முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாயிகள் மசோதா - கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம்





முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள்.

அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள்.

இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும் பறிபோகிறது.


ஜெயரஞ்சன் சொல்வதைப் போல இது பிரம்மாண்டமான கார்ப்பரேட்டுகளுக்கு நேரடிக் கூலிகளாக விவசாயிகளை மாற்றப் போகிறது. இனி எந்த மாநிலத்தில் எந்த உணவுப்பொருளின் விலையையும் அந்த மாநிலமல்ல, இந்த சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளின் வியாபார காந்தங்களே தீர்மானிப்பர். இந்த நிறுவனங்களே கதியென ஆகிய பின்னர் இவர்கள் விலையை சரியான நேரத்தில் தரவில்லை எனில் விவசாயிகளுக்கு அரசிடம் உதவி கோர முடியாது. மத்தியஸ்த இடத்தில் மாநில அரசு இருக்காது. அதை ஒரு அம்பானியோ அதானியோ தான் தீர்மானிப்பார். உணவுப்பொருட்களை மொத்தமாய் வாங்கி பதுக்குகிற பணியை ஒரு பெரிய கார்ப்பரேட் செய்தால் பின்னர் அதன் விளைவு எவ்வளவு பாரித்ததாக இருக்கும்?

அது மட்டுமல்ல, ஒரு மாநில மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களை விடுத்து எவற்றினால் ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் கூடுதல் லாபம் வருமே அதை மட்டுமே அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் பயிரிடும் கட்டாயத்துக்கு ஆட்படலாம். 


அவகடோ எனும் பழம் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ, சிலே போன்ற நாடுகளில் இருந்து பெருமளவுக்கு ஏற்றுமதியாகின. இதற்குத் தோதாக அவிகடோ எடைக்குறைப்புக்கு ஏற்ற பழம் என ஒரு கதை பரப்பட்டது. விளைவாக இதன் தேவையும் விலையும் கன்னாபின்னாவென ஏறியது. மெக்ஸிகா, சிலேவில் பாரம்பரிய விவசாயம் கைவிடப்பட்டு, எங்கு பார்த்தாலும் அவகடோ பயிரிட்டார்கள். இந்த அவகடோவைப் பயிரிடுவதற்கு ஒருநாளைக்கு அங்கே 9.5 பில்லியன் நீரை பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த நாடுகளில் சூழல் சீரழிந்து, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. எல்லா நதிகளும் வற்றி விட்டன. வெப்பம் அதிகமாகி அடிக்கடி புயல்மழை வரத் தொடங்கியது. மக்களால் எதிர்க்க முடியாதபடிக்கு கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் கட்டுப்படுத்துகின்றன. அரசு எதிலும் தலையிடாமல் முதலாளிகளிடம் கட்டிங் வாங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அத்தகைய நிலைதான் இந்தியாவிலும் இனி கார்ப்பரேட் விவசாயச் சூழலில் ஏற்படும். ஒரு மாநிலத்தின் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருளை இனி பயிரிட முடியாது. இதுவரை எளிதில் வாங்கி சாப்பிட்டவை இனி கிடைக்காது. இங்கு உற்பத்தி ஆகிற பொருட்கள் வெளியே அனுப்பப்படுவதால் அதுவும் நமக்குக் கிடைக்காது. ஒவ்வொரு மாநிலத்தையும் தம் வியாபார இலக்குக்கான ஒரு சோதனைக் களமாக அம்பானி, அதானிகள் மாற்றுவார்கள்.   


இந்த நிறுவனங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்குமென்பதால் வாங்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்வார்கள்; முதலில் நல்ல விலைக்கு வாங்கி மொத்த சந்தையையும் இடைத்தரக வர்த்தகர்களிடம் இருந்து பறித்து விட்டு தாம் மட்டுமே ஒரே போக்கிடம் எனும் நிலையை உருவாக்கிய பின்னர் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள் - வெங்காயத்தை அதானி / அம்பானி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதிக விற்பதாய் முடிவெடுத்தால் விவசாயிகளால் அவரை எதிர்த்து யாரிடம் போக முடியும்? மாநில அரசால் அதை எதிர்க்க முடியுமா? வழக்காடு மன்றம் தான் செல்ல முடியும். ஆனால் அங்குள்ள ரப்பர்-முதுகு சங்கி நீதிபதிகள் என்ன பதிலளிப்பார்கள் எனத் தெரியாதா? 


ஒருமுறை மடியை அவிழ்த்து சரணடைந்து விட்டால் பின்னர் வேறெந்த பெரிய நிறுவனமும் விவசாயிகளுக்கு கூடுதல் விலையைத் தர மாட்டார்கள். சிறுவணிகர்களோ வேறு வர்த்தகத்துக்கு பெயர்ந்திருப்பார்கள். கசாப்புக்கு அனுப்பப்பட்ட மாட்டின் நிலைதான் நம் விவசாயிகளுக்கும் ஏற்படும். பேரம் பேசுவது போக ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்க முடியாது.  


எந்த மாநிலத்திலும் யாரும் உணவுப்பொருட்களை வாங்கி விற்கலாம் என திறந்த சந்தை உருவானால் போட்டி ஏற்படும், போட்டிச்சூழலில் விவசாயிக்கு கூடுதல் லாபம் வரும் என்பது பச்சைப் பொய். இன்றைய நவதாராளவாதச் சூழலில் போட்டியென்பது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும், பின்னர் ஒரே விலை தான்.


அதுமட்டுமல்ல, அரசு இதுவரை விவசாயிகளுக்கு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதார விலையும் மெல்ல மெல்ல கைவிடப்படும். நீங்களாச்சு அம்பானி/அதானியாச்சு என அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்.


மோடி அரசு தனது பிரதான விசுவாசம் பெருவர்த்தக நிறுவனங்களிடத்தே என மீண்டும் காட்டியுள்ளது. மோடி எவ்வளவு குரூரமானவர் என்றால் விவசாயிகளின் விதைப்பையை வெட்டிவிட்டு அவர்களுக்கே வாழ்த்துக்கள் சொல்வார்?

அதிமுக அரசு எந்தளவுக்கு வெட்கம் கெட்டது எனில் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தன் எஜமான்களுக்கு சலாம் போடும்? இவர்கள் ஊழல் செய்து குவித்த பல்லாயிரம் கோடி பணம் அலாவுதீனின் பூதம் போல மத்திய அரசிடம் அடிமைப்பணி செய்ய வைக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தில் வாழவே நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.

கருத்துகள்

Murugan R.D. இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரையும் ஓகே
ஆளுங்கட்சிய விமர்சிக்கிறதுலாம் ஓகே
ஆனா வேற எந்த மாநில அரசு இதை கடுமையாக எதிர்க்கிறதுனு சொல்ல முடியுமா, எதிர்த்தாலும் அவர்கள் மாநிலங்களில் இந்த சட்டத்தை வரவிடாமல் தடுக்க முடியுமா?

நீங்க திராவிட தீவிர ஆதரவாளரா இருக்கீங்கன்னு தெரியுது,, அதே திமுக இப்ப ஆட்சியில் இருந்தால் என்ன செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க,,,

அரசியல்வாதிகளை மிரட்ட பல துறைகளையும் நுணுக்கமாக பயன்படுத்தும் மத்தியஅரசின் கிடுக்கிப்பிடியையும் மீறி (ஒரு வேளை ஆட்சியிலிருந்திருந்தால்) திமுக நீங்க எதிர்பார்ப்பது போல மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்குமா,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...