானே முடியும்?

 அவர் பாஜகவில் சேர்வது ஆரம்பகட்ட திட்டத்தில் இல்லை என நினைக்கிறேன். ரஜினி ஆதரவில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து விட்டால், அந்த சமயம் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு மூன்றாவது, நான்காவது அணிகளுக்குக் கிடைத்து ரஜினியின் பின்புலத்தில், பாஜக பினாமி ஆட்சி ஒன்றை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டால் தனக்கு ஒரு முக்கிய அமைச்சர் பதவி, ஏன் முதலமைச்சர் பதவி கூட கிடைக்கலாம் என அவர் கனவு கண்டிருக்கலாம். ஆனால் அவரால் தனியாக நின்று நோட்டா கூட வாங்க முடியாது. அதற்கு அவருக்கு வேலை பார்க்க தொண்டர்களோ உள்-கட்டமைப்போ இல்லை; உள்ளூரில் பெரிய செல்வாக்கும் இல்லை. அவரே கர்நாடகாவில் பேசும் போது சொல்கிறார் - “தமிழகத்தில் என்னை என் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் என நூறு பேருக்குத்தான் தெரியும், ஆனால் கர்நாடகாவிலோ நான் ஒரு பிரபலம், பல கோடி பேர் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள், நான் இம்மண்ணின் மைந்தனாக கொண்டாப்படுகிறேன் ....” பாஜகவின் தூண்டுதலால் தமிழக ஊடகங்கள் ஆட்டுக்காரருக்கு நிறைய விளம்பரம் கொடுத்து அவரை இங்கு பல லட்சம் பேருக்கு தெரிந்தவர் ஆக்கியிருக்கலாம். ஆனால் செல்வாக்கு அவருக்கு இப்போதும் 100 பேருக்கு மேல் இல்லை. என்னதான் திமுக-அதிமுக இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம் என கொக்கரித்தாலும் அதிமுகவின் மறைமுக ஆதரவு இல்லாமல் ரஜினி துவங்கி ஆட்டுக்காரர் வரை தம்மால் தேர்தலில் ஜெயிக்க முடியாது என அறிவர். இதனால்தான் ஆட்டுக்காரர் பாஜக தலைமையை தொடர்பு கொண்டு அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதவுடன் தான் தேர்தலில் களமிறங்க வேண்டும் என கோருகிறார், ஆனால் பேரம் படியவில்லை. அமைச்சர் அதை நிராகரித்து விட்டார். (அமைச்சர் வேலுமணி இன்னொரு பக்கம் தன்னை முதலமைச்சராக முயற்சி செய்ய தில்லி தலைமைக்கு வேண்டுகோள் வைப்பதாக சொல்கிறார்கள்), ஆட்டுக்காரர் மனமுடைந்திருக்கிறார். தேர்தலில் நின்று போராடி குறைந்த வாக்குகளுடன் தோற்று அசிங்கப்பட அவர் தயாரில்லை. அவர் அறிவார் - இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் கணிசமான இடங்களை வெல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம் மறைமுகமாய் கூட்டணி ஆட்சியை அமைத்து தமிழகத்தை கைப்பற்ற முடியாவிட்டால், தமிழக பாஜகவில் பல தலைகள் உருளும். ஸ்டாலினை இவ்வளவு சாபம் விடும் நட்டா தன் சொந்த கட்சியினரை என்ன பண்ணுவார் யோசியுங்கள்! மிதித்தே கொல்லுவார். அடுத்த 8-9 மாதங்களில் தான் கணிசமான பணத்தை செலவழித்து தோற்று வேறு போனால் தில்லி தலைமை தன்னை திரும்பிக் கூட பார்க்காது என ஆட்டுக்காரர் அறிவார். கடைசியில் புழுக்கை தான் எஞ்சும்

என் கணிப்பு அவர் இத்தேர்தலில் பாஜகவுக்காக நேரடியாக அங்கங்கே பிரச்சாரம் செய்து ஒதுங்கிக் கொள்வார் என்பது. அதோடு அவரது தேனிலவும் முடிவுக்கு வந்து விடும்.

நினைத்தது நடக்கவில்லை. விழுந்து விட்டோம், ஆனால் மீசையில் மண் ஒட்டக் கூடாதே! அதனால் தான் தில்லி வரை போய் நட்டாவை சந்தித்து உறுப்பினர் ஆகி உள்ள நாடகம். தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் தில்லிவரை போகலாம், எந்த ஆதரவும், அரசியல் பின்புலமும் இல்லாத இவர் ஏன் இவ்வளவு டிராமா போட வேண்டும்? அதை ஏன் ஒவ்வொரு ஊடகமும் பேச வேண்டும்? ஏதோ பெரிய அரசியல் திருப்பம் நடந்ததைப் போல நம்மை பேச வைத்து, அசிங்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்குத்தான்.


மேலும் பாஜக அவரை மறைமுகமாய் களமிறக்க வேண்டும் எனத்திட்டமிட்ட பின்னர் இப்போது கட்சியில் சேர்த்துக்கொள்வது அவரது தோல்வியைத்தான், தில்லி தலைமையே அவரைக் கைவிட்டுவிட்டதைத் தான் காட்டுகிறது


நீ அமெரிக்காவுக்கே திரும்பப் போயிடு சிவாஜி!

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
இதை நான் பேஸ்புக்கில் காப்பி பேஸ்ட் பன்ணிப் போட்டுக் கொள்கிறேன். why don't provide share option to face book also? Thanks.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...