ஆட்டுக்கார அண்ணாமலை ஒரு வாக்கியம் பேசினால் அதில் ஓராயிரம் தவறுகள் இருக்கும். இதைப் பாருங்கள்:
“நான் வன்மத்தை கையில் எடுப்பதற்கு தயாராக கிடையாது” - அது வன்மம் இல்ல, வன்முறை. வன்மத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. ‘தயாராக கிடையாது’ அல்ல, தயாராக இல்லை.
“நான் திமுககாரனுக்கு எச்சரிக்கை வச்சிட்டு போறேன்” - எச்சரிக்கையை வைக்க முடியாது, எச்சரிக்கை செய்கிறேன், விடுக்கிறேன்னு சொல்லணும்.
இவர் பேசுவது கேட்க நிஜமாவே வடமாநிலத்தவர் பேசுற மாதிரியே இருக்குது. “முகம்” என்பதை “முக்கம்” என்கிறார். யாராவது கரூர்காரர்கள் இருந்தால் விசாரிச்சு சொல்லுங்கள் - இவருக்கு தமிழ் படிக்கத் தெரியுமா? பள்ளியில் தமிழ் படித்தாரா? தமிழரல்லாத எச்.ராஜா கூட தெளிவாக தமிழ் பேசும் போது, தமிழே படிக்காத எத்தனையோ பேர் தெளிவாகப் பேச, ஆட்டுக்காரர் மட்டும் ஏன் மதன்லால், மிதாலால் போல இப்படி பேச்சுவழக்கில் இல்லாத வினோதத் தமிழை பேசுகிறார்?

Comments