முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மும்மொழிக் கொள்கையை ஏன் பிடிவாதமாய் பின்பற்ற வேண்டும்?


 

“மத்திய கல்வி அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது என்றோ, அல்லது 2 மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றோ தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு பரிந்துரை வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக அரசு சார்பில், 2 மொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்று பரிந்துரை அனுப்பியுள்ளனர். ஆனால், நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மூன்றாவது எந்த மொழி என்பதை மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்பம் அது. புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளார்.”

- செய்தி


தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகம், வங்காளம், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலும் மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால் அது பின்னர் நாடுமுழுக்க இப்படியான கோரிக்கைகளை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது. இது அவர்களுக்கு ஒரு மானப்பிரச்சனை ஆகி விட்டது.

பாஜக இந்தி என்பது ஒரு இந்து மொழி என நம்புகிறது; ஆகையால் இந்தி எதிர்ப்பை அது ‘இந்து’ எதிர்ப்பாகக் காண்கிறது. எது தேசிய / ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் எனும் விவாதம் தேசவிடுதலைக்கு முன்பு ஏற்பட்ட போதிருந்தே இந்து - இஸ்லாமிய மொழி எனும் பிரிவினையின் அடிப்படையில் தான் பாகிஸ்தானுக்கு உருது என்றால் நமக்கு இந்தி என காங்கிரஸ் சங்கிகள் முடிவெடுத்தார்கள்.

 காங்கிரசார் விசயத்தில் வடக்கத்திய அரசியல்காதிகள் அதிகாரத்தை மொத்தமாய் கைப்பற்ற இது உதவியது. மொழி என்பது ஒரு காலனிய ஆயுதம். நீங்கள் இந்தியை செவ்வனே கற்று, அதில் பேசினால் அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும் எனும் நிலை ஏற்பட்டால் அதைப்பேசுவோருக்கு தாய்மொழி, சொந்த மொழி மீது தாழ்வுணர்வு ஏற்படும். இந்தியை சிறப்பாய் பேசுவோரை விட எப்போதுமே வடக்கிந்திய மண்ணின் மைந்தர்களே அதிகாரத்தில் அமர முடியும். மற்றோர் அவர்களுக்கு அடிமைகள். இந்தி பேசத் தெரியாவிடில் இன்னும் மோசம் - அதிகாரம் பற்றி கனவே காண முடியாது. (காமராஜரால் ஏன் பிரதமர் ஆக முடியவில்லை?)

ஜெயலலிதா இருந்திருந்தால் அவரால் ஒருநாள் பிரதமர் ஆகியிருக்க முடியும் என சிலர் சொல்கிறார்கள் - ஒருவேளை ஒரு டம்மி பிரதமராக இருந்திருக்கலாம், அவரால் ஒரு போதும் இந்தியை / இந்திக்கு நெருக்கமான மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு வடக்கிந்தியனைப் போல ஆளுகை செய்ய முடியாது. இது மொத்த இந்தியர்களிடமும் பேச ஒரு பொதுமொழி வேண்டும் என்கிற நிபந்தனை அல்ல - வடக்கந்தியர்களுக்கு உங்களைப் பார்த்தால் அவர்களது ஆள் எனத் தெரிய வேண்டும். அப்போது மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். அவர்களைத் தவிர மிச்ச இந்தியர்களின் விருப்பம் இங்கு முக்கியமில்லை. அவர்களுக்கு மட்டும் தலையில் கொம்பு முளைத்திருக்கிறது.

மோடிக்கு தன் சொந்த மாநிலத்தின் மீது பாசம் அதிகம். அவர் அங்கு முதல்வராக இருக்கும் போது குஜராத்தி கலைகளை முன்னெடுக்க முயன்றிருக்கிறார். பிரதமர் ஆன பிறகும் குஜராத்திகளுக்கே முக்கிய பொறுப்புகளை அளிக்கிறார். ஆனால் அவரால் குஜராத்தி மொழியைப் புகழ்ந்து பேசவோ குஜராத்தியில் உரையாடவோ முடியாது. அமித் ஷாவும் இப்படியே - அவர் இந்தியை புகழ்வதும் இந்தி-மையமிட்ட தேர்தல் அரசியலை மையமிட்டே. ஆனால் வாஜ்யாய்க்கு இந்த இரட்டை நிலை இல்லை - அவர் இந்தியில் கவிதை எழுதி இந்தியில் பேசி இந்தியில் குளித்து இந்தியில் தூங்கி அது குறித்து பெருமையும் கொள்ளலாம். எப்படியான பாகுபாடு பாருங்கள்.

இது அப்படியே காலனிய காலகட்டம் போல இருப்பதை கவனிக்கலாம் - அப்போது ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் வெள்ளையனுக்கு அருகில் இருக்கலாம், ஆனால் ஆங்கிலத்தை சொந்த மொழியாகக் கொண்டவரே நாட்டை ஆள முடியும். ஆங்கிலத்தைப் படிக்கும் இந்தியர்கள் தமது தாய்மொழி, பண்பாடு, விழுமியங்கள், அடையாளம் குறித்த தாழ்வுணர்வுடனே இருந்தனர். அந்நிய மொழிகளின் தன்மை இது - அது உங்களுக்குள் வந்ததும் ஒரு அடிமை மனநிலையை உங்களை அறியாமலே விதைக்கும். அடுத்து உங்களை அடையாளமற்றவராக, எங்கும் பொருந்த முடியாதவராக ஆக்கும். அன்று ஆங்கிலம் என்றால் இன்றைய அரசியலில் அந்த இடத்தில் இந்தி அமர்ந்திருக்கிறது. 

வேறெந்த வித்தியாசமும் இல்லை.

இதனால் தான் பாஜக ஒரு போதும் இந்தி முன்னெடுப்பை கைவிட மாட்டார்கள் என்கிறேன். காங்கிரஸ் ரொட்டியில் வெண்ணெய் தடவுவதைப் போல இந்தியைப் பிடித்து தொங்கும், பாஜக நேரடியாக நம் தொண்டைக்குள் திணிப்பார்கள். இரண்டு பேருமே நவ-காலனியை கட்சிகள் தாம்.   

அதிமுக எப்படி இதை சமாளிக்கும்? நீட் தேர்வைப் போலத்தான். நாங்கள் பரிந்துரை அனுப்பியிருக்கிறோம் எனச் சொல்லும். மத்திய அரசு ஒப்புக் கொள்ளும்வரை மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லி இரட்டை வேடம் போடும். அதற்குள் மக்கள் மும்மொழிக்கு பழகி விடுவார்கள் என எடப்பாடி குருவும் சீடர்களும் நம்புவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...