முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அய்யே!

நண்பர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் எழுதுவது, உரையாடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஆங்கிலம் எப்படி பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் ஒரு பொதுமொழியாக செயல்படும் சிறப்பைப் பற்றி பேசினார். நான் அவரிடம் இதனால் தான் நாம் இந்தியர்கள் இல்லை என்று சொன்னேன். விவாதம் இப்படிப் போயிற்று:

இந்தியர்களை பொதுவாக இணைப்பது நமது அரசியலமைப்பு சட்டம், நமது அரசியல் நிறுவனங்கள், பிரதமர், ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்ற குறிப்பான்கள். ஆனால் இவற்றைக் கடந்து யோசித்தால் நான் யோசிப்பதை அப்படியே ஒரு வடகிழக்கு மாநிலத்தவரால் புரிந்து கொள்ள முடியாது. என் மொழி அவருக்கும், அவர் மொழி எனக்கும் புரியாது. அப்படியே புரிந்து கொள்ள ஒரு பொது மொழி இருந்தாலும் இனக்குழு அடையாளம், சாதி, மாநிலத்துக்கு உரித்தான பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், அரசியல் என பல பொருந்தா விசயங்கள். நான் இதைச் சொன்னதும் நண்பர் ஒரு தென்னிந்தியரால் அஸ்ஸாமில் சென்று வாழ்ந்து அந்த ஊர்க் கலாச்சாரத்தையும், மொழியையும் புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அஸ்ஸாமியராகவே ஆகிட முடியும். இதுவே இந்தியர்களைப் பிணைக்கிற ஒரு இந்திய உணர்வு என்று சொன்னார்

நான் அவரிடம் பிரான்ஸிலோ ஜெர்மனியில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கூட அதைச் செய்யலாம், ஆனால் அது அவர்களை எளிதில் அந்த தேசிய இனத்தவராக்குவதில்லை என்றேன். இவர்கள் சில பத்தாண்டுகளில் தம்மை பாதி பிரஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க குடிமகனாக நினைக்க தொடங்குவர். அங்கு (பிறந்து) வளரும் அவருடைய பிள்ளைகள் தம்மை முழு ஐரோப்பியனாகவே நினைப்பர். ஆனால் இதை நேரடியாக அன்றி போலச்செய்வதன் வழியே அவர்கள் செய்வர் (mimicry) என பின்காலனிய கோட்பாட்டில் சொல்வார்கள். இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு இந்தியராக இருந்தபடி பிரஞ்சுக்காரராக உங்களை காட்டிக் கொள்ளும் போது, அதற்காக போலச் செய்யும் போது நீங்கள் பிரஞ்சு அடையாளத்தை ஒரு போதும் முழுமையாக அடைய முடியாத ஒரு முடிவற்ற தேடலின் பகுதியாகிறீர்கள். ஒவ்வொரு முறை பிரஞ்சுக்காரர் ஆகும் போது பிரஞ்சுக்காரர் அல்லாமலும் ஆகிறீர்கள். இதுவே இந்தியாவுக்குள்ளும் நிகழ்கிறது என்பது என் தரப்பு.


நீங்கள் வீட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசுகிறவராக இருந்து வெளியே கற்றுப் பேசுகிற, எழுதுகிற மொழி தமிழாக இருக்கையில் நீங்கள் தமிழராக இருத்தலை போலச்செய்தபடியே இருக்கிறீர்கள். அசல் அடையாளத்துக்கும் போலச்செய்யும் அடையாளத்துக்கும் இடையே ஒரு இடைவெளி தோன்றுகிறது. இது படைப்பூக்கமான, விடுதலையான ஒரு வெளியாக (மூன்றாவது வெளி - third space) இருக்கிறது என்கிறார் ஹோமி பாபா. எந்த சாராம்சத்துக்குள்ளும் ஆட்படாதவராக இத்தகையோர் இருக்கிறார்கள். (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இதுவே நிகழ்கிறது.) 


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மாற்றுமொழியாளர்கள் இப்படி அடையாளங்களில் இருந்து வழுக்கி சென்றபடி இருக்கும் மனிதர்களாக உள்ளார்கள். இவர்களை இந்தியத்துவம் என ஒன்று இணைப்பதெனில் ஏன் இந்த போராட்டம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? ஆக இந்த பிணைப்புச் சங்கிலி ஒரு கற்பிதம் மட்டுமே. நீங்கள் இந்தியரோ ஜெர்மானியரோ ஒரு மாற்று மொழி, மாற்றுக்கலாச்சாரத்துக்குள், மாற்று தேசியத்துக்குள் வரும் போது நீங்கள் பொருத்தமின்மையுடன் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்


இந்தியராக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. நான் அரசியலைப் பற்றி சொல்லவில்லை. நடைமுறையிலேயே பெரும் தடை, தாண்ட முடியாத தடை ஒன்று உள்ளது: எந்த இந்தியனாலும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் பேச முடியாது. 2011 சென்ஸஸ் படி இந்தியாவில் 122 மொழிகள் உள்ளன. அதிகாரபூர்வ மொழிகள் 22. ஆனால் இதுவும் பெயரளவுக்குத் தான். 19, 500 தாய்மொழிகள், வட்டார பேச்சுவழக்குகள் இந்தியாவில் உள்ளன. எந்த இந்தியனாலும் இத்தனை மொழிகளையும் கற்க முடியாது. அதனால் தான் எந்த இந்தியனாலும்இந்தியனாகமுடியாது.


தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை பொதுமொழியாக பயன்படுத்துவது போல, வட இந்தியர்கள் இந்தியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது மேற்பூச்சு தான். அசலான வாழ்க்கை பேச்சுமொழிகளிலே புழங்குகிறது. நான் குமரிமாவட்டத்தின் தக்கலையை சேர்ந்தவன். எங்களுடைய வட்டார வழக்கின் சில நுட்பங்கள் சென்னைக்காரருக்கோ, மதுரைக்காரருக்கோ, வேறு எந்த மாநிலத்தவர்களுக்கோ சுலபத்தில் விளங்காது. “அய்யேஎனும் சொல்லை நாங்கள் பல தொனிகளில் பயன்படுத்துவோம். ஒவ்வொரு போதும் அதன் பொருள் மாறிக் கொண்டே இருக்கும். இதுவே இப்படி என்றால் ஒரு .பியில் காரி போலி வட்டாரவழக்கில் பேசும், பொதுமொழியாக இந்தியைக் கொண்டுள்ள ஒருவரால் மூட்டைமுடிச்சுடன் தக்கலை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி பழம்பொரியும் டீயும் சாப்பிட்டபடி கவனித்தால் இந்தஅய்யேவின் முழு பரிமாணத்தை என்றாவது எட்ட முடியுமா? அய்யே!


நன்றி: உயிர்மை.காம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...