முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களும் திருமணமும்



பெண்கள் ஏன் திருமணம் செய்வதற்கு வசதியான, நிறைய சம்பாதிக்கிற ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என நண்பர் கார்த்திக் தமிழன் ஒரு பதிவில் கேட்டிருந்தார். அவர் வயதான பணக்கார வியாபாரிகளை திருமணம் செய்து செட்டில் ஆகும் நடிகைகளை பட்டியலிட்டிருந்தார். ஒப்பிடுகையில் ஆண்கள் அப்படி செய்வதில்லை; ஒன்று காதலித்த பெண்களை மணக்கிறார்கள், அல்லது வீட்டில் பார்த்து கட்டி வைக்கும் பார்க்க சுமாரான பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதை முழுக்க நிரூபிக்க முடியாது - பணமும் புகழும் படைத்த ஆண்கள் அழகான பெண்களை, மாடல்கள், நடிகைகளைத் தேடி மணம் செய்வதுண்டு. அவை காதல் திருமணங்களாக அநேகமாக இருக்கும்.  பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து நிம்மதியான பெண்களும் உண்டு (விராத் கோலி - அனுஷ்கா சர்மா, ஹர்த்திக் பாண்டியா - நதாஸா ஸ்டான்கோவிக்). இன்னொரு பக்கம், காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்து பிடிவாதமாக காதல் கணவனுடன் வாழும் பெண்களும் உண்டு.

ஆனால் கார்த்திக்கின் கேள்வியின் அடிப்படை காதலுக்காக மணக்க வேண்டுமா? பணம், புகழுக்காக ஒருவரை தேர்வு செய்வது நேர்மையற்ற செயல் அல்லவா என்பது. எனக்கு இது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice, Sense and Sensibility போன்ற நாவல்களை நினைவுபடுத்தியது. இந்நாவல்களின் சாயலில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தை ராஜீவ் மேனன் எடுத்தார். Bridget Jones’s Diaries மற்றொரு தழுவல்.

 ஒரு பெண் எப்படியான கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஜேன் ஆஸ்டின் நாவல்களின் மையக் கேள்வி - ஒரு பெண் தன்னை மதிக்கிற, அன்பு காட்டுகிற, நம்பத் தகுந்த, நேர்மையான ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவன் ரொம்ப ரொமாண்டிக்காக, அழகாக, படோடோபமாக இல்லாவிட்டால் நல்லது என்பதே அவர் நாவல்களின் முடிவில் சொல்லும் பதில். காதலை அவர் “கர்வம், முன்தீர்மானம்” என அடையாளப்படுத்துகிறார். ஒரு கல்லூரி மாணவனாக எனக்கு இந்த நிலைப்பாடு பிடித்திருந்தது. ஆனால் அனுபவ ரீதியாக இந்த உண்மை புரிய எனக்கு காலம் பிடித்தது. நான் புரிந்து கொண்டது இதையே:
 காதல் என்பது துணை விளைப்பொருள் (byproduct.)  

தன்னளவில் காதல் தோன்றுவதோ மறைவதோ இல்லை. இருவர் மகிழ்ச்சியாக இருக்க சாத்தியமாகும் போது, அதற்கு முயற்சி பண்ணும் போது, காதல் - பெட்ரோலியம் தயாரிக்கும் போது பெர்பியூம், உரம், மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்ட 6000 துணைப்பொருட்களாக விளைவதைப் போல - ஒரு துணை விளைபொருளாகத் தோன்றுகிறது. ஒரு கடப்புநிலை (transcendental) அனுபவமாக காதல் அவர்கள் மத்தியில் தோன்றுகிறது. சுஜாதா இதை ஒரு உயிரி வேதியல் தோற்றம், ஹார்மொன்களின் விளையாட்டு என்றார். நான் அதை ஏற்கவில்லை. இது காமத்துக்கான தயாரிப்பும் அல்ல. காதலிப்பதன் மூலம் நாம் காலத்தின் அமைவுகளை கடந்து, முன் தீர்மானங்களை மீறி, நமது தன்னிலையை கடந்து செல்கிறோம். இது தான் அந்த மேஜிக். ஆனால் நாம் செய்யும் ஒரே தவறு நாம் “காதலில் இருப்பதாக” நினைப்பதே.

 உண்மையில் காதலை நாம் தாம் உருவாக்குகிறோம். தயிரில் திரளும் வெண்ணெய் போல காதல் திரண்டு வருகிறது. தோற்றுவிக்கப்படும் எதையும் போல அது அழியவும் செய்கிறது. காதலர்கள் கவிஞர்களாவது, இசையில் ஈடுபடுவது இதனால் தான் - கடப்புநிலை தன்மையால் காதல் ஒரு கலாபூர்வமான அனுபவமாகிறது. 

ஆனால் ஒரு துணை விளைப்பொருள் மீது நின்று நீங்கள் வாழ முடியாது. உறவையும் தொடர முடியாது. காதலைப் போல வேறு பல சகிக்க முடியாத துணை விளைப்பொருட்களை ஆண்-பெண் உறவு உண்டாக்கும். அதை மீறி வர பணம், வசதி, செல்வாக்கு, சமூக அங்கீகாரம் தேவைப்படுகிறது. பணக்கார தம்பதியினர் விவாகரத்துக்குப் பின்பும் நட்புறவுடன் பெரிய தகராறு இல்லாமல் தொடர்வதைப் பாருங்கள் - ஒரே காரணம் பணம் தான். பெண்கள் இயல்பிலேயே புத்திசாலிகள் என்பதால், பெரிய தத்துவம் ஒன்றும் இல்லாமலே இது பளிச்சென அவர்களுக்கு புரிந்து போகிறது. அவ்வப்போது அவர்களுக்கு பைத்தியம் பிடித்து “காதலில் விழுந்தாலும்”, சட்டென தெளிந்து சரியான கணவனை தேர்ந்து கொள்கிறார்கள். அல்லது, சமூகம் அனுமதித்தால், நிம்மதியாக தனித்து வாழ்கிறார்கள். பெண்களின் மரபணுக்களும் இத்தேர்வில் உதவுகின்றன.  

ஆண்கள் நன்றாக சமைத்துப் போடுகிற, குடும்பத்துக்கு “அடங்கின”, பந்தமான பெண்களையே மணமுடிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். காதலித்த பெண்களையே கட்டிக் கொண்டாலும் அவர்களை இப்படி மாற்ற முயலும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. அல்லது அவர்கள் அப்படி மாறின பிறகு முன்பு போல எப்படிக் காதலிப்பது, காதல் ஏன் அதே முகத்தைப் பார்த்தால் ஸ்விட்சைப் போட்டதைப் போல இப்போதும் வரவில்லை எனக் குழம்புகிறார்கள். இந்த உடலுக்காகவா, இந்த வாசனைக்காகவா, இந்த சுபாவத்துக்காகவே இப்படிக் கிடந்து ஏங்கினோம் என அதிர்ச்சியாகிறார்கள். சிலர் இந்த அதிர்ச்சியையும் மீறி தாம்பத்யத்திலும் காதலை மீள மீள உருவாக்கி அதில் நிழலாறி வாழ்க்கையை சுவையாக்குகிறார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப சிரமம் என்பதால் பலர் தோற்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...