Skip to main content

மனுநீதி விவாதங்கள் (2)




மனுநீதியில் பெண்களைப் போற்றும் பகுதிகளும் உண்டு என முட்டுக்கொடுக்கிற இந்துத்துவர்கள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தில் பெண்கள் போற்றப்படும் அதே சமயம் இழிவுபடுத்தப்படுவதும் சகஜம் தான் - அதற்கு கடந்த அரைநூற்றாண்டு இந்திய வரலாற்றைப் பார்த்தாலே தகும். பெண்கள் தெய்வம் என கையெடுத்து கும்பிடும் நாம் தாம் பல கொடுமைகளையும் அவர்களுக்கு இழைக்கிறோம், ஆடை சுதந்திரம், சிசுக்கொலை, குடும்ப வன்முறை, பொதுவிடங்களை அவர்களுக்கு தடை செய்வது, வரதட்சணைக் கொடுமைகள், தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து கொல்வது என. இரண்டும் கலந்தது தான் ‘இந்து’ சமூகம். ஒன்றை வைத்து இன்னொன்று இல்லையென்பது ஒரு பக்கம் அடிபட்ட கனியின் அழுகாத பக்கத்தைக் காட்டி ஒரு வியாபாரி நம்மை ஏமாற்றுவதைப் போன்றது.


மேலும் மனுநீதியில் பெண்களைப் போற்றும் பகுதிகளும் அவர்களைப் போற்றினால் குடும்பம் செழிக்கும், செல்வம் பெருகும், கடவுளர் மகிழ்வர், ஆகையால் பெண்களுக்கு குடும்பத்தின் ஆண்கள் சிறந்த ஆடைகள், உணவு, நகைகள் ஆகியவற்றை விழாக்கள், சடங்குகளின் போது வழங்க வேண்டும் என மனு சொல்வதும் உண்டு (3-55, 56, 57, 58, 59). ஆனால் இந்த பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றோ, சுயமரியாதை அவர்களின் உரிமை என்றோ மனு சொல்வதில்லை. குடும்பத்தைப் பாதுகாக்க, செழிக்க வைக்க பெண்கள் ஒரு கருவி எனும் ஆணாதிக்க நோக்கிலேயே இது உள்ளது. 


இன்னொரு பக்கம் இந்த வரையறைக்குள் வராத பெண்களை இழிந்தவர்கள், நரிவயிற்றில் பிறக்கத் தக்கவர்கள் என சபிக்கிற ஸ்லோகங்களும் உண்டு.  


சாம்பிளுக்கு இந்த ஸ்லோகத்தைப் பாருங்கள்:


“பெண்களின் இயல்பே ஆண்களை இச்சைக்கு இரையாக்குவது தான்; ஞானிகள் பெண்களிடத்து தனிமையில் இருக்க மாட்டார்கள்” (2-214)


“ஞானம் பொருந்திய ஆண்கள் தம் தாய், மகள் மற்றும் சகோதரியுடன் கூட தனித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். உடலிச்சை என்பது வலுவானது. நீங்கள் எப்போதும் வேண்டுமெனிலும் காமத்தின் தூண்டுதலுக்கு பலியாகக் கூடும்.” (2-215)


இதன் சாரம் என்ன? 

1) ஆணின் காமத்துக்கு பெண்ணே பொறுப்பு.

2) இந்த விசயத்தில் - ஆணை காமத்தில் ஈடுபட வைப்பதில் - தாய்மார், பெண் குழந்தைகள், சகோதரிகள் கூட சளைத்தவர்கள் அல்ல.


சனாதன தர்மம் பெண்களை விபச்சாரிகளாகப் பார்க்கிறது என திருமா சொன்னதில் என்ன பிழை சொல்லுங்கள்? குஷ்பு இப்படியான கருத்துக்களே மனு நீதியில் இல்லை, இருக்கிறதெனில் திருமா அதை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் மன்னிப்பு கோர வேண்டும் என்றார். நியாயமாக குஷ்புவும் பிற சங்கிகளுமே நம் பெண்களிடமும் திருமாவிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.


பின்குறிப்பு:

தன் பெயரை ‘திருமாவலன், திருமாவலன்/ எனத் தவறாகச் சொல்வதற்கும் குஷ்புவுக்கு எதிராக திருமா வழக்குத் தொடுக்க வேண்டும். இந்த சங்கிகள் பல்லு விளக்காமல், எதையும் உச்சரிக்க நா வழங்காதவர்களையே ஏன் தம் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒருவர் பாரதி ராஜா கட்சி என்றால் இவர் திருமாவலன் என்கிறார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...