Skip to main content

Posts

Showing posts from February, 2021

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

செருப்பைக் காட்டுங்கள்!

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் உள்ளது என நினைக்கிறேன்.  பாஜக இந்திய வாக்காளர்களை இந்து, இஸ்லாமியர், கிறித்துவர்கள் எனப் பிரித்து அவரவர் தமது மத அடையாளத்தின் படி வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறது. நீங்கள் இந்து எனில் இந்து மதத்தை பிரதிநுத்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இஸ்லாமியர் எனில் ஒவைஸ்ஸி போன்றோருக்கு வாக்களிக்க வேண்டும். கிறித்துவர்கள் எனில் ஒரு மத போதகருக்கு வாக்களிக்க வேண்டும். முக்கியமாக, மக்கள் மத அடையாளம் தவிர்த்த முற்போக்கு சக்திகளுக்கு வாக்களிக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. இது சாத்தியப்படாத போது மட்டுமே சாதி...

எதிர்விமர்சனமா பாராட்டுரையா?

கார்ல் மார்க்ஸ் இன்று பேஸ்புக் நேரலையில் வாசகர்களின் இலக்கியக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது “ஏன் இலக்கிய நூல்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதில்லை?” எனும் கேள்வி வந்தது. அதற்கு கார்ல் அளித்த பதிலுடன் எனக்கு உடன்பாடில்லை. அதைப் பற்றியதே இப்பதிவு. கார்ல் எதிர்விமர்சனங்கள் பொதுவெளியில் அவசியமில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் இரண்டு: 1. ஏற்கனவே வாசகர்கள் குறைவு. எதிர்மறையாய் பேசி அவர்களையும் ஏன் வாசிக்க விடாமல் பண்ணனும்? 2. மேடை நாகரிகம் கருதி ஒரு புத்தக விமர்சன / வெளியீட்டு அரங்கில் எதிர்க்கருத்துகள் சொல்லத் தேவையில்லை. அதுவே மாண்பு, தமிழரின் கலாச்சாரம். நான் பொதுவாக எழுத்தாளர்கள் எழுதும் விமர்சனங்களைப் படிப்பதில்லை. முன்பு பத்திரிகைகளில் அதிகமாக கவிதைத்தொகுப்புகளுக்கு விமர்சனம் வரும். இப்போது புனைவு, அபுனைவு நூல்களுக்கு அதிகமும் வருகிறது. ஒன்று பொத்தாம்பொதுவாக அந்நூலின் கருத்துக்களை சுருக்கிச் சொல்லி, எந்த மதிப்பீடும் இல்லாமல் இருக்கும். அல்லது, புத்தகத்தை எழுதியவர் பெண் எனில் விதந்தோம்பி எழுதுவார்கள். பேஸ்புக் வரும் முன்பு மிகப்பெரிய டேட்டிங் வெளியாக விமர்சனப் பக்க...

இந்தி திணிப்பு எனும் இந்துத்துவ புரோஜெக்டை எதிர்க்கும் சு. வெங்கடேசன்

வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன்.  இந்த இந்தித் திணிப்பு பிரச்சனையை, இதன் வரலாற்றை நான் எனது “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” நூலில் பேசி உள்ளேன்.  இந்த விசயத்தில் காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரே மாதிரியே இருந்துள்ளன என வரலாறு காட்டுகிறது. காங்கிரஸாவது கொஞ்சமாவது மாற்றுக்குரல்களை காதுகொடுத்து கேட்கும் மாண்பு கொண்டது, அவ்வப்போது சமரசம் பண்ணிக்கொள்வது. ஆனால் பாஜக ஒரு ரௌடி அரசு. “சொல், கேட்காவிட்டால் அடித்து பணிய வை” என்பதே அவர்களின் அணுகுமுறை. இந்த முரட்டுத்தனத்தின் விளைவாகவே மாநில உரிமை குறித்த விவாதங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. அதன் நீட்சியே சு.வெங்கடேசன் இப்போது மத்திய அரசுடன் எழுப்பி உள்ள பிரச்சனையும் அவரது எதிர்ப்பு அரசியலும்.  இன்னொரு விசயம்: இந்தி மையமான இந்துக்களின் இந்தியா எனும் கருத்தாக்கம் நமது தமிழ் தேசிய வரலாற்றை விட நெடியது தான். அது ஜெர்மானிய, பிரஞ்சு, ஆங்கிலேய Indology ஆய்வாளர்கள் ஆசியா, அதன் மதம், கலாச்சாரம், மொழி வரலாறு குறித்து ஆய்வு செய்த காலத்திலேயே துவங்கி விட்டது. சிலர் இந்த வரலாறு யுவான் சுவாங் இந்தியாவுக்கு பயணம் வந்து குறிப்புகள் எழுதிய கால...

எல்லாம் பழக்கம் தானா?

இன்று ஆயுஷுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவன் எழுதுவது, படிப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரு பழக்கத்தினால் தானா எனக் கேட்டான். பழக்கம் ஒரு போதையாகிறது. அது இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போகுமா என பயம் வருகிறது. காதல் கூட சுலபத்தில் ஒரு பழக்கமாவதில்லையா எனக் கேட்டான். எனக்கு வாழ்க்கையை இப்படி வடிவத்துக்குள் அடைப்பதில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் என்னை ஈர்த்தது மற்றொரு கேள்வி: அவன் என்னிடம் கேட்டான் - “உங்களால் எழுதாமல் இருக்க இயலுமா?” “அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தாராளமாக நான் எழுதாமல் வேறெதாவது செய்வேன். எழுதுவது ஒரு வேதனையான வேலை தானே” (பேஸ்புக்கில் எழுதுவது, தெரிந்த கருத்துக்களை வைத்து கட்டுரை எழுதுவதை சொல்லவில்லை.) என்று நான் அவனிடம் சொன்னேன். கடந்த 14 ஆண்டுகளாக தினமும் எழுதி வருகிறேன். மிக மோசமான இழப்புகள் நேர்ந்து உருக்குலைந்து போகும் போது சில நாட்களில் எழுத்துக்கு மீண்டு விடுவேன். அது பழக்கத்தினால் அல்ல - எழுத்தில் ஒருவித ஈடு இணையற்ற இன்பம் உள்ளது. அது பேசுவதில் நிச்சயம் இல்லை.  ஆனால் வாழ்க்கை இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்து சென்றால் நான் எழுதுவதை மறந்...

மோடியும் புத்தரும்

  இவ்வளவு கொடுமைகள் செய்தும் ஏன் மக்களில் ஒரு சாரார் ஏன் பிடிவாதமாக பாஜகவை ஆதரிக்கிறார்கள் என முற்போக்காளர்கள் அடிக்கடி வியப்பதுண்டு. அதற்கு பலவிதமான காரணங்கள் உண்டெனிலும் மிக முக்கியமானது மதம் தான். காங்கிரஸால் பண்ண முடியாத ஒன்றை பாஜக வெளிப்படையாக பண்ணுகிறது, அது தன்னை பெரும்பான்மை இந்துக்களின் மதப்பிரதிநிதியாக வெளிப்படையாக காட்டுகிறது, நம்ப வைக்கிறது. இதை சரியாக செய்து விட்டால் உங்களை சுலபத்தில் யாரும் கேள்வி கேட்கவோ அசைக்கவோ முடியாது.  இதுவரை நமது கார்ப்பரேட் சாமியார்கள் பற்றி என்னவெல்லாமோ கொடுமையான சர்ச்சைகள் வந்துள்ளன. ஆனால் அதனால் அவர்களுடைய பக்தர்களின் எண்ணிக்கை சிறிதும் குறைந்ததில்லை. ஓஷோ வாங்க என அழைத்ததும் எல்லாவற்றையும் உதறி விட்டு மக்கள் இந்தியாவில் இருந்து அவர் பின்னால் அமெரிக்கா வரை சென்று உயிரைக் கொடுத்து வேலை செய்து அங்கு ஒரு புது நகரையே கட்டியமைக்கவில்லையா? அவருக்காக சிலர் ஒரு கவர்னரையே கொல்ல முன்வந்தார்கள். இறுதியில் ஓஷோவாகவே சரணடையும் வரை அவர்கள் அவர் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் இருக்கும் போதே ஓஷோ மீது அவ்வளவு கெட்ட பெயர் இருந்தது...

முகமூடிகளின் பள்ளத்தாக்கு குறித்து சாரு நிவேதிதா

பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்… முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:   இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.   நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.  ஆஷிஷ் நந்தி அநேகமாக என்று சொல்கிறார். இன்னொரு விஷயம், இந்த நாவலின் கடைசி அத்தியாயமான இறுதி ரகசியம்.  இதை வாசிப்பவர் யாராக இருந்தாலும் கண்கள் கசியாமல் இருக்காது.  எந்த அசட்டு உணர்ச்சியினாலும் அல்ல.  Sentimentality அல்ல.  பிஸ்மில்லா கானின் ஷெனாயில் அவர் சில உயரங்களைத் தொட்டு கடவுளை இழுத்துக் கொண்டு வந்து உங்கள் மடியில் உட்கார வைக்கும்போது இதயம் விம்மி விம...

ஒரு நல்ல தலை

தினமணியில் வாராவாரம் வெளிவருகிற “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரை ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்களுக்கு முன்பு அதை நான்கு நூல்களாக தொகுத்து உயிர்மையில் வெளியிட்டேன். நான் இத்தொடர் ஒரு வருடத்திற்கு மேல் போகாது என நினைத்திருந்தேன். நான் முடிந்த வரையில் எனக்குப் பிடித்த துறைகளான தத்துவம், கோட்பாடு, அரசியல், சமூகம் என பலவற்றில் இருந்தும் சொற்களை எடுத்து அறிமுகப்படுத்துவேன். சமகால நடப்புகளை மறைமுகமாய் விமர்சிக்க, பகடி செய்ய, கருத்து சொல்ல இத்தொடரை பயன்படுத்துவேன். என் அதிர்ஷ்டம் இதுவரையில் நான் யாரை பகடி செய்கிறேன் என நிறைய பேருக்கு தெரிந்ததில்லை, அதனால் எடிட்டரிடம் இருந்து குறுக்கீடுகள், அறிவுரைகள் வந்ததில்லை. இது தான் பல லட்சம் பிரதிகள் அச்சாகும் இதழ்களில் எழுதுவதன் அனுகூலம். ஆனால் என்ன சிக்கல் என்றால் நான் எழுதிய தொடர்களிலேயே நான் மிகக் குறைவாக ரசித்து எழுதுவது இதைத் தான். ஏனென்றால் ஆங்கில இலக்கணம், ஆங்கில சொற்றொடர்கள், சொற்களின் வரலாறு, மொழி குறித்த சுவாரஸ்யமான கதைகள் இவற்றை எழுதுவதில் எனக்கு பெரிய சவால்கள் இல்லை. வெள்ளைக்காரன் மொழியைப் பற்றி தமிழில் எழுதுகிற அபத்தம் க...

சர்வாதிகாரத்தை எப்படி வீழ்த்துவது?

‘ பாஜககாரரான ’ ராமசுப்பிரமணியனின் பேட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன் . அதில் அவர் கடுமையாக பாஜகவின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து “ நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் ” என சாடியிருந்தார் . அது மட்டுமல்ல , “ வேல் யாத்திரை என்பது வெறும் ஸ்டண்ட் , உண்மையான பக்தி கொண்டவர்கள் இப்படி கடவுளை வைத்து பிரிவினைவாதம் வளர்க்க மாட்டார்கள் ” என்று வேறு சொன்னார் . இது போதாதென ஸ்டாலினை ஆதரித்து பல முறை பேசினார் . அது கூடப் பரவாயில்லை , “ ராகுல் வெள்ளாந்தியான மனிதர் . மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது .” என்றும் சொன்னார் . அதாவது எதையெல்லாம் ஒரு பாஜககாரர் சொல்ல மாட்டாரோ அத்தனையையும் சொன்னார் .    அண்மையில் எஸ் . வி சேகரும் இப்படித்தான் “ நான் கடந்த சில வருடங்களாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறேன் . முருகனை இரண்டு முறை போனில் அழைத்தால் எடுக்கவில்லை . நீங்கள் பார்த்தால் சொல்லுங்கள் .” என பரிதாபமாகக் கூறினார் . அத்துடன் அவரது பேச்சிலும் ஒருவிதமான காவி சாயம் பூசிய முற்போக்குத் தன்மை ( வேறெப்படி சொல்வது ) வந்தி...