முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினிக்கு வாழ்த்துகள்!

 தாதா சாகெப் விருது பெறும் ரஜினி காந்துக்கு வாழ்த்து தெரிவிப்பது வீண் என்றாலும் (மோடியே தலைவா என விளித்து வாழ்த்தியபிறகு நாம வாழ்த்தினா என்ன வாழ்த்தாட்டி என்ன?) என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்:



என் பார்வையில் ரஜினி இந்திய சினிமாவின் தனித்துவமான முக்கியமான நடிகர். Method acting பாணியில் நடிப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை உண்டு. பாத்திரத்துக்கு என ஒரு தனி குண வார்த்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயற்கையாக ஒரு பாவனையை தூக்கி அலைவார்கள். அதாவது கரடியாக நடிக்க சொன்னால் எப்படியாவது உடம்பெல்லாம் மயிர் வளர்த்து கரடியாக ஆக முடியுமா என தவிப்பது. ஆனால் ரஜினியோ காட்சிக்குள் வரும் சந்தர்பத்துக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதே நடிப்பு என எளிமையாக, ஆழமாக புரிந்து கொண்டவர். ரஜினி வயதானவராக நடிக்கும் போது பாருங்கள் - லேசாக உடலை தளர்த்தி, அசைவுகளை மெதுவாக்கி, பார்வை வீச்சில் ஒரு பொறுமையை கொண்டு வருவார், அதுவே பார்வையாளனை நம்பி அப்பாத்திரத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யும். மெத்தெட் நடிகர்கள் இதையே வலுக்கட்டாயமாக செய்யும் போது அங்கு அந்த பாவனை, வேடம் படக்காட்சி, கதையமைப்பு எல்லாவற்றையும் மீறி தனியாக தெரியும். அமீர் கானில் இருந்து கமல் வரை இந்த பிரச்சனை உண்டு - நான் நிக்கிறேன், நிக்கிறேன் என்பதைப் போல நான் நடிக்கிறேன், நடிக்கிறேன் என படத்துக்குள் ஒரு கட் அவுட் போல தெரிவார்கள். இந்த பாணி ஒரு மேற்கத்திய இறக்குமதி என்பதும் ஒரு பிரச்சனை. ஆனால் ரஜினியின் பாணி இந்திய பண்பாட்டின், தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒரு நடிகராக ரஜினி சரிவர புரிந்து கொள்ளப்படுவில்லை என்பது ஒரு சோகம். 


மற்றொரு முக்கிய விசயம் ரஜினியின் நடிப்பில் உள்ள அந்த நுட்பம். தலையை குனிவது, தோள்களை அசைப்பது என சின்னச்சின்ன அசைவுகள் மூலம் நிறைய உணர்த்தக் கூடியவர். ஆனால் அவருடைய படகாட்சிகள் வேகமாய் நகரும் என்பதால் ரசிகர்கள் கவனிப்பதில்லை. ஒரு நடிகராக ரஜினியின் முக்கிய குறை வசன உச்சரிப்பு. இதில் கமல் அவரை ஓவர் டேக் பண்ணி விடுவார். ஆனால் சினிமா ஒரு காட்சி ஊடகம் தானே!


இந்த விஷயங்களை விரிவாக எனது “ரஜினிகாந்த்” நூலில் பேசியுள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...