முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 2


 

 2.  There are four conditions: efficient condition;

Percept-object condition; immediate condition;

Dominant condition, just so.

There is no fifth condition. 


 “நான்கு நிலைகள் உள்ளன: செயலூக்க நிலை;

பார்வைப் புலன் பொருள் நிலை; உடனடி நிலை;

முதன்மை நிலை; ஆக,

ஐந்தாவதாக ஒரு நிலை இல்லை.”


நான்கு விதமான நிலைகளே உள்ளன, அவற்றினாலே ஒரு விசயம் [சாராம்சமற்று] நிகழ்கிறது, தோன்றுகிறது, இருக்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறது. அவை எவையெனப் பார்ப்போம்.


) செயலூக்க நிலை (efficient condition): ஸ்விட்சை போடுகிறேன். விளக்கு எரிகிறது. ஏன் என்றால் நான் தான் ஸ்விட்சைப் போட்டேனா, அதனால் எனும் போது அது செயலூக்க நிலை. இது இருத்தலியல்வாதிகளுக்கு பிடித்தமான நிலை. ஒரு விசயம் நிகழும் போது அதன் பின்னுள்ள ஒழுக்கவாத, அறம் சார்ந்த காரண காரிய விளக்கத்தை அவர்கள் மறுக்கிறார்கள். “அந்நியன்நாவலில் மெர்சால்ட் பாத்திரம் சில அரேபியர்களை சுட்டுக் கொல்கிறான். இந்த சம்பவம் ஆல்பர்ட் காமு புறக்காரணங்களால் தூண்டப்பட்டு நாம் செயல்படுகிறோம் எனும் வாதத்தின் மீது செய்யும் பகடியாகும். மெர்சால்டிடம் ஏன் கொன்றாய் என வினவும் போது அன்று வெயில் அதிகமாக இருந்ததால், சூரிய ஒளி கண்ணில் பட்டு எரிச்சல்படுத்தியதால் சுட்டேன் என அபத்தமான ஒரு காரணத்தைத் தருகிறான். மெர்சால்ட்டுக்கு தான் கொன்றவர்கள் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என்பதால் அதனுடைய தன்னூக்கமும் இதற்கு காரணமாக முடியாது. இருக்கிறேன், செயல்படுகிறேன், அதுவே என் இருப்பு, அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதே இருத்தியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால் இதை நாகார்ஜுனர் முழுக்க ஏற்க மாட்டார். இது ஒரு நிலை மட்டுமே. மேலும் பல நிலைகள் இதற்குப் பின்னும், இதற்கு சமானமாகவும் செயல்படுகின்றன


) பார்வைப்புலன் பொருள் நிலை (percept object condition) என்றால் சம்மந்தப்பட்ட விசயமோ பொருளோ உயிரோ பார்க்கப்பட்டு, பார்க்கப்படுவதால் ஒரு குறிப்பிட்ட இருப்பைப் பெறும் நிலைக்கு வருவது. இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் - பார்க்கப்படுவதும் மனதுக்கு உள்ளேயும் நடப்பது தான். ஒரு மந்திரவித்தைக்காரர் தன் தொப்பிக்கு உள்ளிருந்து ஒரு முயலை எடுக்கிறார். அப்போது அவர் அப்படி முயலை எடுக்கும் மந்திரவித்தைக்காரராக பார்க்கப்படுகிறார்; அப்படி பார்க்கப்படாமல் அவர் அச்செயலை செய்வது நிகழ் வாய்ப்பில்லை. இதன் பொருள் அவர் அச்செயலை செய்வதில்லை என்பதல்ல, ஆனால் அச்செயல் அதுவாக அவர் அப்படி பார்க்கப்படுவது அவசியம். ஒருவேளை ஒரு செயல் யாரும் பார்க்கப்படாத இடத்தில் நடக்கிறது என்றால் அப்போது செயலில் ஈடுபடுகிறவரால் தன்னையே காணப்பட்டு அதுவாக ஆகிறார். ஒருவர் அவரைப் பார்க்கும் போதும் அவர் தன்னையே அவ்வாறு பார்த்தப்படி தான் இருக்கிறார். ஒருவருக்கு பார்வை இல்லையென்றால் அவர் ஒலிகளால் ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி அதன் வழி பார்க்கிறார். அவருக்கு செவிப்புலனும் இல்லையெனில் அது தொடுபுலனாலும் கற்பனையாலும் மனதில் ஏற்படும் சித்திரமாக இருக்கலாம். ஆக, பார்கக்ப்படாமல், அதனாலான ஒன்றாக உருப்பெறாமல், ஒன்று நிகழ்வதில்லை என்கிறார் நாகார்ஜுனர்.


) உடனடி நிலை (immediate condition): ஒரு செயல் நிகழும் போது அதன் பின்னணியில் பல நிலைகளில் நடக்கிற சின்னச் சின்ன நுண்செயல்கள் இந்த உடனடி நிலையை உண்டு பண்ணுகின்றன. ஸ்விட்சைப் போடும் போது அங்கு மின்சாரம் இருப்பது, மின்சாரம் கடப்பதற்கான மின்கம்பிகள் இருப்பது, மின்கம்பிகளுக்குள் உலோகக்கம்பி வேலை செய்வது, அதில் மின்சாரம் அணுக்களின் செயல்பாட்டால் உருவாவது, இவை எல்லாமே பழுதில்லாமல் செயல்படுவது, இருட்டு அல்லது வெளிச்சம் பருவநிலையால் ஏற்கனவே இருப்பது இப்படி ஒவ்வொன்றுமே ஒளி அங்கே தோன்றுவதற்கு அவசியம். இந்த உபசெயல்களும் பல்வேறு உபசெயல்களை நம்பி இருக்கின்றன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.


) முதன்மைக் காரணம் (dominant condition): ஸ்விட்சைப் போட வேண்டும் எனும் நோக்கம் இருக்கிறதில்லையா இதுவே முதன்மைக் காரணம்

ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த நான்கு நிலைகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண் கர்ப்பமாகிறாள். அதில் செயலூக்க நிலை உண்டு. அவள் உறவு கொண்டது. உடனடி நிலை உண்டு. அவள் உறவு கொண்ட ஆணின் விந்து வெளிப்பட்டது, விந்து கர்ப்பமாக்கும் தகுதியை பெற்றிருந்தது, பல்லாயிரம் விந்துக்களில் ஒன்று சரியாகப் போய் கருவை தைத்தது, கரு அதற்கு தகுதியான நிலையில் இருந்தது, அப்போது அவளுடலில் பௌதீக வேதியல் மாற்றங்கள் சரியான படி நிகழ்ந்தது. இப்படி பல நுண்செயல்கள் இருக்கின்றன. மூன்றாவதாக, அவள் சேதி தெரிந்து கொண்டதும் தன்னை கர்ப்பமானவளாகப் பார்ப்பது. அப்போது அந்த பார்வைப்புலன் பொருள் நிலை உருவாகிறதுஇத்தகவலை பிறரிடம் அவள் பகிரும் போது அவர்களால் அவள் கர்ப்பவதியாக பார்க்கப்படுகிறாள் (அதிர்ச்சி, கோபம், கவலை, பயம் அல்லது மகிழ்ச்சி, பூரிப்பு, கொண்டாட்டம்). “வைகாசிப் பொறந்தாச்சுபடத்தில் ஜனகராஜ் பேசுவதைப் போல (சோற்றைப் போடு என்பதற்குநெருப்பை அள்ளிக் கொட்டு”, முட்டையை வை என்பதற்குஅந்த அணுகுண்டை வை”) இவளும் தன் பெற்றோரிடம்அம்மா நான் குண்டாயிட்டேன்என சொல்கிறார் என்றால் அம்மாவுக்கு ஒன்றுமே புரியாது. “கர்ப்பம்என்பதை தனக்கு சர்ப்பம் வந்து விட்டது என சொல்லாமல் முழுக்க குழப்பம் ஏற்படுவதுடன் அவள் சொல்வதை மட்டும் வைத்து அவள் கர்ப்பத்தை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்துகர்ப்பவதியாக காணப்படாமல்அவள் அப்படி இருக்கவே முடியாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...