முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகார்ஜுனரை அறிதல் (1)



 நிலைகள் குறித்த ஒரு விசாரணை


இந்த (முதல்) அத்தியாயத்தில் நாகார்ஜுனர் காரணங்களின் சாரமின்மை பற்றி விவாதிக்கிறார். ஏன் காரணங்கள்? உலகம் குறித்த, இருப்பு குறித்த கற்பிதங்கள் பொதுவாக அவற்றை சாராம்சப்படுத்துவதால் விளைகின்றன. அதற்கு கருவியாக இருப்பவை காரணங்கள். காரணமில்லாமல் என்ன உண்டு என நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் இதைப் படிப்பதற்கு, நான் இதை எழுதுவதற்குக் கூட ஏதோ ஒரு காரணம் உண்டில்லையா? ஆனால் இக்காரணங்கள் தம்மளவில் முதல்முழுமையானவை அல்ல; பல துணைக்காரணங்கள், சங்கதிகள், பௌதீக காரணிகள், புலனுணர்வு என பல விசயங்கள் தொடர்ந்து இக்காரணங்கள் செயல்பட உதவுகின்றன. இவையும் கூட பல துணை சங்கதிகளை சார்ந்திருக்கின்றன. இப்படி இது பின்னுக்கு சென்று கொண்டே இருக்கின்றன. எதற்கும் சாராம்சமான காரணமிருக்க முடியும் எனும் நம்பிக்கையே பொதுவாக நம்மை செலுத்துகிறது. அது பல துயரங்களுக்கு, பிரமைகளுக்கு, மதவாதம், கடவுள் போன்ற கருத்துக்களுக்கு, இனவாத, சாதிய, பாலின பாகுபாடுகளுக்கு, இறையாண்மை போன்ற அரசியல் கட்டமைப்புகளுக்கு, அவற்றினால் விளையும் அரச வன்முறை, அதிகார குவிப்பு ஆகியவற்றுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முதலீட்டிய பொருளாதாரத்தில் பணம் சாராம்சப்படுத்தப்படுவதால் வறுமை தோற்றுவிக்கப்பட்டு பெரும்பகுதி மக்கள் வாடுகிறார்கள். ஆகையால் நாகார்ஜுனர் காரணங்களை போட்டு மிதித்தபடி தன் புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அத்துடன் காரணங்களின் இடத்தில் சாராம்சமற்ற நிலைகளை பரிந்துரைக்கிறார்.


1. Neither from itself nor from another,

Nor from both

North without a cause,

Does anything whatever, anywhere arise.

 

தன்னில் இருந்தோ மற்றொன்றில் இருந்தோ

இரண்டிலும் இருந்தோ

அல்லது காரணமே இன்றியோ

எதுவும் எங்கும் தோன்றுவதில்லை.”


இந்த எளிமையான பாடலுக்குள் சுருக்கமாக நாகார்ஜுனர் தன் காலத்தில் ஒரு விசயம் எப்படித் தோன்றுகிறது என்பதற்கு பரவலாக நம்பப்பட்ட காரணங்கள் குறித்த சில கருத்துக்களை மறுக்கிறார். இவை நான்கு:

) ஒரு விசயம் சுயமாக தன்னியல்பாகத் தோன்றுகிறது

உங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு குடிகாரன் இருக்கிறான். தினமும் முழுபோதையில் ரோட்டில் கிடந்து சலம்புகிறான். அவன் இயல்பிலேயே போதை பேர்வழி, கெட்டவர், அறிவில்லாதவன், பண்பில்லாதவன் அதனால் அப்படி இருக்கிறான் என சிலர் சொல்லுவார்கள்.

) மேலும் சிலர், இல்லை அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள் அவனை அப்படி குடியை நோக்கித் தள்ளி விட்டது. மற்றபடி இயல்பில் அவன் நம்மைப் போன்றவன் தான் என சொல்கிறார்கள். இது இரண்டாவது கருத்து - அதாவது ஒரு விசயம் மற்றொன்றினால் தோன்றுகிறது.


) அப்போது இதைக் கேட்டுக் கொண்டிருந்தமையமானசிலர் இல்லை, நீங்கள் ரெண்டு பேர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. அதே நேரம் இரண்டு கருத்துக்களையும் அதனளவில் தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் தன்னியல்பில் எதுவாகவும் ஆவதில்லை, ஏனென்றால் அவன் பிறக்கும்போதே குடிக்கவில்லை இல்லையா? அதே போல வெளியில் இருந்து ஒன்று தூண்டுவதால் மட்டுமே ஒருவன் குடிகாரன் ஆவதில்லை. ஏமாற்றங்கள் எல்லாருக்கும் தான் உள்ளன, நாமெல்லாம் இவனைப் போல ஆகவில்லை தானே? ஆனால் அதேவேளை இந்த இரண்டு கருத்துக்களும் இணைந்து வரும் போது அது சரியாக இருக்கிறது என பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுகிறார்கள். இது மூன்றாவது கருத்து.


) இப்படி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அங்கு வரும் ஒருவன்நீங்க சொல்வது தவறு. எல்லா விசயங்களும் தற்செயலாகவே நிகழ்கின்றன, காரணங்களை நீங்களே கற்பிக்கிறீர்கள். எந்த தூண்டுதலும் நோக்கமும் இன்றி ஒன்று அப்படியே ஏற்படுவதுதான் நிஜம்என குழப்புகிறான். இதுவே நான்காவது கருத்து. அதிர்ஷ்டம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோமே அது இந்த தற்செயல் வாதம் தான். ஒருவன் உழைத்தோ திருடியோ பெரும் பணக்காரன் ஆகிறான். நாம்அவனுக்கு செம அதிர்ஷ்டம், எப்படியோ அவனுக்குப் பார்த்து எல்லாம் சரியாக அமைந்து விட்டதுஎன்போம். ஒரு விபத்து ஏற்படும் போது, அதற்கு நாமே காரணமாக இருக்கும் போது, அதன் பாட்டுக்கு நடந்து விட்டது எனச் சொல்லவே விரும்புவோம். காதல் ஒரு மேஜிக் என நம்புகிறவர்கள்அவளைப் பார்த்ததுமே எனக்குள் எதுவோ நிகழ்ந்தது. அப்படியே விழுந்து விட்டேன்என்பார்கள். இதையும் நாகார்ஜுனர் ஏற்பதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...