முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமகால அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியமாக்க முடியுமா?



மிஷல் வெய்ல்பெக் (Michel Houellebecq) தற்கால ஃபிரெஞ்சு நாவலாசிரியர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர். அவரை மகத்தான ஃபிரெஞ்சு நாவலாசிரியர் எனக் கருதுகிறவர்களும் உண்டு. அது உண்மையா என்பதற்கு பின்னால் வருவோம். வெய்ல்பெக்கின் Submission நாவல் பற்றி ஸிஸெக் ஓரிடத்தில் குறிப்பிட, அது ஏற்படுத்திய ஆர்வத்தில் நான் உடனே வாங்கிப் படித்தேன். இதையடுத்து வெய்ல்பெக்கின் வேறு சில நாவல்களையும் படித்தேன். இந்தக் குறிப்பை நான் எழுதுவதற்குக் காரணம் வெய்ல்பெக் எழுதுவது போன்ற நாவல்களின் சாத்தியங்களை நாம் தமிழில் பரிசீலிப்பது இல்லை எனச் சுட்டத்தான்.

பொதுவாக தமிழ்ப் புனைவுகள் சில பத்தாண்டுகளுக்கோ ஒரு நூற்றாண்டுக்கோ பின்னால் சென்று ஒரு கதையை மீளுருவாக்கம் பண்ணும் (ஈழப்போர் / புலம்பெயர் இலக்கியத்தில்கூட அநேகமாய் இதுவே நடந்தது). அது வரலாறாகவோ சுய அனுபவக் கதையாகவோ இருக்கும். சமகாலத்தை நாம் எழுதும் போதுகூட அது தனிமனித அல்லல்களைத் தாண்டி சமூக நகர்வுகளை, அரசியல் கலாச்சார சிடுக்குகளைப் பரிசீலிப்பதில்லை என்பது பரவலாக வைக்கப்படும் புகார். இது ஏன்? 


(மேலும் படிக்க)

https://tamizhini.in/2021/01/25/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/?fbclid=IwAR1cfIJyKzC5jdQ_vKNOUiGffN2FEXMDDSWRl2PpwxNIbywD3oS0XcjcmfI

கருத்துகள்