முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தத்துவ வாசிப்பு - செய்ய வேண்டியதும் கூடாததும்


என்னவென்று தெரியவில்லைஇரண்டு பேர் ஒரே சமயம் இன்பாக்ஸில் என்னிடம் இமானுவல் காண்டைவாசிப்பதைப் பற்றிக் கேட்கிறார்கள்ஒரு பக்கம் ஆச்சரியம்மறுபக்கம் மகிழ்ச்சிமுகநூல் வந்த பிறகு தான்மேற்கத்திய தத்துவம் படிக்க விரும்புகிற சிலரையாவது தமிழில் சந்திக்கிறேன்ஹபீப் ஹாதி எனும் ஒரு நண்பர்இமானுவல் காண்ட்

குறித்து தமிழில் ஏதாவது புத்தகம் வந்துள்ளதா எனக் கேட்டார்எனக்குத் தெரியவில்லைமுகநூல் நண்பர்கள்தெரிந்தால் சொல்லவும்!


அடுத்து ஒரு நண்பர்ராஜ் லஷ்மணன்இப்படிக் கேட்டிருக்கிறார்:


“Sir, I don't have any introduction to philosophy other than knowing a brief version of some philosophers mill, Locke, kant. Where should I start my philosophical reading, would it be good if I start with kant. Thanks in advance sir.”


என் பதில் இது:


1) தத்துவம் வாசிப்பதற்கும்இலக்கியம் வாசிப்பதற்கும் முறைமைகள் ஒன்றே - ஒன்று வரலாற்று ரீதியாகஒழுங்குவரிசையில் படிக்கலாம்மேற்கத்திய தத்துவம் என்றால் சாக்ரடீஸில் இருந்து துவங்கலாம்மூலநூல்வாசிப்பே சிறந்ததுஏனென்றால் அறிமுக நூல்கள் படித்தால் அவை தரும் கண்ணோட்டத்தின் வழியே ஒருதத்துவத்தை தொகுக்கத் தோன்றும்இருந்தாலும் ஒரு ஆறுதலுக்காகதன்னம்பிக்கையை பெறுவதற்காக Very Short Introduction போன்ற தொடர்களில் இருந்து ஒன்றை எடுத்து படிக்கலாம்ஆனால் மூலநூலைப் படிக்கும்போது பெரும்பாலும் இந்த மிகச்சுருக்க அறிமுகங்கள் சொல்வது தவறு எனத் தோன்றும்இதைத் தவிர்க்கமுடியாது.


2) வரலாற்று ரீதியாக என்றேனே அதற்கென தத்துவ வரலாறு நூல்கள் பல உள்ளனஜாலியான வாசிப்புக்கு வில்டியூரெண்டை சொல்லலாம்சுருக்கமானதர்க்க ரீதியான அறிமுகத்துக்கு பெர்ண்ட்னெண்ட் ரஸலின் தத்துவவரலாற்றை பரிந்துரைக்கலாம்என் இளமையில் நான் ரஸலை கிட்டத்தட்ட வழிபட்டே வந்தேன்அவர் காட்டும்கெத்துபோகிற போக்கில் சிலரை புறமொதிக்கி செல்வதுஸ்டைலான மொழிரத்தினச் சுருக்கமாகப் பேசுவதுஎன்னைக் கவர்ந்தனஆனால் ரஸலின் எழுத்தில் உள்ள குறைகள் பின்பே எனக்கு விளங்கியதுரஸல் ஒருபொருண்மைவாதிஅவரது கண்ணோட்டத்துக்கு ஒத்து வராத தத்துவ அறிஞர்களை நமது பேஸ்புக் மேதாவிகள்செய்வதைப் போல முத்திரை குத்தி கழித்துக் கட்டி விடுவார்நீட்சேயின் பக்தர்கள் அவர் தனது History of Western Philosophyயில்  நீட்சேய்க்கு வழங்கி உள்ள அறிமுகத்தைப் படித்தால் ரத்த வாந்தி எடுப்பார்கள்அல்லது பக்கத்தில் வருகிற யாரையாவது நாலு சாத்து சாத்துவார்கள்அந்தளவுக்கு பித்துக்குளித்தனமாகஇருக்கும் அதனால் ரஸல் எனும் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்து விட்டேன்அவரை நான்அதிகமும் பரிந்துரைப்பதில்லை.


3) சரி எந்த வரிசையில் படிப்பதுஎப்படியும் படிக்கலாம்சாக்ரடீஸ்பிளேட்டோஅரிஸ்டாட்டில் என எடுத்துக்மொண்டாலே அணுகுமுறைகண்டுபிடிப்புகள்தர்க்கத்தை பயன்படுத்தும் விதத்தில் அவ்வளவு வித்தியாசங்கள்அவர்களுக்கு இடையில் ஒரு தொடர்ச்சியை கண்டுபிடித்து ஒரு வரலாற்றை கற்பனை செய்யலாம்எனக்குஇந்த வகை வாசிப்பில் உடன்பாடில்லைபௌத்தத்துக்கும் அத்வைதத்துகுமானநாகார்ஜுனருக்கும்தெரிதாவுக்குமான ஒற்றுமைகளைத் தேடுவதைப் போன்ற வியர்த்தமான செயல் இதுஆகையால் வரிசையாகப்படித்தாலும் ஒவ்வொரு அறிஞரையும் தனித்துவமாக கண்டு படித்தாலே ஆழமாய் போக முடியும் என்பதே என்நம்பிக்கை


4) மூலநூலைப் படித்தால் புரியுமா?

அது உங்கள் முதிர்ச்சியைப் பொறுத்ததுஅதாவது பயிற்சி அல்லமுதிர்ச்சிநான் ஏற்கனவே சொன்னதைப்போல அரிஸ்டாட்டிலை நன்கு வாசித்துப் பயின்றால் அதை வைத்து சாக்ரடீஸையோ ஹைடெக்கரையோபுரிந்து கொள்ள முடியாதுஆனால் வாழ்க்கையை குறித்து ஆழமாய் அந்த நூல்களைக் கொண்டு வாசிக்கத்தெரிய வேண்டும்தொடர்ந்து தீவிரமாக தத்துவத்தை பரிசீலிக்கும் மனம் அமைப்பு வேண்டும்நான் பதின்வயதில் இருந்தே தத்துவத்தில் கால்களை அளைந்து வருகிறேன் என்றாலும் எனக்கு அந்த முதிர்ச்சி வரநாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டதுஆனால் என்னுடைய மாணவனான ஆயுஷுக்கு அது 20 வயதிலேயேஅமைந்து விட்டதுஅவன் என்னுடன் இணைந்து ஹைடெக்கர் குறித்து நூல் எழுதினான்இப்போது நாங்கள்நாகார்ஜுனரைப் பற்றி ஒரு நூலை எழுதி வருகிறோம்அவன் வயதில் எனக்கு அந்த முதிர்ச்சி சத்தியமாகஇல்லைநான் அப்போது கிரிக்கெட் பார்த்துக் கொண்டும்பெண்களைப் பற்றி கவலைப்படும் கொண்டும்அவ்வப்போது இலக்கிய கிரீடத்தை தனிமையில் சூடிப் பார்த்துக் கொண்டும் இருந்தேன்

நான் சாக்ரடீஸை அன்று படித்த போது அவரது வாதத்திறன் என்னைக் கவர்ந்ததுஇரு பத்தாண்டுகளுக்க்குப்பிறகு படித்த போது அவர் ஒரு சூன்யவாதிபின்நவீன விளையாட்டுக்காரர்களுக்கி இணையானவர் எனப்புரிந்ததுநீட்சேயை அப்போது படித்த போது அந்த கவித்துவத்தில் சொக்கிப் போனேன்ஆனால் தொடர்ந்துவாசிக்க வாசிக்கவே அவரது சொற்களுக்குப் பின்னுள்ள அரசியல் விளங்கியதுஅவர் விளக்குகிற இருப்பு மீதுவெளிச்சம் விழுந்தது.

ஆகையால்வயதுக்கும் தத்துவ வாசிப்புக்கும்உங்கள் முதிர்ச்சிக்கும் சம்மந்தமில்லதகவல் அறிவுபகுத்தறிவுபோன்றவையும் தத்துவத்துக்கு உதவாதுநீங்கள் தானாய் கனிய வேண்டும்அதுவரை சும்மா வாசித்துக்காத்திருங்கள்.


5) அடுத்துஎல்லா தத்துவங்களையும் ஒரே தட்டில் வைத்து படிக்காதீர்கள்உங்கள் மன அமைப்புக்கு ஏற்றதேடலுக்கு விடை தருகிற சிலர் இருப்பார்கள்உங்கள் மனம் அவர்களை நோக்கி அதிகமாய் ஈர்க்கப்படும்அவர்களையும் அவர்களைப் போன்றோரையும் அதிகமாய்ப் படியுங்கள்அங்கிருந்து உங்களை ஈர்க்கிறஉங்களுக்கு முக்கியமான தத்துவப்பள்ளியை அடையாளம் காணுங்கள்.தா., நான் ஆரம்பத்தில்அத்வைதத்தை படிக்க முயன்றேன்ஆனால் பௌத்தம் - சூனியவாதம் - படிக்கும் போது கிடைக்கும் உற்சாகம்மகிழ்ச்சிஅறிவுக்கிளர்ச்சி எனக்கு அத்வைதம் பற்றி வாசிக்கும் போது இல்லைஏனென்றால் நான் இயல்பில்ஒரு மறுப்புவாதிஒன்றை கட்டி எழுப்புவதை விட உடைத்து எறிவதில் களிப்பு அடைகிறவன்எனக்கு ஏற்றவர்நாகார்ஜுனரேநான் அவரை தெரிதாடெலூஸ் போன்றோர் வழி எதேச்சையாய் கண்டடைந்தேன்ஆனால்நீங்கள் அம்பேத்கர் வழி பௌத்தத்துக்குள் வந்தால் அது வேறொன்றாக இருக்கும்அதே போல கடந்தபத்தாண்டில் நான் அதிகமும் விரும்பி வாசித்தது ஜெர்மானிய தத்துவவாதிகளையே என அண்மையில்சட்டெனத் தோன்றியதுஅப்படி அமைந்து விட்டதுஉங்களுக்கு இதைப் போல கீழைத்தேய தத்துவங்கள்பிரஞ்சு தத்துவம்அல்லது ஆங்கிலேய தத்துவ மரபுடனோ ஒரு தொப்புள் கொடி உறவிருக்கலாம்


 அடுத்துஉங்கள் பாதை பொருண்மைவாதம்பொருள்முதல்வாதம் என்றால் மெய்யியல்இருத்தலியம் அதன்அசலான அமைவில் உங்களுக்கானது அல்லஉலகமும்அதன் இருப்பும் சாரமானது என உங்கள் அனுபவங்கள்கற்றுத் தந்தால் பின்நவீன காலத்து தத்துவமோசூன்யவாத பௌத்தமோ உங்களுக்கு ஏற்றது அல்லநீங்கள்தட்டுத்தடுமாறி வைதீகத்தின் வாசல் கதவை நள்ளிரவில் தட்டுவீர்கள்.


 அதாவது தத்துவ வாசிப்பை அகம்-புறம் என ஒரு வசதிக்காக பிரிப்பார்கள்இதில் நீங்கள் ஒன்றைஇதயபூர்வமாக தேர்ந்து கொள்ள வேண்டும்அடுத்து அகமும் புறமும் ஒன்றே எனும் மூன்றாவது தரப்புக்கு வந்துசேரலாம்அல்லது இரண்டாவதுடனே நின்று கொள்ளலாம்உங்கள் வாழ்க்கைப் பார்வையில் இருந்துதத்துவத்தை பிரித்து பார்க்கலாகாதுஇது முக்கியம்.


  1. அடுத்ததுமதத்தையும் தத்துவத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாதுசில அருமையான தத்துவவாசிப்பாளர்கள் மதத்தின் சகதிக்குள் மாட்டிக் கொள்வதைக் கண்டு வருந்தி இருக்கிறேன்கத்தோலிக்கநம்பிக்கைகளுக்கு இணங்காத தத்துவங்களைப் படிக்க மறுக்கும் அறிஞர்களைக் கண்டிருக்கிறேன்அதேபோலத் தான் வைதீகமும்கோவை ஞானி ஒரு பயிற்சி பெற்ற தத்துவ வாசிப்பாளர் அல்ல என்றாலும்அவர்தன் வாழ்நாள் முழுக்க கடவுள் என்கிற ஒரு சாரத்தை விட்டு வெளியேற முடியாமல் திணறியதைஅதற்குள்மார்க்ஸியத்தைதமிழ் தேசியத்தைஇலக்கியத்தை பொருத்த முயன்று ஆயுளை வீணடித்ததைப் பற்றிமுன்பு எழுதியிருந்தேன்ஒரு சிந்தனையாளன் இப்படி மரபின் காவலனாக இருக்கக் கூடாது. “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்”, “மரபுக்கேற்ற மார்க்ஸியம்” என்றெல்லாம் கிளிஜோஸியம் காட்டக் கூடாது. அவன்கட்டுத்தளைகளை அறுத்தெறியும் தேடல் கொண்டிருக்க வேண்டும்நிரூபித்தல்களை மறுப்பதேதத்துவத்தின் நோக்கம் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும்அதாவது தத்துவத்துக்குள் நமது அறிவின் பாரத்தைமதத்தின்சாதியின் அரசியலை கொண்டு வரக் கூடாது.
  2. இறுதியாகதனியாக வாசிக்காதீர்கள்முடிந்த அளவுக்கு கூட்டாக வாசியுங்கள்அப்போது தத்துவம்எளிதாகும்தத்துவம் என்பது நாவல் அல்லஅதை விவாதித்து விளங்கும் விதமே உருவாக்கிஇருக்கிறார்கள்பண்டைய காலத்தில் மடங்களில் அப்படித்தான் சதா வாதிட்டு மோதி தத்துவம்கற்றார்கள்இன்றும் திபெத்திய பௌத்த மரபில் இப்போக்கு உள்ளதுஆகையால் உங்களுக்காக reading buddyவாசிப்புத் துணைவனைக் கண்டுபிடியுங்கள்பரஸ்பரம் கேள்விகளைக் கேட்டு விவாதித்துஉங்களுக்குள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடிபடியுங்கள்.

வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...