முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து தொடரை புறக்கணிப்போம்

இந்தியா இங்கிலாந்து தொடரை ஏன் புறக்கணிக்கக் கூடாது?

ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் இருப்பது, பின்னிருந்து இயக்குவது எதுவும் புதுசு அல்ல தான். ஆனால் முன்பு எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் ஆளும் கட்சியின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அதாவது நாட்டுக்காக நிற்பது வேறு, ஒரு கட்சியின் சார்பில் பேசுவது வேறு. சில நேரம் நீங்கள் ஒரு கட்சி சார்பாக பிரச்சாரம் செய்கையில், அந்த அரசு அப்பட்டமாக தனது மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி, அவர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் போது, நீங்கள் உங்கள் ஒரு கட்சிக்காக உங்கள் மக்களுக்கு எதிராக அரசியல் பண்ணுகிறவர்கள் ஆகிறீர்கள். அந்த அரசு போராடும் மக்களை தீவிரவாதிகள், தேச துரோகிகள், ரௌடிகள் என சொல்லும் போது அதுவும் உங்கள் கருத்தாவதை தவிர்க்க முடியாது போகிறது. இதற்கு ஒரு அணியின் தலைவர், பயிற்சியாளர் சகிதம் களமிறங்கும் போது, கிரிக்கெட் வீரர்களை பாராட்டுவதை வழக்கமாக ஒரு பிரதமரும் நிதியமமைச்சரும் வைத்திருக்கையில், இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. நாளை கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதன் முடிவுகள், நடவடிக்கைகளுக்கு சாதகமாக டிவீட் போட்டாலே தாம் அணியில் நிலைக்க முடியும் என நம்புவார்கள்.

கிரிக்கெட் இதுவரை ஒரு தேசியவாத உணர்வலையின் உருவகமாக இருக்கிறது. இனி அது பச்சையான கட்சி ஆதரவு செயலாக மாறும். ஒரு கிரிக்கெட் அணியை ஆதரித்து அரங்கில் கைதட்டுகிறவர்கள் அனைவரும் மறைமுகமாக தனது ஆதரவாளர்களே என ஒரு நாட்டின் எதிர்கால பிரதமர்கள் நினைத்து புளகாங்கிதம் அடைகிற அபத்தம் நடக்கும். கிரிக்கெட் அணியின் தலைவரும், பயிற்சியாளரும் தேர்தலுக்கு முன்பு கட்சிப் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதும் நடக்கும். (ஏற்கனவே இதை பாலிவுட் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது.) ஒரு கட்சி தன்னையே நாடு என நினைப்பது ஒரு அபத்தம் எனில், அக்கட்சியை ஆதரிப்பதே தேசபக்தி என செலிபிரிட்டிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் நினைப்பது இன்னும் அபத்தமானது. எனில் கட்சிக்கு வெளியே தேசம் என ஒன்றில்லையா? அரசுக்கு வெளியே மக்களின் குரலுக்கு மதிப்பில்லையா? அரசுக்கு வெளியே இருக்கும் மக்கள் தேசம் இல்லையா? எனில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்? ஒரு கட்சியை நிரந்தரமாக ஆள அனுமதிக்கலாமே?

இந்த பின்னணியில் பார்க்கும் போது நமக்கு விராத் கோலி, ரவி சாஸ்திரி கும்பலின் டிவீட் அரசியல் எவ்வளவு மோசமான ஒரு தேச விரோத அரசியல் எனப் புரியும். இவர்கள் நமது மக்களாட்சி அமைப்புக்கே உலை வைக்கிற போக்குக்கு துணை போகிறார்கள். அதனால் இதை எதிர்க்க வேண்டியது அவசியம். ஆகையால் வெள்ளிக்கிழமை துவங்குகிற இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரை நாம் புறக்கணிக்கக் கூடாது? அதனால் இத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனிலும், நம்மால் முடிந்த எதிர்ப்பை பதிவு செய்வோம். அதனால் #BoycottIndiavsEnglandSeries

என்னதான் அழுத்தம் இருந்தாலும் மக்கள் விரோதப் போக்கை ஆதரிப்பதை இனிமேலாவது கிரிக்கெட்டர்கள் நிறுத்த வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.