அவரிடம் உள்ள ஒரு வைதீக mystical தன்மை என்னை எரிச்சல்படுத்துகிறது. அவரது அறம் கூட நமது கர்மா கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளது. அதுவும் ரொம்ப சிக்கலானது, ஒரு நவீன சுய-பிரக்ஞையோ உள்முரண்களோ இல்லாதது. அதாவது அரங்கநாதனின் கதைகளில் உள்ள ஞானம், முக்தி போன்றவற்றை நீங்கள் புதுமைப்பித்தனின் "கயிற்றரவு" போன்ற கதைகளுடன் ஒப்பிட்டால் நான் என்ன சொல்ல வருகிறேன் எனப் புரியும் - "கயிற்றரவில்" நீங்கள் அத்வைதத்தை சீரியசாக பு.பி பரிசீலிப்பதையும் அதே சமயம் பகடி செய்வதையும் காணலாம். வாழ்வுக்குள்ளேயே எது பிரம்மம் எனத் தேட முடியும் எனில் அரவம் தீண்டி மரணத்தை தழுவும் நொடியில் எது வாழ்க்கை, எது பிரம்மம் எனும் கேள்வியும் உள்ளது. இந்த அரசியலே அக்கதையின் முக்கியத்துவம். புபியை நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையுடன் பிணைக்க இயலாது. ஆனால் அரங்கநாதனை ஒரு "ஞானியாக" பார்க்க முடியும். உருவாக்கும் ஒவ்வொரு சங்கதிக்கும் முரணாக மற்றொன்றை உருவாக்கி கூடவே வைத்து அதை கட்டுடைக்கும் போக்கு அவரிடம் இல்லை. இது அவரது எழுத்தில் உள்ள வடிவச் சிக்கலும் தான்.
ஆனால் "இந்து ஞான மரபை" விரும்புவோர், குறிப்பாக எதிர்காலத்தில் சங்கிகள் இலக்கியம் பக்கம் வரும் போது இவரை வெகுவாக கொண்டாடுவார்கள் என நினைக்கிறேன்.
என்னால் அவரை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம். வெறுமனே அவரது எழுத்தில் காரமில்லை, படிக்க ஜாலியாக இல்லை என்பதால் அல்ல.
Comments