முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 3

 

3.

The essence of entities

Is not present in the conditions, etc...

If there is no essence,

There can be no otherness-essence.

  

 “உள்ளதான விசயங்களின் சாரம்

நிலைகளில் இருப்பதில்லை, இது போல இன்னும் பல....

எந்த சாரமும் இல்லையெனில்,

பிறிதின்-சாரமே இருக்க முடியாது.”


 ஒரு பொருளில் சாரமில்லை என்றால் அது உருவாகக் காரணமான அதன் நிலையில் இருக்கலாம் இல்லையா? ஒரு கோப்பை தேநீரில் ஒரு கரண்டி சர்க்கரை சேர்த்தால் அது இனிக்கிறது. இப்போது சர்க்கரையை சேர்ப்பதான செயலூக்க நிலை அதை இனிப்பான காப்பியாக்குகிறது. இந்த இடத்தில் நாகார்ஜுனரின் எதிர்முகாமை சேர்ந்த சிந்தனையாளர்கள் ஒரு மாற்றுப்பார்வையை வைக்கிறார்கள் - சாரம் என்பது இருக்கின்ற பொருளில் இல்லை, ஆனால் அதை ஏற்படுத்துகிற நிலையில் சாரம் இருக்கிறது. மற்றொரு உதாரணத்தை தருவதானால் பிரம்மத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரம்மம் முதல்முழுதானது, தனியானது, சாரமானது, அழிவற்றது. பிரம்மத்தை இவ்வாழ்வில் நாம் உணர முடியும் என அத்வைதிகள் கூறுவார்கள். அப்போது வாழ்க்கை ஆன்மீக ஒளி பொருந்தியதாக மகத்தானதாகிறது. இவ்வாழ்க்கையில் இறை ஒளி அதன் சாரமாக இல்லாமல் இருக்கலாம்; தற்காலிமான ஒரு வெளிச்சமாக அது இருக்கலாம்; வாழ்தலில் இருத்தலில் மட்டும் இருக்கலாம், ஆனால் அந்த மனிதனில் இல்லாமல் இருக்கலாம். இந்த விளக்கத்தின் முடிவில் அவர்கள் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் சாரமற்றவன் என சொல்வார்கள். இதை நாகார்ஜுனர் ஏற்கவில்லை. “கரகாட்டக்காரனில்அந்த ஓட்டைக்காரை தள்ளிக் கொண்டு போகையில் ஒரு கெத்துக்காக, கிளுகிளுப்பாக, ஆறுதலுக்காக கவுண்டமணி அந்த காரை முன்பு நடிகை சொப்பன சுந்தரி வைத்திருந்ததாய் சொல்வார். இது ஓட்டைக்கார் தான், ஆனால் ஒரு காலத்தில் இதன் நிலை வேறு, அந்த பழங்கால பெருமை இதற்கு ஒரு சிறப்பளிக்கிறது எனும் வாதம் அவருடையது. ஆனால் என்னதான் சொப்பனசுந்தரியுடையது என்றாலும் அது ஓட்டைக் கார் தான். அழகான பளபளப்பான ஓடுகிற கார் ஆகாது. அதே போலத்தான் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் அப்படி அல்ல என்பதும் இப்படி ஒன்று உருவாக காரணமான மற்றொன்றுக்கு சாரத்தைக் கொடுக்கிற ஒரு தவறான தந்திரம்

இதை நாகார்ஜுனர் இப்படித்தான் தவறென நிரூபிக்கிறார் - எப்படி காரை விற்றவரின் சாரம் காரில் இருப்பதில்லையோ (காரை உருவாக்கியவரின், விற்றவரின் சாரமும் கூடத்தான்) அப்படியே கடவுள் நிலையை அடைகிற ஒருவரின் வாழ்வில் கடவுள் இருக்கிறார் என்றால் அது சாரம் கொண்டதாகவே இருந்தாக வேண்டும். சாரமான ஒன்று சாரமற்ற ஒன்றின் பகுதியாகவோ அதை ஏற்படுத்தவோ முடியாது. ஒரு மனிதன் கடவுள் நிலைக்கு செல்கிறானெனில், அவனுக்கு அகத்திறப்பு நிகழ்ந்து மகத்தானவனாக உருமாறுகிறான் என்றால் கடவுளும் அவனைப் போன்றே சாரமற்றவராக ஆக வேண்டியது தான்.


அடுத்து வரிகள் இன்னும் முக்கியமானவை. ஒரு விசயம் தோன்றுவதற்கு பல நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் () அந்நிலைகளும் தம்மளவில் சாரமற்றவை, அவற்றை பல உபநிலைகள் தோற்றுவிப்பதால் அவை சார்ந்திருக்கின்றன என நாகார்ஜுனர் சொல்கிறார். அடுத்து, அவர் இந்த நிலைகளின் வித்தியாசங்களுக்கு வருகிறார். காப்பி கசக்கிறது, ஆனால் சர்க்கரை இனிக்கிறது. இனிப்பே சர்க்கரையின் வித்தியாசம். இது தனித்துவமானது, சாரமானது என சிலர் கருதலாம். ஆனால் இந்த வித்தியாசமே அது பிற சங்கதிகளை நம்பியிருப்பதாலே நிகழ்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறார். முதலில் மற்றமை மற்றமையாக இருக்க அந்த பொருளுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும்; ஆனால் மற்றொன்றை சார்ந்திருக்கும் எதற்கும் சாரம் இருக்க முடியாது. () தனித்துவம் சாரமில்லாததாகும் போது வித்தியாசமும் சாரமற்றதாகிறது. அடுத்து, மற்றமை அதற்கான நான்கு நிலைகளில் சிலவற்றையாவது காரணிகளாகக் கொண்டிருக்க வேண்டும் (சர்க்கரை பயன்படுத்தப்படும் செயலூக்கம், சர்க்கரையின் வேதியல் அமைப்பு, அதை கலக்க வேண்டும் எனும் முதன்மை நிலை இப்படி பல). இந்த நிலைகளும் வேறு பல நிலைகளை நம்பியிருந்தாக வேண்டும். ஆகையால் () இந்த வித்தியாசம் கூட சாராம்சமானது அல்ல என நாகார்ஜுனர் கருதுகிறார்


ஒரு விசயத்தின் வித்தியாசமானது சாரமானது என்பது நமது சாதியமைப்பின் அச்சாணியாக இருக்கும் கருத்து என்பதை கவனிக்க வேண்டும். இந்த வித்தியாசம் கற்பிதம் என்பதை நாகார்ஜுனர் இங்கு நிரூபிப்பது முக்கியமானது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...